For Thala Thalapathy Fans



Saturday, December 31, 2011

Nanban and Vettai will not be out on the same day..::





 Trade sources say that Nanban and Vettai may not release on the same day after all. There is a buzz that Nanban will hit the screens on January 12th and Vettai on January 14th. This means there would be a one day gap which is very important in the current scenario to rake up the collections at the box office.
Both Nanban and Vettai are the most expected films of the year. Nanban is directed by Shankar and has Vijay, Jiiva, Srikanth, Ileana and Sathyaraj in important roles while Vettai is directed by Lingusamy and has Arya, Madhavan, Sameera Reddy and Amala Paul.

Friday, December 30, 2011

இலியானா நண்பன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வராத காரணம்!!...

நண்பன் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த உடுக்கிடை இலியானா ஆப்சென்ட். ரசிகர்கள் மட்டுமின்றி ஷங்கரும் அப்செட்.


கேடி படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா தன்னை‌க் கண்டு கொள்ளாததில் இலியானாவுக்கு ஏக கடுப்பு. தெலுங்கில் வேறு தலையில் வைத்து கொண்டாடினார்களா… தமிழ்ப் படம் என்றாலே அம்மணிக்கு வாமிட்டிங் சென்சேஷன் வந்துவிடும். நோ டேட்ஸ் என்றோ, விருப்பம் இல்லை என்றோ தமிழ்ப் படங்களை தவிர்த்துவிடுவார்.


மார்க்கெட் நாயுடுகள் தேசத்தில் இறங்குமுகமாக ஷங்க‌ரின் நண்பனில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனாலும் தமிழ்நாட்டு மேடையில் ஏற அம்மணிக்கு தயக்கம்தான். பலரும் நினைத்தது போல நண்ப‌ன் ஆடியோ விழாவுக்கு இலியானா வரவில்லை. அதற்கான காரணத்தை தனது பிஆர்ஓ மூலம் விளக்கியிருக்கிறார்.
ராத்தி‌ரி பகலாக நடித்ததில் இலியானாவுக்கு காய்ச்சலாம். அதனால்தான் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

காரணம் நம்புற மாதி‌ரி இல்லையேம்மா.

'தல' அஜீத்தின் பில்லா-2வை கைப்பற்ற போட்டியிடும் நிறுவனங்கள்!!!!!!!


அஜீத் நடிப்பில் வெளிவந்த 50வது படம் ‘மங்காத்தா’. வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருந்தார்.


தயாநிதி அழகிரி தயாரித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.அஜீத்துடன் அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து இருந்தனர். அஜீத்தின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றது.GOOGLE இணையத்தில் 2011 அதிகமுறை தேடிய இந்தியப் படங்கள் வரிசையில் 7வது இடத்தினை பிடித்தது ‘மங்காத்தா’.


 படத்தின் மொத்த கலெக்ஷன் என்ன என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடாமல் இருந்தது.இப்போது, சன்பிக்சர்ஸ் நிறுவனம் ‘மங்காத்தா’ படத்தின் மொத்தம் 130 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்துள்ளது. 


மங்காத்தா படத்தின் இந்த கலெக்ஷனால் தமிழ் திரையுலகினரும், அஜீத் ரசிகர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.’மங்காத்தா’ படத்தின் இந்த மெகா கலெக்ஷனால் ‘பில்லா 2′ படத்தின் உரிமையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறதாம் சன் டி.வி நிறுவனம்...

Thuppaki's my biggest film: Kajal Aggarwal.....//



The actress has just begun shooting for director A R Murugadoss's Thuppaki and she's super excited
Kajal Aggarwal thinks that her new Tamil signing is one of the best things that could happen to her. The actress has just begun work on Thuppaki, which is A R Murugadoss's latest film, which will have her starring opposite Ilayathalapathy Vijay."It is my biggest film. I have always wanted to work with Murugadoss sir and Vijay. Now I get to be part of their first film together. What more could I ask for," gushes Kajal, who knows that she's bagged what was one of the most sought-after project by most heroines.
And she believes that the role she's playing in this film is tailor-made for her. "While it is a typical commercial entertainer, my role is just like who I am in real life. She's full of masti and completely bindaas. This is a very powerful role too, like all of Murugadoss sir's heroine's characters," says the actress, who began shooting for Thuppaki on Friday in Mumbai.
"It was a very nice feeling to be on the sets of the film. Murugadoss sir and Vijay made me feel at ease," says Kajal, who will be back in Chennai later this month. "This time, I will be coming to finish my work on the film with Suriya and K V Anand," she signs off.

புதிதான கெட்டப்பிற்கு தன்னை மாற்றிக் கொண்ட விஜய் ....


துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொள்ளப் போகிறாராம் நடிகர் விஜய்.
எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு. விஜய்யும், கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர்.
வசீகரா படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார்.
காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் துப்பாக்கி படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய். இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்கு கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறார்.
படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குனருக்கு ஒத்துழைத்து வருகிறாராம். மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்

Wednesday, December 28, 2011

NANBAN MUSIC REVIEW...........


Nanban is the remake of the 2009 cult classic “3 Idiots” in Hindi directed by Rajkumar Hirani. The involvement of some of the biggest names in the industry like director Shankar, Vijay and Harris Jeyaraj combined with the original’s status as one of the biggest blockbusters in Bollywood history, has sent the expectation meter soaring. The audio released on 23rd December. Vijay’s movies always have good songs. Director Shankar and Harris are teaming up for the first time with the hero, and let’s see how this super-hit trio has fared.

Asku Laska...
  
Singers:
 Vijay Prakash, Chinmayi, Suvi
Lyrics:
 Madhan Karky

This is the much hyped 16 language love song that Madhan Karky has penned for Nanban. Turkish, Slovak, French, Spanish, Chinese, Icelandic, German, Hebrew, Lingala, Malay, Arabic, Meile, English, Telugu, Malayalam, Hindi and of course Tamil have been used. Some ‘Harris’ special words that are incomprehensible to the human mind are there in this song too. The tune for this duet perfectly suits Vijay Prakash’s casual style of singing and Chinmayi’s super sweet company.  On the whole, a foot tapping melody.


En Frienda Pola...  
Singers:
 Krish, Suchith Suresan
Lyrics:
 Vivega

The song begins with very catchy whistling and proceeds with some very poignant yet simple lyrics that emphasize the value of a good friend. The beats are similar to the sound of claps. The usage of the mouth organ also adds to the haunting effect of this song. The song ends with some guitar notes that have come to symbolize Harris. On the whole, a short and highly impactful song. Krish infuses the same feel that he showed for 'June Ponal'

Endhan Kann Munnae...
Singers:
 Aalap Raju
Lyrics:
 Madhan Karky

The tune is so typical of Harris. We have heard this tune in many movies before like Unnale Unnale and Vaaranam Aayiram, to name a few. It is like a short and sweet lullaby that might pick up once the visuals are out.

Heartiley Battery...  
Singers:
 Mukesh and Hemachandran
Lyrics:
 Na. Muthukumar

Nanban’s version of ‘All iz Well’. Very catchy with a constant beat and some funny noises that run in the background. The lyrics emphasize the value of living life in a positive and optimistic manner. Another chartbuster that will rock the screens for sure. Hemachandran and Mukesh have had a blast singing this. It is quite evident from the energy and positive vibes that this song generates.  This song has definitely lived up to the Hindi cult classic “All iz Well”.

Irukaana Illaiyaana Idupaanaa..  
Singers: Vijay Prakash, Javed Ali and Sunidhi Chauhan
Lyrics:
 Pa. Vijay

A song dedicated to Ileana’s svelte figure and waist-line. Vijay Prakash sounds so much like Hariharan in this song with his energy and enthusiasm. A sure shot super-duper hit song that will show the heroine in all her glory, the hero’s dancing prowess and director Shankar’s liking for grandeur and magnificent sets. It has some nice catchy lines in the form “Olli Jelly Belly Malli”. Another USP of this song is national ‘item number’ sensation Sunidhi Chauhan’s voice.

Nalla Nanban...
Singers:
 Ramakrishnan Murthy
Lyrics:
 Na. Muthukumar

Total sentimental sojourn from Harris and the lyricist. Given the original’s reputation for inciting tears in the emotionally charged scenes showing Sharman Joshi’s suicide attempt, this song will also go on the same lines. A nice classical touch all along, through the choice of the singer and the usage of mridangam. The piano and flute before the 2nd stanza are very pleasant on the ears.
Verdict: A winner all the way. Good variety all through the album from Harris Jeyaraj and ample scope for festivities in the theater when Nanban scorches screens for Pongal. Harris Jeyaraj continues his envious winning streak with another sure-shot.


Vijay goes suave for 'Thupaki' .!!!!!!!!!



AR Murugadoss directed 'Thupaki' is shooting at a brisk pace; thanks to the dedication and commitment of its lead star Vijay.Vijay will be portraying a sleek and suave avatar with short hair and a toned body for this film, sources say. This film, as the name suggests, is touted to be a suspense thriller. At the moment the film's team is shooting at various locations from Mumbai.
The 'Thupaki' director recently was lavish in his appreciation for his lead star. He revealed that Vijay is a pro who is available at the sets right from dawn to dusk. The film is being shot at real time locations. So the team is taking great care and punctuality in shooting, otherwise the shooting spot would be brimming with commuters.
Vijay has been reported to be shooting for this film non-stop. The actor recently attended the audio release of his film 'Nanban' that was held in Coimbatore. This film too has musical notes from Harris'. For this, Vijay took a break from shoot, that too after completing his portions for the day in the morning and then he flew down to attend the function, sources reveal.
'Thupaki' sees Vijay and Kajal Aggarwal teaming for the first time ever. The film has cinematography by ace cinematographer-director Santosh Sivan and is produced by Thanu

மும்பையில் துப்பாக்கி படப்பிடிப்பு ......


தமிழ் திரையுலகில் இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்திற்குப் பிறகு இளைய தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் துப்பாக்கி. இளைய தளபதியுடன் காஜல் அகர்வால் துப்பாக்கியில் இணைகிறார்.


ஏழாம் அறிவு வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
இளைய தளபதி தன்னுடைய தோற்றத்தை பெரும்பாலும் திரைப்படங்களில் மாற்ற மாட்டார்.

ஆனால் வசீகரா திரைப்படத்திற்குப் பிறகு நடித்த திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய் துப்பாக்கி திரைப்படத்திற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றியிருக்கிறார். மேலும் திரைப்படத்தை குறித்த நேரத்தில் முடித்து விட தன்னால் இயன்ற வேலைகளையும் செய்து வருகிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, நண்பன் இசைவெளியீட்டு விழாவிற்கு கோயம்புத்தூர் வந்தவர், விழா முடிந்ததும் அடுத்த விமானத்திலேயே மும்பை கிளம்பி விட்டார்.

Tuesday, December 27, 2011

புத்தாண்டை குடும்பத்துடன் சிங்கப்பூரில் கொண்டாடவுள்ளார் அஜீத் ..//


சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை தன் மனைவி, மகளுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார் அல்டிமேட் ஸ்டார் அஜீத்.
நடிகர் அஜீத் ‘பில்லா 2’ படப்பிடிப்பில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். படவேலைகள் பாதிக்கு மேல் முடிந்துள்ளன.
தற்போது புத்தாண்டு தினத்தையொட்டி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்கள் ஓய்வுக்காக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார் அஜீத்,  அவருடன் மனைவி ஷாலினியும் மகள் அனோஷ்காவும் சென்றுள்ளனர்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். மேலும் சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் குழந்தையை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் அஜீத்துக்கு இருந்தது.
குழந்தைக்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார் தல அஜீத்.

Sunday, December 25, 2011

நண்பன் திரைப்பட இறுதிக்காட்சியில் அனுயா..:::


தமிழ் திரையுலகில் இயக்குனர் ஷங்கரின் நண்பன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாயகி  அனுயா நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் திரைப்படத்தில் நாயகி இலியானாவுக்கு அக்காவாக அனுயா நடித்துள்ளார்.


இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று நாயகர்கள் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சியே அனுயாவை மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதாக படக்குழு கூறியுள்ளது.


இயக்குனர் ஷங்கர் சார் படத்தில் நடித்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் ஆகிய திரைப்படங்களில் நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருந்தது.
தற்போது நண்பனில் நடித்துள்ளேன்.


 தமிழில் சிறந்த கதையம்சம் மற்றும் தகுதியான கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களுக்காக காத்திருக்கிறேன் என்று அனுயா கூறியுள்ளார்.

NANBAN-Heartiley Battery Song Making Exclusive...


Saturday, December 24, 2011

CLEAR NANBAN TRAILER.....////////////

THALATHALAPATHIRULEZZZ.BLOGSPOT.COM

After Rajini, it is Vijay: Shankar....


The audio launch of Nanban took off at around 5 pm at the Hindustan College Grounds in Coimbatore yesterday. Vijay’s dad and director SA Chandrasekar released the audio which was received by Prabhu.
Vijay entertained the audiences by singing the Yedho Unnale song from the film. During this speech, he thanked director Shankar for giving him the opportunity to star in Nanban. Vijay added that he made several true friends during the making of Nanban and attributed this to the film’s title. The star was indicating that Jiiva, Srikanth, and others are his good friends and is happy to be associated with them. He was then honored with an enormous garland and a crown.
Shankar had an interesting episode to narrate about how he came to direct a remake. When Shankar was busy with Endhiran, the shooting was delayed one fine day. This earned him an opportunity to see 3 Idiots. As soon as he saw the film, Shankar said that he decided to go for a remake. That is how Nanban was born!
Praising Vijay, Shankar said that he is one actor after Rajinikanth to be present on the sets punctually. Shankar revealed that SJ Suryah lapped up the role in Nanban, something which he did not do even for Endhiran. That is how meaty his role is in Nanban, added Shankar.
Jiiva, Sathyaraj, Srikanth, SJ Suryah and others had good words to share about their co-stars.

வித்தியாசமாய் நடந்த நண்பன் ஆடியோ வெளியீட்டு விழா..//

ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடித்த ‘நண்பன் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா கோவை பீளமேடு இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று நடந்தது. 

3டி தொழில்நுட்ப முறையில் பாடல் சிடி வெளியிடப்பட்டது. இதற்காக விழா மேடையில் விசேஷமான திரை வடிவமைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் கண்ணாடி வழங்கப்பட்டது. அதை அணிந்து 3டி முறையில் விழாவை ரசித்தனர். முதல் சிடியை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட, நடிகர் பிரபு பெற்று கொண்டார். 

விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது: 
‘எந்திரன் படப்பிடிப்பு புனேயில் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒருநாள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இந்நிலையில், டென்ஷனாக இருந்தபோது 3 இடியட்ஸ் படத்திற்கு சென்றேன். சில நிமிடங்கள் என்னால் படத்தின் காட்சிகளை கவனிக்க முடியவில்லை. எந்திரன் படப்பிடிப்பு தொடர்பாக சிந்தனை அலை பாய்ந்தது. சிறிது நேரத்தில் படம் என்னை ஈர்த்தது. படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது. படம் முடிந்ததும் எனக்கு தெளிவு வந்தது. அந்த படத்தை தமிழில் இயக்க விரும்பினேன். 

இந்த படம் வெற்றி பெறும்போது, அதற்குரிய பெருமை 3 இடியட்ஸ் படத்தின் கதாசிரியர் ராஜ்குமார் ஹிரானியை சேரும். ரஜினிக்கு பிறகு நேரம் தவறாமையை கடைபிடிப்பவர் விஜய். நண்பன் படத்திற்கு பிறகு, விஜய்யை பிடிக்காமல் யாராவது இருந்தால் கூட அவர்களுக்கும் விஜய்யை மிகவும் பிடித்து போகும். எந்திரன் படத்தை மனதில் வைத்து கொண்டு நண்பன் படத்தை பார்க்க கூடாது. இப்படம் வேறு விதமான அனுபவம் தரும். ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விட்டு கதையை தேடுகிறார்கள். இதை விட்டு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கதையை வாங்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்றார். நடிகர் விஜய் பேசும்போது, ஷங்கரின் இயக்கத்தில் முதல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க முடியவில்லை. அவரை போன்ற ஒரு டைரக்டரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. அவர் நடித்து காட்டும் விதம் புதுமையானது. ஷங்கர், இந்தியாவின் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.நண்பன் படம் மூலம் நான், ஜீவா, ஸ்ரீகாந்த் நல்ல நண்பர்களாக மாறி விட்டோம். எங்கள் குடும்பத்தினரும் நட்பாக பழகி வருகிறார்கள் என்றார். நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, எஸ்.ஜே.சூர்யா, சத்யன், மனோபாலா, நடிகை அனுயா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடலசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nanban Trailerssssssss For Thalapathy Fanssss


Friday, December 23, 2011

Ajith inspires SRK!!!!


Ajith and Shah Rukh Khan have been friends ever since they worked together in Asoka which SRK also produced. Later both took up the same role with SRK remaking Amitabh Bachchan's Don and Ajith doing Rajinikanth's Billa. Currently SRK is all set to release Don - 2 while Ajith is working on a prequel to Billa.
SRK has always been an admirer of Ajith and he speaks most warmly of him. The Baadshah of Bollywood was apparently inspired by Ajith's look in Paramasivan (The matted locks pulled back and tied up) and has adapted it for Don - 2.

Mankatha’s total collections....



Sun Pictures has disclosed that the total collection for Mankatha is 130 crores. There were a lot of speculations about this film’s collection and its distributor Sun Pictures has put an end to all the speculations by announcing that the Ajith starrer has earned them 130 crores.
Mankatha had one of the biggest ever opening that the film industry has seen thus far. This film also earned its lead star Ajith a new title – Emperor of the Box Office. Mankatha was directed by Venkat Prabhu with Arjun, Trisha, Lakshmi Rai, Premji Amaren and others playing important roles.

Thursday, December 22, 2011

தல அஜீத்தை பற்றி ஒளிப்பதிவாளர் ராஜசேகர் புகழாரம்....


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தல அஜீத்தை பில்லா-2 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் புகழ்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தல அஜீத் குமாரின் பில்லா-2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துள்ளது. அங்கு பனிமலையில் பில்லா-2 திரைப்படத்தின் இறுதிக்காட்சி படமாக்கப்பட்டது.
இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர், அஜீத்துடன் நான் ரெட் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார்.
நடிப்பைப் பொருத்தவரை ரெட் திரைப்படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இத்திரைப்படத்தின் மொத்த காட்சிகளையும் இயக்குனர் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு முன்னோட்டக்காட்சிகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். பில்லா-2 திரைப்படம் 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பில்லா-2 திரைப்படம் ஏப்ரலில் வெளியாக உள்ளது!!!!!


பில்லா-2 திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என்று இயக்குனர் சக்ரி டோலெட்டி கூறியுள்ளார்.
அஜித் நடிக்கும் 'பில்லா 2' படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.
'மங்காத்தா' திரைப்படம் வெளியாகும் முன்பே, வெளியில் தெரியாத அளவுக்கு ஆரம்பித்தது 'பில்லா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு.
விசாகப்பட்டிணத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்து பல பகுதிகளில் விறுவிறுப்பான படப்பிடிப்பை நடத்தி தற்போது கிட்டதட்ட முடித்துள்ளனர்.
மொத்தம் 93 நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்துஜா குழுமத்தின் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான படங்கள் பொங்கலன்று வெளியாகும். ட்ரெயிலர் பிப்ரவரியில் வெளியாகும் என்று இந்துஜா குழுமத்தின் சுனில் கேத்ரபால் தெரிவித்துள்ளார்.
படத்தின் பின் தயாரிப்புப்பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும், ஏப்ரலில் படம் வெளியாகும் என்றும் இயக்குனர் சக்ரி டோலெட்டி கூறியுள்ளார்.
பில்லா-2 படத்துக்குப் பிறகு ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்திலும் அஜீத் நடிக்கவுள்ளார்.

Wednesday, December 21, 2011

யுவன் சங்கர் ராஜா இசையில் பில்லா-2


மங்காத்தா பட வெற்றியையடுத்து அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீண்டும் பில்லா-2 ல் இணைகிறார்கள்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடித்து வெளியான படம் மங்காத்தா.
அப்படம் மிகப்பெரிய வெற்றியைக்கண்டது எல்லா நாட்டவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியையடுத்து மீ்ண்டும் யுவன், அஜீத் இணையவுள்ள படம் பில்லா-2.
பில்லா-2 படத்தை பற்றி துணை இயக்குனர் சரத் மந்தேவ் கூறுகையில், யுவன் இசையில் வெளியாகும் இப்படம் 2012 ல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் ஈட்டித் தரும்.
ஆதலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடனும், ஆவலுடனும் காத்திருக்குமாறு  அன்புடன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பில்லா-1 படத்தை விட பில்லா-2 ல் தற்போதைய தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் இடம் பிடித்த மங்காத்தா திரைப்படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி...


உலக திரையுலகில் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் மங்காத்தா இடம் பிடித்துள்ளது.
தமிழ் திரையுலகில் அஜீத் நடிப்பில் வெளியான 50வது திரைப்படம் மங்காத்தா. அஜீத் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனையை மங்காத்தா முறியடித்துள்ளது.
இந்நிலையில் கூகுள்(GOOGLE) நிறுவனம் 2011 ஆண்டு தங்களது இணையத்தில் அதிகமுறை தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக தமிழ் படமான மங்காத்தா இந்த வரிசையில் 7 ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
அஜீத், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
மேலும் கூகுள்(GOOGLE) வெளியிட்டுள்ள வரிசையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் வெளியான பாடிகார்ட் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ஷாருக்கான் நடித்த ரா.ஒன் 2ம் இடத்திலும், ஹாலிவுட் திரைப்படம் ஹாரி பாட்டர் 3ம் இடத்திலும் இடம்பிடித்துள்ளன.
4.டெல்லி பெல்லி
5.இந்தி 'சிங்கம்'
6.ரெடி
7.மங்காத்தா
8.TRANSFORMERS-3
9.தோக்குடு ( தெலுங்கு)
10.Zindagi Na Milegi Dobara ( இந்தி)
இதையடுத்து GOOGLE இணையத்தின் தேடலில் மங்காத்தா சாதனை அஜீத் ரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sunday, December 18, 2011

தலை நிமிரும் இளைய தளபதி!!.;.

கதைகள் தேர்வில் ஏற்பட்ட தவறினால் தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சறுக்கல்களை தடுக்கும் வகையில் தற்போது முன்னணி இயக்குனர்களின் கதைகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சங்கருடன் ‘நண்பன்’, முருகதாஸுசுடன் ‘துப்பாக்கி’, கௌதம் மேனனுடன் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என வரிசையாக வரவுள்ள படங்கள் அனைத்தும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளாராம். ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் கௌதமுடன் கைகோர்க்கவிருந்த இசைப்புயல் முந்தைய ஒப்பந்தங்களால் இணைய முடியாமல் போய்விட்டது.
இதனால் கௌதம் மேனனின் அடுத்த படத்திற்கு இசையமைப்பதாக கூறிய ஏ.ஆர். ரகுமான் தற்போது விஜயின் படத்திற்காக தீம் பாடல் ஒன்றினையும் இசையமைத்து முடித்துவிட்டாராம். முன்னணி இயக்குனர்களுடன் இணைந்ததில் அடுத்தடுத்த படங்களில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் விஜயின் நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ஏ.ஆர். ரகுமான் இணைந்திருக்கிறார்.

பில்லா-2 படத்தில் இந்திபட நடிகர்...


பில்லா-2 படத்தில் இந்தி வில்லன் நடிகர் சுதன்சு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக வருகிறார்.
அஜித் நடிக்கும் பில்லா-2 படத்தை இயக்குனர் ஷக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் வித்யுத் ஜாம்வால் உடன் இன்னொரு வில்லன் நடிகரான சுதன்சு பாண்டே இணைகிறார்.
மாடலிங் துறையில் இருந்து திரையுலகில் நடிக்க நுழைந்தார் சுதன்சு. அஜய் நடித்துள்ள இந்தி 'சிங்கம்' படத்தில் இவர் நடித்துள்ளார்.
இயக்குனர் ஷக்ரி டோலட்டி பில்லா படத்தில் இவருக்கு அதிரடி வேடம் கொடுத்துள்ளார். இந்தப்படத்துக்கு பிறகு கொலிவுட்டில் சுதன்சுக்கு நிறைய வாய்ப்புகள் குவியும் என்கிறது பட வட்டாரம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜீத் நடிக்கிறார்...


தமிழ் திரையுலகில் தல அஜீத் குமார், சிறுத்தை இயக்குனர் சிவாவோடு இணைய உள்ளார்.
தமிழ் திரையுலகில் தல அஜீத் குமார் பில்லா-2 திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதையடுத்து கார்த்தி நடித்து வெற்றி பெற்ற சிறுத்தை திரைப்படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை விஜயா புரோக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.


அஜீத்தை இயக்க இருப்பது குறித்து சிவா, சிறுத்தை திரைப்படத்தின் வரவேற்பை அடுத்து அஜீத்துடன் இணைந்து இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன்.


அஜீத் சாரிடம் ஒரு கதையின் சுருக்கத்தை மட்டும் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், தற்போது அக்கதைக்கு திரைக்கதை எழுதி வருகிறேன்.


வருகிற 2012 சனவரி மாதம் அஜீத்திடம் முழுக்கதையும் கூறி விடுவேன். நீங்கள் அஜீத்தை ஒரு புதுமையான வேடத்தில் பார்ப்பது உறுதி என்று கூறியுள்ளார்.

ஷங்கரின் நண்பன் இசை வெளியீட்டு விழா: ஹாரீஸ் ஜெயராஜ் தகவல்:::


தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 23 ம் திகதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது.
பாலிவுட்டில் திரையிடப்பட்டு வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தை, தமிழில் நண்பன் என்ற பெயரில் பிரபலமான இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ளார்.
இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடிக்க ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நண்பனின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இசை வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழ் நாட்டின் முக்கிய வணிக நகரான கோயம்புத்தூரில் வருகிற 23 ம் திகதி நண்பனின் பாடல்களை வெளியிடவுள்ளார்கள்.
இது குறித்து நண்பன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டிவிட்டரில், கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் வருகிற 23ம் திகதி நடைபெற இருக்கும் HARRIS ON THE EDGE நிகழ்ச்சியில் நண்பனின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது 2 பாடல்களை பாட இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Saturday, December 17, 2011

யோஹன் அத்தியாயம் ஒன்று: கௌதம் மேனன் புகழாரம்...


தமிழ் திரையுலகில், யோஹன் அத்தியாம் ஒன்று திரைப்படம் சர்வதேச திரைப்படம் என்று இயக்குனர் கௌதம் மேனன் புகழ்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர் கௌதம் மேனன் வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தற்பொழுது, இளையதளபதி விஜய்யுடன் இணைந்து யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இத்திரைப்படத்தை போட்டான் கதாஸ் நிறுவனம்(Photon Katas Company) மற்றும் ஈராஸ் நிறுவனம்(Iras company) தயாரிக்க உள்ளது. யோஹன் அத்தியாயம் ஒன்றிற்கான படப்பிடிப்பு எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொடங்கப்பட உள்ளது.
இத்திரைப்படத்தை பற்றி சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன், யோஹன் அத்தியாயம் ஒன்று சர்வதேச திரைப்படமாகும். வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்குப்பிறகு நான் இயக்க உள்ள ஆக்ஷன் திரைப்படமாகும்.
யோஹன் அத்தியாயம் ஒன்றிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தீம் பாடலை(Theme song) உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம் மேனனுடன் இணைந்து யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இயக்குனர் கெளதமிற்கும் எனக்கும் இத்திரைப்படம் புதிய களமாக அமையும் என்றும் திரையுலக ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடிய, வித்தியாசமான பாடல்களுடன் வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 13, 2011

அஜீத் நடிக்கும் பில்லா-2 திரைப்படத்திற்கு புதிய தொழில்நுட்பம் அறிமுகம்:::::


தமிழ் திரையுலகில் தல அஜீத் குமார் நடிக்கும் பில்லா-2 திரைப்படத்திற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் மங்காத்தா வெற்றிக்குப்பிறகு தல அஜித் பில்லா-2 திரைப்படத்தில் முழுக்கவனமாக நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை ஷக்ரி டோலட்டி இயக்க பில்லா-2 திரைப்படத்திற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தொழில்நுட்ப அளவில் புதுமுயற்சியில் இறங்கியுள்ளார்.
தொழில்நுட்பம் வாயிலாக பில்லா-2 திரைப்படத்திற்க்காக ரெட் எபிக்(Red Epic Camera) என்ற காணொளி பதிவுக் கருவியை பயன்படுத்தி, 5 கே ரெசல்யுஷனில்(5k Resolution) படமாக்கியுள்ளோம். இதன் மூலம் படப்பிடிப்பு நடக்கும்போதே திரைப்படத்தின் தரம் என்ன என்பதை பார்த்துவிடலாம்.
இந்த காணொளி பதிவுக்கருவிக்கு ஒளியூட்டுவதற்கு முதல் இரண்டு நாட்கள் ரொம்ப சிரமப்பட்டோம். ஆனால் தொடர்ந்து இதே வேலையைப் செய்ததால் பின்பு பழகிவிட்டது. தமிழில் 5 கே ரெசல்யுஷனில்(5k Resolution) படமாக்கப்படுவது இதுவே முதல் முறை என்று ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் கூறியுள்ளார்.

அஜித்தின் முதல் படத்தின் சம்பளம் -390 ருபாய்- சுவாரஸ்யமான தகவல்கள்!!!!!

அஜித்குமார் தமிழில் நடிகராக அறிமுகமான முதல் படம் ’அமராவதி”.

இந்த படத்தை தயாரித்தவர் சோழ பொன்னுரங்கம்.இந்த படத்தை இயக்கியவர் செல்வா.இந்த படத்தில் நடித்ததற்கு அஜித் வாங்கிய சம்பளம் 390 ரூபாய்.ஆனால் அவருடைய படத்திலே அவர் மிக பெரிய பெயரை அந்தபடத்தின் பாடல்கள் பெற்று தந்தன.


தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே, மற்றும் புத்தம் புது மலரே போன்ற பாடல்கள் பிரபலமாக இருந்தன. இந்த படத்திற்கு இசை அமைத்தவர் பால பாரதி.

இந்த படம் ஜீன் மாதம் 4 ஆம் திகதி, 1993ம் வருடம் வெளிவந்தது.
தெலுங்கில் பிரேம புஸ்தகம் படத்தை பார்த்து இந்த படத்தில் ஒரு சின்ன

ரோல் கொடுக்க நினைத்த இயக்குனர், அவரின் திறமையையும்
ஆர்வத்தையும் பார்த்து படத்தின் நாயகன் ஆக்கினார். இது அவருடைய
திறமைக்கு கிடைத்த பரிசு.

யாருடைய துணையும் இல்லாமல் 390 ரூபாய் சம்பளத்துக்கு வந்த அஜித்குமார் அவர்களுக்கு ‘அவர் தனி மனிதன் இல்லை அவருக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு” என்று சொல்லிக் கொள்ளும் அவருடைய ரசிகர்கள் கோடான கோடி

நிச்சயமாக அஜித்துக்கு தேசிய விருது கிடைக்கும்!!

தில், தூள், கில்லி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஒஸ்தி இயக்குனர் தரணியின் அடுத்த படம் 'வீர வாஞ்சி' என தெரிவிக்கப்படுகிறது.

தரணியின் இயக்கத்தில் வெளியான ஒஸ்தி எதிர்மறையான பல விமர்சனங்களை சந்தித்தாலும் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தோசத்துடன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

மசாலா படங்களும், ரீமேக் படங்களாகவும் இயக்கிக்கொண்டிருந்த தரணி இம்முறை தேசிய விருது கிடைக்குமளவுக்கான ஒரு சரித்திரப்படத்தை இயக்கவுள்ளாராம். இக்கதை தமிழர்களை தலைநிமிரச்செய்த ஒரு வீரனின் கதை.


தனது அடுத்த படமான வீர வாஞ்சி படத்தின் முக்கிய கதாபாத்திரமான வீரத் தமிழன் வாஞ்சிநாதன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்கிறாராம் தரணி.
செய்தி நியூயாழ்.கொம்

மேலும் அசோக்கா எனும் சரித்திரப்படத்தில் தல நடித்திருப்பதால் இப்படத்திற்கு அஜித் சரியாகப் பொருந்துவார் என நம்புகிறாராம் தரணி. அத்துடன் இப்படத்தில் அஜித் நடித்தால் நிச்சயமாக அஜித்துக்கு தேசிய விருது கிடைக்கும் என ஒஸ்தியாக கூறியுள்ளாராம் இயக்குனர் தரணி.

அண்மைக்காலமாக அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பாக வெளிவரும் வதந்தியாக இல்லாமல் உறுதியாகுமா இந்த தேசிய விருதுக்கான கனவுப்படம்... 

Monday, December 12, 2011

மீண்டும் ஆரம்பிக்கப்போகும் அஜித் - புதிய பரபரப்புத் தகவல்கள்!!!!!


அடுத்த ஆண்டிற்கான பார்முலா ஒன் கார் பந்தய போட்டியை அடுத்தாண்டு அக்டோபர் 28 ம் தேதி இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுடெல்லியில் நடைபெற்ற வேர்ல்டு மோட்டார் ஸ்போர்ட் கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜூன்டாட் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி புதுடில்லி அருகே உள்ள நொய்டாவில் கிரான்ட் பரிக்ஸ் கார் பந்தய போட்டி நடைபெற்றது.முதன்முறையாக இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

இதனையடுத்து இந்தாண்டும் இப்போட்டியை இந்தியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 20 சுற்றுக்களை கொண்ட இந்தப் போட்டியின் 17வது சுற்று இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.

வரும் ஆண்டிற்கான முதல் போட்டி மார்ச் மாதம் 18ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் துவங்குகிறது.சீனா ஸ்பெயின், பக்ரைன் ,கனடா ,இங்கிலாந்து, ஜெர்மனி,ஹங்கேரி பெல்ஜியம் ,சிங்கப்பூர் ஐப்பான் ,கொரியா ,பிரேசில் உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் நரேன் கார்த்திகேயன் மற்றும் நம்ம ‘தல’ அஜித்குமார் மறுபடியும் களம் காண வாய்ப்பு உள்ளதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் சொல்லி வருகின்றன.

அக்டோபர் 28-2012 ல் அஜித்குமார் களம் காண வாழ்த்துகிறோம்.
தொடர்ந்து 20 சுற்றுக்களாகவும் இறுதிப்போட்டி நவம்பர் மாதம் 25ம் தேதி வரை பிரேசிலிலும் நடைபெற உள்ளது.

Sunday, December 11, 2011

இளையதளபதி விஜய் நடத்தும் "நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர் "...

விஜய் டிவியில் நடக்க இருக்கும் 'நீங்களும் ஆகலாம் 
கோடீஸ்வரர் ' என்ற நிகழ்ச்சியை இளையதளபதி விஜய் நடத்த இருக்கிறார் என்ற தகவல் பல மாதங்களிற்கு முன் வந்த தகவல்.

 ஆனால் நேற்று முதல் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்ற விளம்பரத்தை விஜய் டிவி போட்டு வருகின்றது ஆகவே தளபதி ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து ரசிகர்களும் பொதுமக்களும் விஜய்யை சின்னத் திரையில் பார்க்க ஆவலாக இருக்கின்றோம்

மீண்டும் பாடகராகிறார் இளைய தளபதி விஜய்!!!!

இளைய விஜய் இயக்குனர் விஜயின் படத்தில் நடிக்க உள்ளார். விஜய் 
நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கும் 


ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படம் தொடங்க 
உள்ளதை தனது டுவிட்டரில் தெரிவித்தார். இப்படதிற்குரிய முற்பணத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி விட்டதாகவும் அறிவித்தார்.

விஜய், ஜி.வி.பிரகாஷ்குமார் இணைவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் என ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியுள்ளார். எனவே மீண்டும் விஜயின் குரலில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். விஜய் ஏற்கனவே பாடிய பாடல்கள் ஹிட் அடைந்தது 



என்பது குறிபிடதக்கதாகும்.

நண்பன் படம் முதலில் கிருஸ்மஸ் வெளியீடாக சீனாவில் ரிலீஸ்!..

நவீனக் கல்விமுறையை பகடி செய்யும் 3 இடியட்ஸ் படம் பாலிவுட்டில் 200 கோடிகளை வசூல் செய்தது.
அமீர்கான், கரீனா கபூர், மாதவன், ஷர்மா ஜோஷி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப்படத்தின் படத்தின் மூலம் அமீர்கானை தரமான சினிமாவின் காதலர் என்று மீடியா கொண்டாடியது.

இதனால் தனது சொந்த தயாரிப்பில் தொடர்ந்து தரமான படங்களை எடுத்து வருகிறார் அமீர்கான். இவரோடு இந்தப் படத்தில் நடித்த மாதவன், ஷர்மா ஜோஷி ஆகியோருக்கும் மார்கெட் நிலவரம் உயர்ந்தது.
3 இடியட்ஸின் அசாதாரண வெற்றியும், அதன் கதையமைப்பும் பிரமாண்டமாக மட்டுமே படமெடுத்து பழக்கப்பட்ட இயக்குனர் ஷங்கரை கவர அவரே இந்தபடத்தை தமிழில் இயக்கும் பொறுப்பை செய்து முடித்திருகிறார்.
மாஸ் ஹீரோவான விஜய், 3 இடியட்ஸ் ரீமேக் ஒரு மல்டி ஸ்டாரர் என்று தெரிந்தும் அதில் நடித்திருகிறார். நண்பன் என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் 3 இடியட்ஸின் தமிழ்பதிப்பின் இசை டிசம்பர் இறுதியிலும், படம் பொங்கலுக்கும் வெளியாக இருகிறது.
தமிழைத் தொடர்ந்து இந்தப்படம் கடல்கடந்து பயணமாக இருகிறது. முதலில் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கிருஸ்மஸ் வெளியீடாக சீனாவில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ஹாங்காங்கில் 3 இடியட்ஸ் டப் செய்யப்படாமல் ஆங்கில சப் டைட்டில்களுக்டன் வெளியாகி வசூலை அள்ளியதால் சீனாவில் இருந்து நல்ல விலைக்கு வாங்கி விட்டார்களாம் இந்தப் படத்தை!
சீனாவில் படம் வெளியாகிறது என்று தெரிந்ததும், ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ உட்பட மூன்று பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் படத்தின் ஆங்கில ரீமேக் உரிமையை பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.
ஹாலிவுட் படங்களை இந்தியர்கள் காப்பியடித்த காலம் போய் தற்போது இந்தியப் படங்களின் ஆங்கில ரீமேக் உரிமையை பெற ஹாலிவுட் முன் வந்திருப்பது அதிரடி மாற்றம்தான்!

Friday, December 9, 2011

மங்காத்தாவின் 100வது நாளில் ஒஸ்தி வெளியிடப்பட்டது...


தல' அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, 'நண்பன்' படத்தில் நடிக்க மறுத்தார்.
விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு கிளப்பினார்.
ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், 'ஒஸ்தி' படத்தின் இசையை கவிஞர் வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார்.
தற்போது அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான காரியத்தைச் செய்திருக்கிறார் சிம்பு. அஜித்தின் - 50-வது படமான 'மங்காத்தா' படம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் திகதி வெளியானது.
டிசம்பர் 8-ஆம் திகதியாகிய நேற்று சிம்புவின் 'ஒஸ்தி' உலகம் முழுவதும் வெளியானது. தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை அலங்கரிக்கும் ஒரு அதிரடி விளம்பரம்தான் சிம்புவின் 'தல' விசுவாசத்தைக் காட்டுகிறது.
'மங்காத்தா' நூறாவது நாள் கொண்டாடும் நாளில்தான் தனது 'ஒஸ்தி' வெளியாக வேண்டும் என்று சொன்னாராம் சிம்பு. 'மங்காத்தா' வெளியாகி நூறு நாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இதை குறிப்பிடும் விதமாக 'ஒஸ்தி' விளம்பரம் டிசைன் செய்யப்படுள்ளது. அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த விளம்பர யுத்தியை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

கமர்ஷியல் ரூட்டை விட மாட்டேன் – விஜய் பேட்டி....


ThalaThalapathi
கமர்ஷியல் ஹிட்ஸ் என்பது விஜய்க்கு அதிகம் பழக்கப்பட்டவைதான். ஆனால் ‘வேலாயுதத்தின்’ வெற்றி விஜய்யை ரொம்பவே உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு மாலைப் பொழுதில் விஜய்யை சந்தித்த போது கலகலப்பாக பேச ஆரம்பிக்கிறார்…..
‘வேலாயுதம்’ மூலமாக இப்போ சூப்பர் ஹீரோவாகிட்டீங்களே….?
‘ஆஸாத்’ படம் வெளியான நேரத்திலேயே அந்த லைன் எனக்கு பிடிச்சுப் போச்சு. எனக்கு இப்ப இருக்கிற ஆக்ஷன் இமேஜ் அப்போ இல்ல. அதனால எதிர்காலத்துல பண்ணலாம்னு ஆசைப்பட்டேன்.
உடனே அப்பா அந்தக் கதைக்கான உரிமையை வாங்கி வைச்சிட்டாங்க. அதை அப்படியே நான் மறந்துட்டேன். இப்போ இயக்குநர் ராஜாவோடு சேர்ந்து இந்த லைனை படம் பண்ணலாம்னு யோசிச்சப்பதான், அந்த ‘ஆஸாத்’ கதை உரிமை நம்மகிட்ட இருக்குன்னு அப்பா சொன்னாங்க.
மூலக்கதையை மட்டும் எடுத்துட்டு இன்னிக்கு இருக்கிற ட்ரெண்ட்டுக்கேத்த மாதிரி படம் பண்ணியிருக்கோம். மக்களோட அங்கீகாரம் கிடைச்சதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தும் ‘வேலாயுதத்தை’ ரிலீஸ் பண்ண திரையரங்குகள் கிடைக்காம கஷ்டப்பட்டதாக ஒரு பேச்சு இருந்துச்சே, அது உண்மையா?
சினிமாவுல அவ்வப்போது சில பிரச்சினைகள் வரும். அதை உடனடியாக தீர்த்து வைப்பாங்க. இப்போ புதுசா ஒரு பிரச்சினை முளைச்சிருக்கு. முன்னாடியெல்லாம் பண்டிகைகளுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள், அறிமுக நட்சத்திரங்களோட படங்கள்னு எல்லாவிதமான படங்களும் வெளியாகும்.
வந்த படங்கள்ல எது நல்லா இருக்குமோ அது சூப்பரா ஓடும். இப்ப திடீர்னு அதுக்கான வாய்ப்புகள் இல்லையோன்னு தோணுது.
பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது இவரோட படம்தான் வரணும் அவரோட படங்கள் வரக்கூடாதுன்னு ஒரு சில வேலைகள் நடக்குது. முன்பு இருந்த ஆரோக்கியமான சூழ்நிலை இப்ப இல்லையோன்னு நினைக்கத் தூண்டுது.
இது மாறணும். பண்டிகை நாட்கள் மட்டுமில்ல மற்ற எல்லா நாட்களிலும் எல்லோருடைய படங்களும் வெளியாகி கொண்டாட்டமாக இருக்கணும். நிச்சயம் அந்த மாற்றம் வரும். இதை எனக்காக மட்டும் சொல்லல. மற்ற எல்லோருக்காகவும் சேர்த்துதான் சொல்றேன்.
உங்களோட கமர்ஷியல் ரூட்ல இப்படியொரு சமூகத்துக்கான மெஸேஜையும் இனிமேல் சேர்த்துக் கொடுக்கிற எண்ணமிருக்கா?
எல்லாம் தானாக அமையறதுதாண்ணா. நாம் ப்ளான் பண்ணினாகூட இப்படி சில சமயம் அமையாது. நேரம், அமையுற இயக்குநர், கதை இதையெல்லாம் பொறுத்து அமையறதுதான்.
உங்களோட படங்கள் ஒரே மாதிரியான ஸ்டைலில்தான் இருக்கும்னு ஒரே கமெண்ட்டாக இருக்கே?
புதுசு புதுசா முயற்சி பண்ணி, இந்த கமர்ஷியல் ரூட்டை விட்டு விலகி வந்து படம் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஆஃப் பீட் படங்கள் பண்றதுலயும் எனக்கு விருப்பமில்ல.
நான் கமர்ஷியல் படங்கள்ல நடிச்சாலும், ஆஃப் பீட் படங்களை ரசிச்சுப் பார்ப்பேன். கமர்ஷியல் ப்ரேம் வொர்க்கை விட்டு விலகி படம் பண்ண மாட்டேன். ஆனால் அந்த ப்ரேமுக்குள்ளே என்னென்ன வித்தியாசங்கள் பண்ண முடியுமோ அதையெல்லாம் முயற்சி பண்ணுவேன்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது எழுந்த கேள்விக்கு ‘எனக்கு சிக்ஸ் பேக் இல்ல. சிங்கிள் பேக்’தான்னு சொன்னீங்களே. படம் ஜெயிக்க சிக்ஸ் பேக் வேண்டாம் சிங்கிள் பேக்கே போதும்னு நினைக்கிறீங்களா?
ஒரு படம் ஜெயிக்கணும்னா ஸ்டோரி பேக் நல்லா இருந்தா போதும். படம் பட்டையைக் கிளப்பும்.
‘நண்பன்’ அனுபவம் எப்படியிருக்கு?
ஷங்கர் ரொம்ப பெர்ஃபெக்ட். நல்ல மனுஷர். இவ்வளவு நாள் இவரோட சேர்ந்து படம் பண்ண முடியாம போச்சேன்னு இப்ப தோணுது.
தலயின் ‘மங்காத்தா’வுல உங்க படக் காட்சி இருந்துச்சு. இப்ப ‘இளையதளபதி’ படத்துல ‘தல’ படப் பாடல் கேட்குது. என்னங்கண்ணா நடக்குது?
‘மங்காத்தா’வுல என் படத்தோட காட்சியைக் காட்டினதால, என் படத்துல ‘மங்காத்தா’ பாடலை வைக்கல. ஒரு சீன் பின்னணியில ரேடியோவுல பாட்டு கேட்கிற மாதிரி இருந்தா, அந்தப் பாடலை படத்தோட எஃபெக்ட்ஸ் நடக்கும்போதுதான் மிக்ஸ் பண்ணுவாங்க.
அந்த நேரத்துல உதவி இயக்குநர்கள் என்கிட்ட வந்து, ‘அண்ணே அந்த சீன் பின்னணியில் ரேடியோ பாட்டு கேட்கும். அதுக்கு நாம ‘மங்காத்தா’ படத்தோட பாட்டை யூஸ் பண்ணலாமா?’னு கேட்டாங்க. ‘இதை நீங்க என்கிட்ட கேட்கவே தேவை இல்ல. தாராளமா யூஸ் பண்ணுங்க. நல்ல விஷயம். ஆரோக்கியமாக இருக்கும்’னு சொன்னேன்.