தமிழ் திரையுலகில் தல அஜீத் குமாரின் பில்லா-2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துள்ளது. அங்கு பனிமலையில் பில்லா-2 திரைப்படத்தின் இறுதிக்காட்சி படமாக்கப்பட்டது.
இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர், அஜீத்துடன் நான் ரெட் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார்.
நடிப்பைப் பொருத்தவரை ரெட் திரைப்படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இத்திரைப்படத்தின் மொத்த காட்சிகளையும் இயக்குனர் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு முன்னோட்டக்காட்சிகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். பில்லா-2 திரைப்படம் 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
No comments:
Post a Comment