For Thala Thalapathy Fans



Friday, December 30, 2011

இலியானா நண்பன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வராத காரணம்!!...

நண்பன் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த உடுக்கிடை இலியானா ஆப்சென்ட். ரசிகர்கள் மட்டுமின்றி ஷங்கரும் அப்செட்.


கேடி படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா தன்னை‌க் கண்டு கொள்ளாததில் இலியானாவுக்கு ஏக கடுப்பு. தெலுங்கில் வேறு தலையில் வைத்து கொண்டாடினார்களா… தமிழ்ப் படம் என்றாலே அம்மணிக்கு வாமிட்டிங் சென்சேஷன் வந்துவிடும். நோ டேட்ஸ் என்றோ, விருப்பம் இல்லை என்றோ தமிழ்ப் படங்களை தவிர்த்துவிடுவார்.


மார்க்கெட் நாயுடுகள் தேசத்தில் இறங்குமுகமாக ஷங்க‌ரின் நண்பனில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனாலும் தமிழ்நாட்டு மேடையில் ஏற அம்மணிக்கு தயக்கம்தான். பலரும் நினைத்தது போல நண்ப‌ன் ஆடியோ விழாவுக்கு இலியானா வரவில்லை. அதற்கான காரணத்தை தனது பிஆர்ஓ மூலம் விளக்கியிருக்கிறார்.
ராத்தி‌ரி பகலாக நடித்ததில் இலியானாவுக்கு காய்ச்சலாம். அதனால்தான் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

காரணம் நம்புற மாதி‌ரி இல்லையேம்மா.

No comments:

Post a Comment