தமிழ் திரையுலகில் மங்காத்தா வெற்றிக்குப்பிறகு தல அஜித் பில்லா-2 திரைப்படத்தில் முழுக்கவனமாக நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை ஷக்ரி டோலட்டி இயக்க பில்லா-2 திரைப்படத்திற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தொழில்நுட்ப அளவில் புதுமுயற்சியில் இறங்கியுள்ளார்.
தொழில்நுட்பம் வாயிலாக பில்லா-2 திரைப்படத்திற்க்காக ரெட் எபிக்(Red Epic Camera) என்ற காணொளி பதிவுக் கருவியை பயன்படுத்தி, 5 கே ரெசல்யுஷனில்(5k Resolution) படமாக்கியுள்ளோம். இதன் மூலம் படப்பிடிப்பு நடக்கும்போதே திரைப்படத்தின் தரம் என்ன என்பதை பார்த்துவிடலாம்.
இந்த காணொளி பதிவுக்கருவிக்கு ஒளியூட்டுவதற்கு முதல் இரண்டு நாட்கள் ரொம்ப சிரமப்பட்டோம். ஆனால் தொடர்ந்து இதே வேலையைப் செய்ததால் பின்பு பழகிவிட்டது. தமிழில் 5 கே ரெசல்யுஷனில்(5k Resolution) படமாக்கப்படுவது இதுவே முதல் முறை என்று ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் கூறியுள்ளார். |
No comments:
Post a Comment