For Thala Thalapathy Fans



Friday, December 30, 2011

புதிதான கெட்டப்பிற்கு தன்னை மாற்றிக் கொண்ட விஜய் ....


துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொள்ளப் போகிறாராம் நடிகர் விஜய்.
எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு. விஜய்யும், கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர்.
வசீகரா படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார்.
காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் துப்பாக்கி படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய். இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்கு கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறார்.
படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குனருக்கு ஒத்துழைத்து வருகிறாராம். மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்

No comments:

Post a Comment