For Thala Thalapathy Fans



Wednesday, December 21, 2011

கூகுளில் இடம் பிடித்த மங்காத்தா திரைப்படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி...


உலக திரையுலகில் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் மங்காத்தா இடம் பிடித்துள்ளது.
தமிழ் திரையுலகில் அஜீத் நடிப்பில் வெளியான 50வது திரைப்படம் மங்காத்தா. அஜீத் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனையை மங்காத்தா முறியடித்துள்ளது.
இந்நிலையில் கூகுள்(GOOGLE) நிறுவனம் 2011 ஆண்டு தங்களது இணையத்தில் அதிகமுறை தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக தமிழ் படமான மங்காத்தா இந்த வரிசையில் 7 ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
அஜீத், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
மேலும் கூகுள்(GOOGLE) வெளியிட்டுள்ள வரிசையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் வெளியான பாடிகார்ட் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ஷாருக்கான் நடித்த ரா.ஒன் 2ம் இடத்திலும், ஹாலிவுட் திரைப்படம் ஹாரி பாட்டர் 3ம் இடத்திலும் இடம்பிடித்துள்ளன.
4.டெல்லி பெல்லி
5.இந்தி 'சிங்கம்'
6.ரெடி
7.மங்காத்தா
8.TRANSFORMERS-3
9.தோக்குடு ( தெலுங்கு)
10.Zindagi Na Milegi Dobara ( இந்தி)
இதையடுத்து GOOGLE இணையத்தின் தேடலில் மங்காத்தா சாதனை அஜீத் ரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment