For Thala Thalapathy Fans



Thursday, December 22, 2011

பில்லா-2 திரைப்படம் ஏப்ரலில் வெளியாக உள்ளது!!!!!


பில்லா-2 திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என்று இயக்குனர் சக்ரி டோலெட்டி கூறியுள்ளார்.
அஜித் நடிக்கும் 'பில்லா 2' படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.
'மங்காத்தா' திரைப்படம் வெளியாகும் முன்பே, வெளியில் தெரியாத அளவுக்கு ஆரம்பித்தது 'பில்லா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு.
விசாகப்பட்டிணத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்து பல பகுதிகளில் விறுவிறுப்பான படப்பிடிப்பை நடத்தி தற்போது கிட்டதட்ட முடித்துள்ளனர்.
மொத்தம் 93 நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்துஜா குழுமத்தின் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான படங்கள் பொங்கலன்று வெளியாகும். ட்ரெயிலர் பிப்ரவரியில் வெளியாகும் என்று இந்துஜா குழுமத்தின் சுனில் கேத்ரபால் தெரிவித்துள்ளார்.
படத்தின் பின் தயாரிப்புப்பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும், ஏப்ரலில் படம் வெளியாகும் என்றும் இயக்குனர் சக்ரி டோலெட்டி கூறியுள்ளார்.
பில்லா-2 படத்துக்குப் பிறகு ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்திலும் அஜீத் நடிக்கவுள்ளார்.

No comments:

Post a Comment