அடுத்த ஆண்டிற்கான பார்முலா ஒன் கார் பந்தய போட்டியை அடுத்தாண்டு அக்டோபர் 28 ம் தேதி இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுடெல்லியில் நடைபெற்ற வேர்ல்டு மோட்டார் ஸ்போர்ட் கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜூன்டாட் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி புதுடில்லி அருகே உள்ள நொய்டாவில் கிரான்ட் பரிக்ஸ் கார் பந்தய போட்டி நடைபெற்றது.முதன்முறையாக இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இதனையடுத்து இந்தாண்டும் இப்போட்டியை இந்தியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 20 சுற்றுக்களை கொண்ட இந்தப் போட்டியின் 17வது சுற்று இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
வரும் ஆண்டிற்கான முதல் போட்டி மார்ச் மாதம் 18ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் துவங்குகிறது.சீனா ஸ்பெயின், பக்ரைன் ,கனடா ,இங்கிலாந்து, ஜெர்மனி,ஹங்கேரி பெல்ஜியம் ,சிங்கப்பூர் ஐப்பான் ,கொரியா ,பிரேசில் உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் நரேன் கார்த்திகேயன் மற்றும் நம்ம ‘தல’ அஜித்குமார் மறுபடியும் களம் காண வாய்ப்பு உள்ளதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் சொல்லி வருகின்றன.
அக்டோபர் 28-2012 ல் அஜித்குமார் களம் காண வாழ்த்துகிறோம்.
தொடர்ந்து 20 சுற்றுக்களாகவும் இறுதிப்போட்டி நவம்பர் மாதம் 25ம் தேதி வரை பிரேசிலிலும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment