For Thala Thalapathy Fans



Tuesday, December 27, 2011

புத்தாண்டை குடும்பத்துடன் சிங்கப்பூரில் கொண்டாடவுள்ளார் அஜீத் ..//


சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை தன் மனைவி, மகளுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார் அல்டிமேட் ஸ்டார் அஜீத்.
நடிகர் அஜீத் ‘பில்லா 2’ படப்பிடிப்பில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். படவேலைகள் பாதிக்கு மேல் முடிந்துள்ளன.
தற்போது புத்தாண்டு தினத்தையொட்டி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்கள் ஓய்வுக்காக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார் அஜீத்,  அவருடன் மனைவி ஷாலினியும் மகள் அனோஷ்காவும் சென்றுள்ளனர்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். மேலும் சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் குழந்தையை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் அஜீத்துக்கு இருந்தது.
குழந்தைக்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார் தல அஜீத்.

No comments:

Post a Comment