தமிழ் திரையுலகில், யோஹன் அத்தியாம் ஒன்று திரைப்படம் சர்வதேச திரைப்படம் என்று இயக்குனர் கௌதம் மேனன் புகழ்ந்துள்ளார். |
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர் கௌதம் மேனன் வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்பொழுது, இளையதளபதி விஜய்யுடன் இணைந்து யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தை போட்டான் கதாஸ் நிறுவனம்(Photon Katas Company) மற்றும் ஈராஸ் நிறுவனம்(Iras company) தயாரிக்க உள்ளது. யோஹன் அத்தியாயம் ஒன்றிற்கான படப்பிடிப்பு எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொடங்கப்பட உள்ளது. இத்திரைப்படத்தை பற்றி சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன், யோஹன் அத்தியாயம் ஒன்று சர்வதேச திரைப்படமாகும். வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்குப்பிறகு நான் இயக்க உள்ள ஆக்ஷன் திரைப்படமாகும். யோஹன் அத்தியாயம் ஒன்றிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தீம் பாடலை(Theme song) உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம் மேனனுடன் இணைந்து யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் கெளதமிற்கும் எனக்கும் இத்திரைப்படம் புதிய களமாக அமையும் என்றும் திரையுலக ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடிய, வித்தியாசமான பாடல்களுடன் வருவோம் என்றும் தெரிவித்துள்ளார். |
For Thala Thalapathy Fans
Saturday, December 17, 2011
யோஹன் அத்தியாயம் ஒன்று: கௌதம் மேனன் புகழாரம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment