For Thala Thalapathy Fans



Sunday, December 18, 2011

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜீத் நடிக்கிறார்...


தமிழ் திரையுலகில் தல அஜீத் குமார், சிறுத்தை இயக்குனர் சிவாவோடு இணைய உள்ளார்.
தமிழ் திரையுலகில் தல அஜீத் குமார் பில்லா-2 திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதையடுத்து கார்த்தி நடித்து வெற்றி பெற்ற சிறுத்தை திரைப்படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை விஜயா புரோக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.


அஜீத்தை இயக்க இருப்பது குறித்து சிவா, சிறுத்தை திரைப்படத்தின் வரவேற்பை அடுத்து அஜீத்துடன் இணைந்து இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன்.


அஜீத் சாரிடம் ஒரு கதையின் சுருக்கத்தை மட்டும் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், தற்போது அக்கதைக்கு திரைக்கதை எழுதி வருகிறேன்.


வருகிற 2012 சனவரி மாதம் அஜீத்திடம் முழுக்கதையும் கூறி விடுவேன். நீங்கள் அஜீத்தை ஒரு புதுமையான வேடத்தில் பார்ப்பது உறுதி என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment