For Thala Thalapathy Fans



Saturday, December 24, 2011

வித்தியாசமாய் நடந்த நண்பன் ஆடியோ வெளியீட்டு விழா..//

ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடித்த ‘நண்பன் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா கோவை பீளமேடு இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று நடந்தது. 

3டி தொழில்நுட்ப முறையில் பாடல் சிடி வெளியிடப்பட்டது. இதற்காக விழா மேடையில் விசேஷமான திரை வடிவமைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் கண்ணாடி வழங்கப்பட்டது. அதை அணிந்து 3டி முறையில் விழாவை ரசித்தனர். முதல் சிடியை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட, நடிகர் பிரபு பெற்று கொண்டார். 

விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது: 
‘எந்திரன் படப்பிடிப்பு புனேயில் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒருநாள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இந்நிலையில், டென்ஷனாக இருந்தபோது 3 இடியட்ஸ் படத்திற்கு சென்றேன். சில நிமிடங்கள் என்னால் படத்தின் காட்சிகளை கவனிக்க முடியவில்லை. எந்திரன் படப்பிடிப்பு தொடர்பாக சிந்தனை அலை பாய்ந்தது. சிறிது நேரத்தில் படம் என்னை ஈர்த்தது. படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது. படம் முடிந்ததும் எனக்கு தெளிவு வந்தது. அந்த படத்தை தமிழில் இயக்க விரும்பினேன். 

இந்த படம் வெற்றி பெறும்போது, அதற்குரிய பெருமை 3 இடியட்ஸ் படத்தின் கதாசிரியர் ராஜ்குமார் ஹிரானியை சேரும். ரஜினிக்கு பிறகு நேரம் தவறாமையை கடைபிடிப்பவர் விஜய். நண்பன் படத்திற்கு பிறகு, விஜய்யை பிடிக்காமல் யாராவது இருந்தால் கூட அவர்களுக்கும் விஜய்யை மிகவும் பிடித்து போகும். எந்திரன் படத்தை மனதில் வைத்து கொண்டு நண்பன் படத்தை பார்க்க கூடாது. இப்படம் வேறு விதமான அனுபவம் தரும். ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விட்டு கதையை தேடுகிறார்கள். இதை விட்டு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கதையை வாங்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்றார். நடிகர் விஜய் பேசும்போது, ஷங்கரின் இயக்கத்தில் முதல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க முடியவில்லை. அவரை போன்ற ஒரு டைரக்டரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. அவர் நடித்து காட்டும் விதம் புதுமையானது. ஷங்கர், இந்தியாவின் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.நண்பன் படம் மூலம் நான், ஜீவா, ஸ்ரீகாந்த் நல்ல நண்பர்களாக மாறி விட்டோம். எங்கள் குடும்பத்தினரும் நட்பாக பழகி வருகிறார்கள் என்றார். நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, எஸ்.ஜே.சூர்யா, சத்யன், மனோபாலா, நடிகை அனுயா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடலசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment