தில், தூள், கில்லி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஒஸ்தி இயக்குனர் தரணியின் அடுத்த படம் 'வீர வாஞ்சி' என தெரிவிக்கப்படுகிறது.
தரணியின் இயக்கத்தில் வெளியான ஒஸ்தி எதிர்மறையான பல விமர்சனங்களை சந்தித்தாலும் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தோசத்துடன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
மசாலா படங்களும், ரீமேக் படங்களாகவும் இயக்கிக்கொண்டிருந்த தரணி இம்முறை தேசிய விருது கிடைக்குமளவுக்கான ஒரு சரித்திரப்படத்தை இயக்கவுள்ளாராம். இக்கதை தமிழர்களை தலைநிமிரச்செய்த ஒரு வீரனின் கதை.
தனது அடுத்த படமான வீர வாஞ்சி படத்தின் முக்கிய கதாபாத்திரமான வீரத் தமிழன் வாஞ்சிநாதன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்கிறாராம் தரணி.செய்தி நியூயாழ்.கொம்
மேலும் அசோக்கா எனும் சரித்திரப்படத்தில் தல நடித்திருப்பதால் இப்படத்திற்கு அஜித் சரியாகப் பொருந்துவார் என நம்புகிறாராம் தரணி. அத்துடன் இப்படத்தில் அஜித் நடித்தால் நிச்சயமாக அஜித்துக்கு தேசிய விருது கிடைக்கும் என ஒஸ்தியாக கூறியுள்ளாராம் இயக்குனர் தரணி.
அண்மைக்காலமாக அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பாக வெளிவரும் வதந்தியாக இல்லாமல் உறுதியாகுமா இந்த தேசிய விருதுக்கான கனவுப்படம்...

No comments:
Post a Comment