For Thala Thalapathy Fans



Wednesday, December 28, 2011

மும்பையில் துப்பாக்கி படப்பிடிப்பு ......


தமிழ் திரையுலகில் இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்திற்குப் பிறகு இளைய தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் துப்பாக்கி. இளைய தளபதியுடன் காஜல் அகர்வால் துப்பாக்கியில் இணைகிறார்.


ஏழாம் அறிவு வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
இளைய தளபதி தன்னுடைய தோற்றத்தை பெரும்பாலும் திரைப்படங்களில் மாற்ற மாட்டார்.

ஆனால் வசீகரா திரைப்படத்திற்குப் பிறகு நடித்த திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய் துப்பாக்கி திரைப்படத்திற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றியிருக்கிறார். மேலும் திரைப்படத்தை குறித்த நேரத்தில் முடித்து விட தன்னால் இயன்ற வேலைகளையும் செய்து வருகிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, நண்பன் இசைவெளியீட்டு விழாவிற்கு கோயம்புத்தூர் வந்தவர், விழா முடிந்ததும் அடுத்த விமானத்திலேயே மும்பை கிளம்பி விட்டார்.

No comments:

Post a Comment