For Thala Thalapathy Fans



Sunday, December 18, 2011

ஷங்கரின் நண்பன் இசை வெளியீட்டு விழா: ஹாரீஸ் ஜெயராஜ் தகவல்:::


தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 23 ம் திகதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது.
பாலிவுட்டில் திரையிடப்பட்டு வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தை, தமிழில் நண்பன் என்ற பெயரில் பிரபலமான இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ளார்.
இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடிக்க ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நண்பனின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இசை வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழ் நாட்டின் முக்கிய வணிக நகரான கோயம்புத்தூரில் வருகிற 23 ம் திகதி நண்பனின் பாடல்களை வெளியிடவுள்ளார்கள்.
இது குறித்து நண்பன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டிவிட்டரில், கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் வருகிற 23ம் திகதி நடைபெற இருக்கும் HARRIS ON THE EDGE நிகழ்ச்சியில் நண்பனின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது 2 பாடல்களை பாட இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment