For Thala Thalapathy Fans



Thursday, September 29, 2011

"தல" க்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்..................


மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்குமார் நடித்து வரும் படம் ‘பில்லா 2’. சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தனது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு , இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கோவா சென்றுள்ளது. இப்படத்தின் நாயகியாக மாடல் அழகி ஹூமா குரோஷி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இன்று கிடைத்த தகவலின்படி அவருக்கு பதிலாக புதிய கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் அழகிப்பட்டம் வென்ற பார்வதி ஓமனக்குட்டனை அஜித்திற்கு இப்படத்தில் புதுஜோடியாக்கி இருக்கிறார்களாம். ஹூமா குரோஷி கால்ஷீட் கொடுத்த தேதிகளின் படி படப்பிடிப்புக்கு வராமல் போனதால்தான், இந்த கதாநாயகி மாற்றம் என்று ‘பில்லா 2’ படப்பிடிப்பு குழுவினர் தெரிவிதுதள்ளனர்.

யோஹன் படத்துக்கு தயாராகும் தளபதி..................


இளைய தளபதி விஜய் கொலிவுட்டில் ‘வேலாயுதம்’, ‘நண்பன்’ போன்ற படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இயக்குனர் கெளதம் மேனன், நாயகன் ஜீவா-நாயகி சமந்தா நடிப்பில் உருவாகும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் மும்மரமாக இருக்கின்றார். அடுத்த வருட துவக்கத்தில் ‘யோஹன்’ படத்துக்கான வேலைகள் துவங்கும் என்பதால் இப்போதிலிருந்தே படத்தின் நாயகன் விஜய் தயாராகி வருகிறார் என்கிறது பட வட்டாரம்.
விஜய்க்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இது வித்தியாசமான படமாக இருக்கும். தனது பாணி படங்களில் இருந்து விஜய் சற்று விலகி, கொலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், கெளதம் மேனன், முருகதாஸ் ஆகியோரின் படங்களில் வித்தியாசமாக முயற்சிக்க களமிறங்கியுள்ளார். இதனால் விஜய்யின் ‘நட்சத்திர நாயகன்’ அந்தஸ்து மேலும் பல மடங்கு மிளிரும் என பட வட்டாரம் எதிர்பார்க்கிறது.

Tuesday, September 27, 2011

வேலாயுதம் நியூ ட்ரைலர் !!!!!!!!!!!!!!!!


என் டைரக்ஷனில் விஜய் நடிக்க வேண்டும் - விஷாலின் விருப்பம் ........


தீபாவளிக்கு இன்னும் ரெண்டே வாரம்தான் இருக்கிறது. அதற்குள் வெடி வெடிக்க கிளம்பியிருக்கிறார் விஷால். இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் வெடி, இம்மாதம் 30 ந் தேதி ரிலீஸ். கொஞ்சம் பொறுத்திருந்தா தீபாவளிக்கே வந்திருக்கலாமே என்றோம். இப்போ வரப்போகிற லீவ் நாட்களையும் மனசுல வெச்சுகிட்டுதான் இப்போ ரிலீஸ் செய்யுறோம் என்றார். (நவராத்திரி லீவ், மற்றும் காலாண்டு விடுமுறை என்று கணக்கு பண்ணி களம் இறங்கியிருக்கிறார்கள்).
தீபாவளிக்கு புதுப்படங்கள் வரும்போது வெடி காணாமல் போய்விடுமே என்றால், இல்ல பாஸ். நிஜம் என்னன்னா எவ்வளவு பெரிய படமா இருந்தாலும் ரெண்டே வாரம்தான் தாங்குது. அதுமட்டுமல்ல, சென்னையில் மட்டும் 25 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் பண்ணியிருக்கோம். இதே ரேஞ்சில்தான் தமிழகம் முழுக்க வெளியிட்டிருக்கிறோம். கலெக்ஷன் பிரமாண்டமா இருக்கும் என்றவர், அதன்பின் பேசியது எல்லாமே வெடியை சுற்றிய விஷயங்கள்தான்.
தெலுங்கில் வெற்றி பெற்ற எந்தவொரு படத்தையும் நான் ரீமேக் பண்ணனும்னு நினைப்பேன். அதையும் மீறி வேறு யாராவது ஹீரோ அந்த படங்களில் நடிப்பதற்காக கமிட் ஆகிட்டா என்னால தாங்கவே முடியாது. உறக்கமே வராது. அப்படி கை நழுவிப்போச்சே என்று நான் கவலைப்பட்ட படம் சந்தோஷ் சுப்ரமணியம். ஜெயம் ரவி என்னோட பெஸ்ட் பிரண்டுன்னா கூட, பொறாமையா இருந்திச்சு. தெலுங்கில் சவுரியம் வந்தபோதும் நான் அப்படிதான் ஃபீல் பண்ணினேன். இந்த படத்தை தமிழ்ல நாம பண்ணனும்னு தோணுச்சு. ரைட்ஸ் வாங்கியதும் நான் நினைச்ச ஒரே டைரக்டர் பிரபுதேவா மாஸ்டர்தான்.
சவுரியம் படத்தை விட இதை ரொம்ப அற்புதமாக திரைக்கதை அமைச்சு இயக்கியிருக்கிறார். அவன் இவன் படத்தில் நடித்த பின்பு என்னோட பர்ஃபாமென்ஸ் பற்றி ரசிகர்கள் நிறைய பேசினாங்க. இந்த படம் அந்த நல்ல பெயரை காப்பாற்றி கொடுக்கும். அதுமட்டுமல்ல, அந்த படத்திற்கு இணையா இதில் பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன் என்றவரிடம் நீங்க எப்போ டைரக்டராக போறீங்க என்றோம். அதற்கு அவர் சொன்ன பதில், இன்டஸ்ட்ரியையே திரும்ப வைக்கிற பதில்.
விஜய்க்காக ஒரு கதை வச்சுருந்தேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். அவர் சம்மதிச்சா இப்பவும் நான் ரெடி என்றார். இனிமேல் இது பற்றி விஜய்தான் சொல்லணும்…

Monday, September 26, 2011

ஒன்றாக விளையாடும் தல தளபதி குழந்தைகள்..................



இளையதளபதி விஜய்யின் பிள்ளைகளும், தல அஜீத் குமாரின் மகளும் குளோஸ் நண்பர்களாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக பழகி வருகின்றனராம். ஒருவர் வீட்டுக்குச் சென்று ஒருவர் விளையாடி மகிழ்கின்றனர். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷாவும், அஜீத் குமார் மகள் அனோஷ்காவும் தோஸ்த். பள்ளி விடுமுறை நாட்களில் விஜய் குழந்தைகள் தல வீட்டுக்கு வந்து அனோஷ்காவுடன் விளையாடுகின்றனர். அதே போல் அனோஷ்காவும் விஜய் வீட்டுக்கு சென்று சஞ்சய், ஷாஷாவுடன் விளையாடுகிறாள்.
அனோஷ்காவை ஷாலினி அழைத்துச் செல்ல, விஜய் குழந்தைகளை அவரது மனைவி சங்கீதா அழைத்து வருகிறார். ஆக மொத்தம் இரண்டு குடும்பங்களும் நட்புறவு பாராட்டுகின்றனர். மகள் அனோஷ்கா அப்பாவை செல்லமாக அஜீத் குமார் என்றுதான் அழைக்கிறாளாம். இதைக் கேட்டதும் தல உருகிப் போய் விடுகிறாராம்.

Sunday, September 25, 2011

அது விஜய்க்கு மட்டும் தான் ...மத்தவங்களுக்கு இல்ல !-அனுயா தகவல்

சிவா மனசுல சக்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. கவர்ச்சிதான் இவர் ப்ளஸ். தொடர்ந்து இவர் நடித்த மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள்தான் வர மறுக்கின்றன.

இந்த நிலையில்தான் அவர் ஷங்கர் இயக்க விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பெரிய டைரக்டர், அதிக சம்பளம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் விஷயம் வெளியில் தெரிந்ததும், நிறைய பேர் இதேபோல அக்கா வேடங்களோடு வந்து கதவைத் தட்ட, அவர்களுக்கு நோ சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம் அனுயா. அதுமட்டுமல்ல, ரூ 30 லட்சம் சம்பளம் என்றால் பேசுங்கள், இல்லாவிட்டால் வேறு ஆளைப் பாருங்கள் என்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?" என்றார்.

மூன்று இயக்குனர்கள் ...!ஒரு அஜித் ...!யாருக்கு வெற்றி ........


மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றி, அஜித்தை கோடம்பாகத்தின் மோஸ்ட் வாண்டேட் மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் சேர்த்திருகிறது. மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்க இருகிறார் ஆனால் உடனடியாக அல்ல என்பதை வெங்கட் பிரபுவே கூறிவிட்டார். அப்படியானல் அஜித்தை அடுத்து இயக்கப் போவது யார் என்ற கேள்வியை வைத்துக்கொண்டு ஊடகங்கள் ஆளாளுக்கு ஒரு பரபரப்புச் செய்தியை கொடுத்து வருகின்றன.
ஆனால் உண்மையில் அஜித், தனது 51-வது படத்துக்கு இயக்குனர் யார் என்பதில் இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அவரது மேனேஜர் வட்டாரத்தில். ஆனால் பில்லா இரண்டாம் பாகத்துக்கு அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருகிறார் அஜித். இது உறுதியாகி விட்டது என்கிறார்கள். மங்காத்தா படம் ரிலீஸ் ஆகும் முன்பே மணிரத்னமும் அஜித்தும் சந்தித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் அந்த சந்திப்பில் முன்னேற்றம் எதுவும் இல்லை.
இன்னும் சில வெற்றிகளுக்கு பிறகு நாம் இணையலாம் என அஜித் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தகவல் கிடைக்கிறது மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரத்தில் இருந்து. அடுத்து ஜெயம்ராஜா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று கொழுத்திப் போட்டார்கள். ஆனால் ஜெயம்ராஜாவே இதை நேரடியாக மறுத்து விட்டார் ” ‘வேலாயுதம்’ மற்றும் ‘மங்காத்தா’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நடந்து கொண்டிருக்கும் போது நானும் அஜீத்தும் சந்தித்தோம்.
அப்போது சாதாரணமாக பேசிக் கொண்டோமே தவிர, இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து எதுவும் பேசவில்லை.” என்கிறார் நெத்தியடியாக..! அப்படியானல் அஜித்தின் அடுத்த இயக்குனர் யார் என்றால் இயக்குனர் ஷங்கரை கைகாட்டுகிறார்கள் ஏ.எம். ரத்னம் அலுவலக வட்டாரத்தில்! உண்மையில் தற்போது தெலுங்கில் ‘ஷேடோ’ என்ற படத்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தனுக்கு அடுத்த வாய்ப்பை வழங்குவது என்று எண்ணியிருந்தாராம் அஜித்.
காரணம் அஜித்துக்காக விஷ்ணுவர்த்தன் கையில் எடுத்திருக்கும் கதை அப்படிப்பட்டது என்கிறார்கள். அண்டோனியோ பான்ராஸ் நடித்து உலகப் புகழ்பெற்ற ‘டெஸ்பரெடோ’ படத்தையே தமிழுக்கு திரைக்கதை அமைத்து இருகிறாராம். ஆனால் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்துக்கு பாய்ஸ் படத்தை இயக்கிக் கொடுத்து, அது படுதோல்வி அடைந்த காரணத்தால் அப்போது ஏற்பட்ட சரிவில் இருந்து எழமுடியாத நிலையில் இருந்து வரும் தயாரிப்பாளர் ரத்துனத்துக்கு ஒரு படத்தை இயக்கித்தர ஒப்புக்கொண்டாராம் ஷங்கர்.
அதற்கு இதுவே சரியான தரும் என்பதை உணர்ந்த ரத்னம் “ நீங்கள் ஏன் அஜித்தை இயக்கக் கூடாது ?” என்று கேட்டாரம். ஷங்கரோ அஜித்துகான கதை இப்போதைக்கு என்னிடம் இல்லை. என்றாலும் யோசித்து முடிவெப்போம் என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். ஆக அஜித் ஷங்கர் அல்லது விஷ்ணுவர்த்தன் ஆகிய இரண்டு பேரில் ஒருவரது இயக்கத்தில் நடிப்பது உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது

Saturday, September 24, 2011

இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித் ...........


அஜித்குமார் மங்காத்தா வெற்றிக்கு பிறகு ‘பில்லா 2’ படத்தில் மும்முரமாக இருக்கிறார். அப்படி இருந்த போதும், தமிழில் வெளிவரும் முன்னணி வார இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
‘மங்காத்தா’ வெற்றி எப்படி?
இது என் நீண்ட மௌனத்துக்கு கிடைத்த வெற்றி. மங்காத்தாவைப் பார்த்துட்டு பாராட்டறாங்க. சிலர் என்னடா இவன் தண்ணி, தம்முன்னு திரியறான்னு விமர்சனமும் பண்ணறாங்க. எல்லாத்தையும் தலைவணங்கி ஏத்துக்கிறேன். அஜித் படம் ஓடினாலும், ஓடலன்னாலும் அவன் எப்பவும் ஒரே மாதிரிதான்.
தத்துவமா பேசறீங்களே? உங்க தலைவர் ரஜினி பாணியில ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?
ஏற்கனவே எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமான திருத்தலங்களுக்கு போய் வந்திருக்கிறேன். சென்னையிலிருந்து நான்கு முறை திருப்பதிக்கு நடந்தே பேயிருக்கேன். என்னை கண்டுபிடிச்சிடக்கூடாதுங்கறதுக்காக மாறுவேடத்தில் என் நண்பர்களுடன் சென்று வந்திருக்கிறேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த இமயமலை பற்றிய புத்தகம் படிச்சதுல இருந்து அங்கயும் போகணும்னு ஆசையா இருக்கு. சீக்கரமா இமயமலைக்கு கிளம்பிடுவேன்னு நினைக்கறேன் என்றார்.

யு.கே -ஒரு கோடியை தாண்டிய மங்காத்தா !!!

யுகே-யில் தமிழப் படம் ஒன்று ஒரு கோடி ரூபாய் வசூலை தாண்டுவதென்பது அபூர்வம். ர‌ஜினி, கமல், ஷங்கர் படங்களே இதனை சாதித்திருக்கிறது. இப்போது மங்காத்தாவும்.

மூன்றாவது வாரத்தில் மங்காத்தா யுகேயில் 4,349 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் யுகே வசூல் 1,65,976 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 1.24 கோடிகள்.

அ‌‌ஜீத்தின் படம் ஒன்று யுகே-யில் ஒரு கோடி ரூபாயை தாண்டியிருப்பது இதுவே முதல்முறை.

அஜித்தை ராஜா இயக்கவில்லை !--ஜெயம் ரவி மறுப்பு ...........

அஜித்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறவர்கள் என்று பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

சமீபத்தில் ஜெயம் ராஜாதான் இந்தப் படத்தை இயக்குவார் என எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தி வெளியானது. இருவரும் மகேஷ்பாபுவின் 'தூக்குடு' படத்தை ரீமேக்குகிறார்கள் என்றும் கூறியிருந்தனர்.

அதுபற்றி இன்டஸ்ட்ரியிலும் வாய்வழி பேச்சு பரவியதால், உடனடியாக இதற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தார்கள் ஜெயம் ராஜா தரப்பில்.

உடனே ஜெயம் ரவி தனது ட்விட்டரில், “ராஜா அஜித் படத்தை இயக்கவில்லை. அந்த செய்தி தப்பானது,” எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் தரப்பிலும், ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு தேதிகள் மட்டுமே கொடுத்திருப்பதாகவும், வேறு எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனவும், ஜனவரி மாதம் வரை பில்லா 2 படப்பிடிப்பு இருக்கும் அதுவரை எதுவும் உறுதி படுத்த நேரம் இருக்கப்போவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அஜீத்துக்கு பெரும் தொகையை இந்தப் படத்துக்கு அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டார் ஏ எம் ரத்னம்!

இப்போதைய நிலவரப்படி இந்தப் படத்தை ஒன்று ஷங்கர் இயக்குவார் அல்லது விஷ்ணுவர்தன் இயக்கக்கூடும் என்கிறார்கள்.

Friday, September 23, 2011

அஜித் பளிச் ................


ஷங்கர் இயக்கத்தில் அஜித் ??????????

மங்காத்தா வெற்றிக்குப் பிறகு தல அஜீத்தை பற்றி நாளுக்கு நாள் ஒரு புது தகவல் வந்த கொண்டே இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குவதில் புது ரேஸ் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் பில்லா 2 முடிந்த பிறகு அஜீத்தின் அடுத்த படத்தை ஜெயம் ராஜா இயக்கலாம் என செய்திகள் வெளியாகின. மேலும், நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் அடுத்த படத்திற்கான வேலையை உடனடியாக தொடங்க உள்ளதாக தெரிகிறது. காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறைவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி நிறைவேறினால் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிடும். இந்த செய்தி 'உண்மையா' இல்லை 'பொய்யா' என்பதை ஷங்கர் வாய் திறந்தால் மட்டுமே நிஜமாகும்.

DIWALI CLASH : VIJAY VS SURYA................


We can call it as the Vijay vs Suriya clash this Diwali though their films will be released a day apart. According to sources in Kollywood, Vijay’s Velayutham has been scheduled to be released on October 25th while Suriya starrer 7aum Arivu will hit the marquee the very next day – the Diwali Day!
Both these films are highly expected for their star value and it is therefore going to be a treat to movie buffs and fans of Suriya as well as Vijay.
7aum Arivu has Suriya and Shruti Haasan playing the lead pair and is directed by AR Murugadoss and Velayutham has Vijay, Genelia and Hansika in the star cast and is directed by Jayam Raj

அது மங்காத்தா பார்ட்டி அல்ல !வெங்கட் பிரபு எஸ்கேப்!!!!!!!!


சோனாவும், எஸ்.பி.பி.சரணும் பாலியல் யுத்தம் நடத்திய அந்த பார்ட்டி மங்காத்தா பார்ட்டியே இல்லை; என்று மங்காத்தா படத்தின் டைரக்டர் விளக்கம் அளித்துள்ளார். நடிகை சோனா பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது அளித்த புகாரையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, மங்காத்தா பட வெற்றியை கொண்டாடுவதற்காக நடிகர் வைபவ் தனது வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த மது விருந்தில் பங்கேற்றபோதுதான் போதையில் எஸ்.பி.பி.சரண் என்னிடம் தவறாக நடக்க முயன்றார், என்று கூறினார். அதனைத்தொடர்ந்து மங்காத்தா பார்ட்டியில் சோனா & எஸ்.பி.பி.சரண் பாலியல் மோதல் என செய்திகள் வெளியாகின.
இந்த விஷயத்தை தற்போது ஐதராபாத்தில் இருக்கும் அஜித் கேள்விப்பட்டு செம அப்செட் ஆகி விட்டாராம். மங்காத்தாவின் டைரக்டர் வெங்கட்பிரபுவை அழைத்து, இந்த பார்ட்டி மங்காத்தா பார்ட்டின்னு இனிமே பேசினா நல்லாயிருக்காது என்று எச்சரித்ததாக தெரிகிறது. இதையடுத்து வெங்கட்பிரபு, தனது ட்விட்டரில் அது மங்காத்தா பார்ட்டி அல்ல என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு, இது நண்பர்களுக்குள் நடந்த விஷயம். சீக்கிரம் சரியாகிவிடும் என்றும் கூறியிருக்கிறார் வெங்கட்பிரபு!

Thursday, September 22, 2011

சொந்த மகனைப்போல பாசம் காட்டிய அம்மா - அஜித் உருக்கம் .......


சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், “அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!,” என்று கூறியுள்ளார்.
திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, “ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!,” என்று கூறியுள்ளார்.
என் சாவுக்கு கூடும் கூட்டம்….
மேலும் அவர் கூறுகையில், “எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, September 21, 2011

JEYAM RAJA TO REMAKE "DOOKUDU" AJITH ?


“Who is the director of Ajith‘s next film after Billa -2 ?”  is the million dollar question in Kollywood today. We have also asked the same to our users in a poll and most of you have voted for Maniratnam. Everyday we are hearing new stories about this and even the film industry was fuming the choice between Vishnuvardhan and Vijay of Madarasapattinam fame. Ajith had also indicated that there would be some news about his next movie in a week or two.
Now it is almost certain that Ajith has given his nod for AM Ratnam the mega producer of the industry and Vishnuvardhan was leading the race till last week. However, the current talk, much to the shock of Vishnuvardan, is that Ajith has ticked the choice of Jeyam Raja who is currently busy with Velayutham. More news is that the film will be a remake of the Telugu movie Dookudu, directed by Mahesh Srinu Vaitla. The Telugu movie has Mahesh Babu and Samantha as the lead cast. It is to be noted that Jayam Raja is an expert in converting the remake as the successful ventures, as his track record shows.  Wait for official confirmation in this regard.

NANBAN AND VELAYUTHAM CLASH : VELAYUDHAM WINS............


After making a final touch to the effervescence of the film Nanban, director Shankar hinted that he was thinking of releasing it for Pongal  festival. This means that there won’t be internal clash for Vijay films for this Deepavali –Velayutham and this Nanban. The film has a strong cast with Vijay, Jeeva and Sriknath in lead roles along with a guest appearance from SJ Surya.
Vijay essays Aamir Khan while Jiiva and Srikanth will essay the other two roles. Ileana will fit the shoes of Kareena Kapoor. Velayudham, on the other hand, will have Genelia and Hansika Motwani in the lead roles.
Earlier many thought that both Velayudham and Nanban will release on Diwali on the same day. But that is not to be, as Velayudham has won the race and will be released for Diwali while Nanban is pushed to Pongal.
Since Nanban is a bilingual, a few of Vijay’s films like Aadhi will get dubbed and released in Telugu before Nanban is released. This way, Vijay’s market can be enhanced in Andhra Pradesh and with Ileana, Nanban will find takers.

17 கோடி கேட்கும் அஜித்


பில்லா வெற்றிக்குப் பிறகு ஏகன், அசல் என தொடர்ந்து இரு தோல்விப் படங்களைக் கொடுத்தவர் அஜீத். அதன் பிறகு வந்த வெற்றிப் படம் மங்காத்தா.
இந்த ஒரு படம் மூலம் இழந்த தன் மார்க்கெட் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ள அஜீத், தனது அடுத்த படத்துக்கு கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா… ரூ 17 கோடி!
இந்த சம்பளம் இப்போது அவர் நடிக்கும் பில்லா 2 படத்துக்கு அல்ல. ஏஎம் ரத்னம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கானது. ஒருவேளை பில்லா 2 ஜெயித்துவிட்டால், அஜீத்தின் கால்ஷீட் ரேட் இன்னும் எகிறிவிடும் என்பதால், இந்தத் தொகையை உடனடியாகத் தர சம்மதித்தாராம் ரத்னம்.
இதற்கிடையே முதல் கட்டப்படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள பில்லா 2 படத்தை ரூ 40 கோடிக்கு வாங்கிக் கொள்ள இரு நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் படத்தைத் தயாரித்துவரும் இந்துஜா குழுமமோ ரூ 50 கோடிக்கு மேல் எதிர்ப்பார்க்கிறார்களாம்.
யாரும் எதிர்பாராமல், இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே வாங்கி வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்!

Tuesday, September 20, 2011

அசைக்க முடியாத மங்காத்தா !!!!!!!!!


அஜீத்தின் ஐம்பதாவது படமான ‘மங்காத்தா’ ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தாலும் தமிழ்நாடு முழுவது பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது மங்காத்தா.
இப்படி ஒரு ஓப்பனிங்கை சமீபகாலத்தில் பார்க்கவில்லை என்று கோலிவுட்டை சேர்ந்த விநியோகஸ்தர்கள் பலரும் ‘மங்காத்தா’ படத்தின் ஓப்பனிங்க் பற்றி சொல்லியிருந்தது ஞாபகம் இருக்கலாம்.

பொங்கலுக்கு நண்பன் !!!!!!!!!!!!!


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் ‘நண்பன்’. ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து வருகிறார்கள்.
தீபாவளி வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘நண்பன்’. ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலாயுதம்’ படத்தின் தாமதத்தால் ‘நண்பன்’ எப்போது வெளியிடப் போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.
தீபாவளிக்கு ‘வேலாயுதம்’ உறுதி செய்யப்பட்டு உள்ளதால் ‘நண்பன்’ படத்தினை பொங்கல் தினத்தன்று வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
‘நண்பன்’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 2012 பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார்கள்.
இந்தி ’3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் என்பதால் இந்தியில் நாயகனாக நடித்த அமீர்கானை அழைத்து இப்படத்தின் இசையை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறதாம் படக்குழு.

அஜித்,விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் சம்பள விவரம் !!!!!


சினிமா உலகைப் பொறுத்த வரையில் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள்.இதற்கு தமிழ் சினிமாவும் விதிவிலக்கல்ல.
சரி உங்கள் அபிமான திரை நட்சத்திரங்களின் (ஒரு படத்திற்கான) சம்பள விவரங்களைப் பார்ப்போமா..?
அஜித் குமார் – 15 கோடி ரூபாய்
விஜய் – 15 கோடி ரூபாய்
சூர்யா – 15 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை
விக்ரம் – 10 கோடி ரூபாய்
கார்த்தி – 10 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை
தனுஷ் – 5 முதல் 7 கோடி ரூபாய்
சிம்பு – 5 கோடி ரூபாய் +சென்னை விநியோக உரிமை
விஷால் – 3 கோடி ரூபாய்
ஆர்யா – 2 கோடி ரூபாய்
ஜீவா – 1.50 கோடி ரூபாய்
இவ்வளவு சொன்னீங்களே… சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகியோரின் சம்பளங்களை சொல்லவே இல்லைன்னு கோச்சுக்காதீங்க… இதோ தர்றோம். ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.இவர் ‘எந்திரன்’ படத்தில் நடிப்பதற்கு 24 கோடி ரூபாயும், படத்தின் லாபத்தில் ஒரு பங்கும் சம்பளமாக பேசப்பட்டதாம்.
உலக நாயகனுக்கு எப்படியும் 20 கோடி ரூபாய் சம்பளமாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் ஆடியோ ரிலீஸ் எப்போது????


ஹிந்தியில் அபார வெற்றி பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தினை, தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர். இப்படத்தில் இலியானா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தில் ஆடியோ ரிலீஸ் ஆகும் தேதி உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் அநேகமாய் அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இப்படத்தில் சத்தியராஜ், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கௌரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்களாம்.

Saturday, September 17, 2011

அஜித்தை அதிர வைத்த விமலா ராமன் !!!!!!!!!!!!!!!!

இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பா... வேண்டவே வேண்டாம்!' - அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்

அஜீத்தின் பில்லா 2 படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டார் நடிகை விமலா ராமன்.

அஜித் நடிப்பில் சக்ரி இயக்கும் படம் 'பில்லா 2'. ரூ 35 கோடியில் மும்பை நிறுவனம் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன் ஹைதராபாதில் ஷூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஹீரோயினாக மும்பை மாடல் ஹூமா குரேஷி நடிக்கிறார்.

இன்னொரு ஹீரோயின் வேடத்துக்கு விமலா ராமனிடம் பேசினார்கள். அவர் உடனே ஒப்புக் கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

ஆனால் உண்மையில், 'பில்லா 2'-வில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என விமலா ராமன் மறுத்து விட்டது இப்போது தெரிய வந்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகை பட்டியலில் இருக்கும் விமலா ராமனுக்கு இந்தியில் தனி ஹீரோயின் வாய்ப்பு வந்துள்ளது. இந்த நேரத்தில் கும்பலோடு ஒருவராக நடிப்பது, மற்ற வாய்ப்புகளை பாதிக்கும் என பயப்படுகிறாராம் விமலா.

அவரது இந்த முடிவு அஜீத்தின் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து விமலா ராமன் கூறுகையில், "தெலுங்கில் பிஸியாக உள்ளேன். ஹிந்தியிலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இப்போதைக்கு வேறு பட வாய்ப்புகளை ஏற்கும் நிலையில் இல்லை. தமிழில் பின்னர் நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன். அஜீத் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லை. இதற்கான கால்ஷீட்டும் என்னிடம் இல்லை ," என்றார்.

அப்போது எதிரி,இப்போது நண்பன்-ஏ.எம்.ரத்னம்,அஜித் ஒரு பிளாஷ்பேக்


சுமார் பதினைந்து கோடி ஒரே பேமென்ட்டாக கை மாறியிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். யார்… யாருக்கு கொடுத்திருக்கிறார்? ஏ.எம்.ரத்னம் அஜீத்துக்கு கொடுத்திருக்கிறாராம். ஆனால் பணம் கைமாறவில்லை. வெறும் வார்த்தையளவில்தான் இருக்கிறது இந்த டீலிங் என்றும் தகவல் வருகிறது. ஆனால் இப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து இன்டஸ்ட்ரியில் மேலும் மேலும் உயர்ந்து நிற்கிறார் அஜீத். ஏன் அப்படி?
அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ்பேக். பல வருடங்களுக்கு முன் நடந்த பெப்ஸி படைப்பாளிகள் பிரச்சனையில் அஜீத் பெப்ஸி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். ஆனால் ஏ.எம்.ரத்னம் படைப்பாளிகள் பக்கம். இந்த நேரத்தில் ரத்னம் அஜீத்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. பெரும் தொகை ஒன்றை அட்வான்சாகவும் கொடுத்திருந்தார். அஜீத் எதிரணிக்கு ஆதரவாக நின்றதில் கடுப்பான ரத்னம், நாளை விடிவதற்குள் ரூபாயை எண்ணி டேபிளில் வைத்தாலே போச்சு. இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டார்.
ரோசம் பொங்கி வந்தது அஜீத்திற்கு. நடிகர்கள் யாருமே வாங்குகிற பணத்தை பெட்டியில் வைத்து பூட்டுவதில்லை. அது உடனே முதலீடாகிவிடும். விடிவதற்குள் பணம் புரட்டலாம் என்றால், அன்றைய தேதியில் அவர் இவ்வளவு பெரிய ஸ்டாரும் இல்லை. எப்படியோ விடிய விடிய அலைந்து போராடி பணத்தை புரட்டிய அஜீத், அதை திருப்பி கொடுத்துவிட்டு தன் கொள்கையில் உறுதியாக நின்றார். அதன்பின் அஜீத்தின் உயரம் இன்ஸ்டர்ட்ரியே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயர்ந்தது. யாருக்கு வேண்டுமானால் கால்ஷீட் தருவேன். ஆனால் ஏ.எம்.ரத்னம் கம்பெனிக்கு மட்டும் கிடையவே கிடையாது என்றார் அஜீத்.
அவரை நம்பி நான் இல்லை என்றார் ரத்னம். ஆனால் காலம் உருட்டிய உருட்டலில் கருங்கற்கள் கூட புழுதியாக மாறுவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். விஜய்யோ, அஜீத்தோ கைகொடுத்தால்தான் பழைய படி நிமிர முடியும் என்ற நிலையில் இருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இந்த நேரத்தில்தான் தானே அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தாராம் அஜீத்.
இதற்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது. அது?

Friday, September 16, 2011

தல தளபதி இன் ராஜபார்வையிலே................


பில்லா 2 - ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் 25 நாட்கள் !!!


மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித்குமார் மும்முரமாய் நடித்து வரும் படம் ‘பில்லா 2’. இப்படத்தினை சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். கதாநாயகியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இடம்பெறுகின்ற ஒரே ஒரு பாடல் காட்சிக்காக மட்டும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் சக்ரி டோலட்டி. இந்த பாடல் காட்சியில் அஜித்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களை ஆட்டி வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம். ‘பில்லா’வை விட இப்படம் அதிரடியாய் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக நடித்து வருகிறாராம் அஜித்.

Thursday, September 15, 2011

எந்திரனை எட்டிப் பிடித்த மங்காத்தா!!!!!!!!!!!!!!!!!


கேரள பத்தி‌ரிகைகளில் மங்காத்தா இடம் பிடித்திருக்கிறது. சமீபத்தில் எந்த வெளி மாநிலப் படமும் இப்படியொரு வசூலை கேரளாவில் குவித்ததில்லையாம்.

தமிழ்நாட்டில் வெளியான அதே நாள் மங்காத்தா கேரளாவிலும் வெளியானது. முதல் ஐந்து தினங்களில் இப்படத்தின் வசூல் கோடியை தொட்டிருக்கிறது. அதாவது எந்திரன் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக பத்தி‌ரிகைகள் எழுதியுள்ளன. 

கேரளாவைப் போலவே ஆந்திராவிலும் படம் பட்டையை கிளப்புகிறது. அங்குள்ள இணையதளங்கள் மங்காத்தா பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்திருப்பதாக குறிப்பிட்டடுள்ளன. எந்திரனுக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்று வெளிமாநிலங்களில் அசுர வசூலை பெற்றிருப்பது இப்போதுதான் என்கிறார்கள்.

Wednesday, September 14, 2011

வேலாயுதம் படத்தில் காமெடி ஹன்சிகா

‘வேலாயுதம்’ படத்தில் ஹன்சிகாவின் காமெடி ரசிக்கும்படியாக இருக்கும் என்று டைரக்டர் ராஜா கூறினார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ள படம், ‘வேலாயுதம்’. விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன், சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கும் ராஜா கூறியதாவது: சாதாரண கிராமத்து இளைஞன், பெரிய தலைவன் ஆகும் அளவுக்கு எப்படி உயர்கிறான் என்பது கதை. விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து இது வேறுவிதமாக இருக்கும். காமெடி, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மெசேஜும் உண்டு. ஹன்சிகா, ஜெனிலியா இருவரது கேரக்டருமே பேசப்படும் விதமாக இருக்கும். இதுவரை அப்பாவி பெண்ணாக நடித்து வந்த ஜெனிலியா, இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் காமெடி, ரசிக்கும்படியாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரும் கொண்டாடும் விதமான படம் இது. ஆக்ஷன் காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. பிரியனின் கேமராவும் படத்துக்கு பக்கபலமாகியிருக்கிறது. பட வேலைகள் முடிந்துவிட்டன. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு ராஜா கூறினார்.

இனி ஒரிஜினல் கெட்டப்:அஜித் முடிவு !!!!!!!!!!!!!!!!!!

அஜீத் கூறியது: மங்காத்தா படத்தின் பெரிய வெற்றி மகிழ்ச்சியை தந்துள்ளது. அர்ஜுன் இதில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். ‘இப்படியொரு வேடம் இருக்கிறது நீங்கள் நடிக்க வேண்டும்' என்று நானே அவரிடம் கேட்டேன். ஒப்புக்கொண்டார். எந்தவொரு இடத்திலும் அவரது கேரக்டர் பாதிக்கக்கூடாது என்பதில் நானும் வெங்கட்டும் கவனமாக இருந்தோம்.

வெள்ளை நிற தலைமுடியுடன் நடித்தது பற்றி கேட்கிறார்கள். அதுதானே எனது நிஜ தோற்றம். ‘பில்லா 2' படத்துக்கு பிறகு ‘மங்காத்தா' வில் தோன்றிய அதே தோற்றத்தில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இதற்கு தகுந்த ஸ்கிரிப்டை மட்டுமே ஒப்புக்கொள்வேன். விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு போன்ற இயக்குனர்களின் படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. ‘பில்லா 2' முடிந்தபிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பது என்பது பற்றி முடிவு செய்வேன்.

ரஜினிக்கு வில்லனாகி அவர் கையில் அடி வாங்க வேண்டும்:அஜித்தின் ஆசை


ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார். ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர். அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:
எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.
ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!”

ரஜினிக்கு பாட்சா போல விஜய்க்கு வேலாயுதம்-இயக்குனர் ராஜா


விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வேலாயுதம்’ படத்தில் ஜெனிலியா – ஹன்ஸிகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த இருவருக்கும் யார் பெரிய நட்சத்திரம், யாருக்கு படத்தில் முக்கியத்துவம் என்ற மோதல் எழுந்தததாம்.
பின்னர் ஒருவழியாக இந்த மோதலைத் தீர்த்து வைத்தார்களாம்.
வேலாயுதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். படத்தின் சிறப்புகள் குறித்து இயக்குநர் ராஜா பேட்டியளித்து வருகிறார்.
படத்தின் இரு ஹீரோயின்களின் ஈகோ போட்டி குறித்து இயக்குநர் ராஜா கூறுகையில், “ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ‘ஈகோ’ மனப்பான்மை இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள்.
உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.
ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை.
படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது. உச்சக்கட்ட காட்சியை கேரள மாநிலம் கொச்சியில் 15 நாட்கள் நடத்தினோம்.
ரஜினிக்கு பாட்ஷா போல…
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’வைப்போல், கமல்ஹாசனுக்கு ‘தசாவதாரம்’ போல், விஜய்க்கு `வேலாயுதம்’ படம் அமையும்,” என்றார் ராஜா.
அமைஞ்சா சரி!

Tuesday, September 13, 2011

அரசியலில் ஆர்வம் இல்லை:அஜித்

அரசியலில் தனக்கு துளியும் ஆர்வம் இல்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர், அஜித்தை அரசியலுக்கு வர வற்புறுத்தி போஸ்டர்களும், அரசியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தனது ரசிகர் மன்றத்தை அதிரடியாக கலைத்தார் அஜித். அஜித்தின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர் மன்ற கலைப்பால் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்று சந்தேகமும் எழுந்தது. ஆனால் வழக்கமான அஜித் படத்திற்கு இருக்கும் ஓபனிங்கை விட, மங்காத்தா படத்திற்கு அதிகமாக இருந்தது. இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அஜித், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக தனக்கு அரசியிலில் துளியும் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, சமீபத்தில் என்னுடைய ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது குறித்து பலரும் கேட்கின்றனர். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கான விஷயம். ஆனால் இன்றைய சூழலில் சினிமாவுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய பந்தம் ஏற்பட்டு உள்ளது. எனது ரசிகர்கள் சிலர் அரசியல் ரீதியான சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை கேள்விப்பட்டேன். எனக்கு என்னுடைய ரசிகர்களின் நலன் முக்கியம். சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும், தேவையில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் என் ரசிகர்மன்றத்தை கலைத்தேன். எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை என்றார்.

அரசியல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அஜித், அரசியலுக்கும், எனக்கும் ரொம்ப தூரம். எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. மக்களில் இரண்டு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் எந்தவொரு செயலிலும் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். இதில் நான் இரண்டாவது ரகம். எல்லோரும் நன்றாக உழைத்திடுங்கள், உழைப்பு ஒன்றே உயர்வை தரும். கூடவே அவரவர் ஜனநாயக கடமைகளான முறையான வரி செலுத்துதல், ஓட்டளித்தல் உள்ளிட்டவைகளை சரியாக செய்தாலே இந்த நாடும், அவரவர் வீடும் வளமாகும் என்று கூறினார்.

ஒரு காட்சிக்கு ஒரு லட்சம் பேர்:வேலாயுதம்


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா ” விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர். என் பாதையும் அதுதான். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.
‘வேலாயுதம்’ தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.
ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.
நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘வேட்டைக்காரன்’ பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால் தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் ‘வேலாயுதம்’ சாதனை படைத்தது.
தயாரிப்பாளர் ரவிசார் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கும் ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது. ஏன் எதற்கு என்று கேட்கவில்லைல் ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்… அசந்து போய் விட்டேன்.
இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ” என்று தெரிவித்துள்ளார்.

Sunday, September 11, 2011

லக்ஷ்மி ராய் ஒரு அல்பம் :த்ரிஷா ஆவேசம்


மங்காத்தாவில் அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.
மங்காத்தாவில் த்ரிஷா நடித்த கேரடக்டருக்கு தன்னைத் தான் வெங்கட் பிரபு முதலில் அணுகினார் என்றும், அஜீத் ஜோடி, வில்லி கேரக்டரில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் நடிகை லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். ஆனால் இதை இயக்குனர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தான் த்ரிஷாவைத் தான் அஜீத் ஜோடியாக நடிக்கக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த த்ரிஷா கடுப்பாகிவிட்டாராம். என்ன இந்த லக்ஷ்மி ராய் இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று எரிச்சல் அடைந்துள்ளாராம். அம்மாடி இப்படி பொய் சொல்கிறாரே லக்ஷ்மி ராய் என்று மங்காத்தா யூனிட்டும் கூட கடுப்பாகியுள்ளதாம்.
மங்காத்தா படத்தில் நடிக்கப் போய் இப்படி திரிஷாவை காஞ்சனா ரேஞ்சுக்கு மாற்றி விட்டாரே லக்ஷ்மி ராய்.

Saturday, September 10, 2011

நான் வேண்டாம் என்றதால் மங்காத்தாவில் த்ரிஷா நடித்தார்:லக்ஷ்மி ராய்


மங்காத்தா படத்தில் நடித்தது பற்றி கூறியிருக்கும் லட்சுமிராய் “முதலில் இயக்குனர் வெங்கட் பிரபு என்னைதான் அஜீத்துக்கு ஹீரோயினாக நடிக்க கேட்டார் ஆனால் அக்கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததாலும், நான் தற்போது நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு இரண்டு பாடல்கள் இருப்பதாலும் இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.
லட்சுமிராய் கருத்துக்கு இயக்குனர் வெங்கட்பிரபு ” லட்சுமிராய் மறந்து போய் பேசுகிறார். முதலில் இருந்த கதைப்படி அஸ்வின் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் லட்சுமிராய். அஜீத் நடிக்க ஒப்பந்தம் ஆனவுடன் நான் கதையில் நிறைய மாற்றங்கள் செய்து, த்ரிஷாவை அஜீத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்தேன். லட்சுமிராய்க்கு ஏற்கனவே முன்பணம் கொடுத்திருந்ததால், அவர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
த்ரிஷா ” இது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. படத்தில் எவ்வளவு பேர் நடித்தாலும், அஜீத்திற்கு நாயகியாக யார் நடிக்கிறார்களோ அவர்களைத் தான் விளம்பரத்தில் பயன்படுத்துவார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

MURUGADASS GETS READY FOR VIJAYYYYYYYYY

With two big tasks before AR Murugadoss getting completed by this month, the director is expected to start his next film soon, for which he would join hands with Ilayathalapathy Vijay for the first time.

"Murugadoss's maiden production venture Engeyum Eppodhum is seeing the light of the day on September 16. Six days after that, the much awaited audio launch of his 7aam Arivu will take place on September 22," sources say.

Though the Suriya-starrer is scheduled to release in the last week of October for Deepavali, the director will be technically free from September last week itself. So he would start the Vijay-starrer in October for sure, they add.

Meanwhile, Murugadoss has started aggressive promotion campaigns for 'Engeyum Eppodhum', which is produced by him by joining hands with Hollywood giant Fox Star. Directed by his former associate Saravanan, the film has Jai, Anjali, Sharvanand and Ananya in lead roles.