For Thala Thalapathy Fans



Wednesday, September 14, 2011

ரஜினிக்கு பாட்சா போல விஜய்க்கு வேலாயுதம்-இயக்குனர் ராஜா


விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வேலாயுதம்’ படத்தில் ஜெனிலியா – ஹன்ஸிகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த இருவருக்கும் யார் பெரிய நட்சத்திரம், யாருக்கு படத்தில் முக்கியத்துவம் என்ற மோதல் எழுந்தததாம்.
பின்னர் ஒருவழியாக இந்த மோதலைத் தீர்த்து வைத்தார்களாம்.
வேலாயுதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். படத்தின் சிறப்புகள் குறித்து இயக்குநர் ராஜா பேட்டியளித்து வருகிறார்.
படத்தின் இரு ஹீரோயின்களின் ஈகோ போட்டி குறித்து இயக்குநர் ராஜா கூறுகையில், “ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ‘ஈகோ’ மனப்பான்மை இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள்.
உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.
ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை.
படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது. உச்சக்கட்ட காட்சியை கேரள மாநிலம் கொச்சியில் 15 நாட்கள் நடத்தினோம்.
ரஜினிக்கு பாட்ஷா போல…
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’வைப்போல், கமல்ஹாசனுக்கு ‘தசாவதாரம்’ போல், விஜய்க்கு `வேலாயுதம்’ படம் அமையும்,” என்றார் ராஜா.
அமைஞ்சா சரி!

No comments:

Post a Comment