தீபாவளிக்கு இன்னும் ரெண்டே வாரம்தான் இருக்கிறது. அதற்குள் வெடி வெடிக்க கிளம்பியிருக்கிறார் விஷால். இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் வெடி, இம்மாதம் 30 ந் தேதி ரிலீஸ். கொஞ்சம் பொறுத்திருந்தா தீபாவளிக்கே வந்திருக்கலாமே என்றோம். இப்போ வரப்போகிற லீவ் நாட்களையும் மனசுல வெச்சுகிட்டுதான் இப்போ ரிலீஸ் செய்யுறோம் என்றார். (நவராத்திரி லீவ், மற்றும் காலாண்டு விடுமுறை என்று கணக்கு பண்ணி களம் இறங்கியிருக்கிறார்கள்).
தீபாவளிக்கு புதுப்படங்கள் வரும்போது வெடி காணாமல் போய்விடுமே என்றால், இல்ல பாஸ். நிஜம் என்னன்னா எவ்வளவு பெரிய படமா இருந்தாலும் ரெண்டே வாரம்தான் தாங்குது. அதுமட்டுமல்ல, சென்னையில் மட்டும் 25 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் பண்ணியிருக்கோம். இதே ரேஞ்சில்தான் தமிழகம் முழுக்க வெளியிட்டிருக்கிறோம். கலெக்ஷன் பிரமாண்டமா இருக்கும் என்றவர், அதன்பின் பேசியது எல்லாமே வெடியை சுற்றிய விஷயங்கள்தான்.
தெலுங்கில் வெற்றி பெற்ற எந்தவொரு படத்தையும் நான் ரீமேக் பண்ணனும்னு நினைப்பேன். அதையும் மீறி வேறு யாராவது ஹீரோ அந்த படங்களில் நடிப்பதற்காக கமிட் ஆகிட்டா என்னால தாங்கவே முடியாது. உறக்கமே வராது. அப்படி கை நழுவிப்போச்சே என்று நான் கவலைப்பட்ட படம் சந்தோஷ் சுப்ரமணியம். ஜெயம் ரவி என்னோட பெஸ்ட் பிரண்டுன்னா கூட, பொறாமையா இருந்திச்சு. தெலுங்கில் சவுரியம் வந்தபோதும் நான் அப்படிதான் ஃபீல் பண்ணினேன். இந்த படத்தை தமிழ்ல நாம பண்ணனும்னு தோணுச்சு. ரைட்ஸ் வாங்கியதும் நான் நினைச்ச ஒரே டைரக்டர் பிரபுதேவா மாஸ்டர்தான்.
சவுரியம் படத்தை விட இதை ரொம்ப அற்புதமாக திரைக்கதை அமைச்சு இயக்கியிருக்கிறார். அவன் இவன் படத்தில் நடித்த பின்பு என்னோட பர்ஃபாமென்ஸ் பற்றி ரசிகர்கள் நிறைய பேசினாங்க. இந்த படம் அந்த நல்ல பெயரை காப்பாற்றி கொடுக்கும். அதுமட்டுமல்ல, அந்த படத்திற்கு இணையா இதில் பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன் என்றவரிடம் நீங்க எப்போ டைரக்டராக போறீங்க என்றோம். அதற்கு அவர் சொன்ன பதில், இன்டஸ்ட்ரியையே திரும்ப வைக்கிற பதில்.
விஜய்க்காக ஒரு கதை வச்சுருந்தேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். அவர் சம்மதிச்சா இப்பவும் நான் ரெடி என்றார். இனிமேல் இது பற்றி விஜய்தான் சொல்லணும்…
No comments:
Post a Comment