For Thala Thalapathy Fans



Saturday, September 24, 2011

இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித் ...........


அஜித்குமார் மங்காத்தா வெற்றிக்கு பிறகு ‘பில்லா 2’ படத்தில் மும்முரமாக இருக்கிறார். அப்படி இருந்த போதும், தமிழில் வெளிவரும் முன்னணி வார இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
‘மங்காத்தா’ வெற்றி எப்படி?
இது என் நீண்ட மௌனத்துக்கு கிடைத்த வெற்றி. மங்காத்தாவைப் பார்த்துட்டு பாராட்டறாங்க. சிலர் என்னடா இவன் தண்ணி, தம்முன்னு திரியறான்னு விமர்சனமும் பண்ணறாங்க. எல்லாத்தையும் தலைவணங்கி ஏத்துக்கிறேன். அஜித் படம் ஓடினாலும், ஓடலன்னாலும் அவன் எப்பவும் ஒரே மாதிரிதான்.
தத்துவமா பேசறீங்களே? உங்க தலைவர் ரஜினி பாணியில ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?
ஏற்கனவே எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமான திருத்தலங்களுக்கு போய் வந்திருக்கிறேன். சென்னையிலிருந்து நான்கு முறை திருப்பதிக்கு நடந்தே பேயிருக்கேன். என்னை கண்டுபிடிச்சிடக்கூடாதுங்கறதுக்காக மாறுவேடத்தில் என் நண்பர்களுடன் சென்று வந்திருக்கிறேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த இமயமலை பற்றிய புத்தகம் படிச்சதுல இருந்து அங்கயும் போகணும்னு ஆசையா இருக்கு. சீக்கரமா இமயமலைக்கு கிளம்பிடுவேன்னு நினைக்கறேன் என்றார்.

No comments:

Post a Comment