சுமார் பதினைந்து கோடி ஒரே பேமென்ட்டாக கை மாறியிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். யார்… யாருக்கு கொடுத்திருக்கிறார்? ஏ.எம்.ரத்னம் அஜீத்துக்கு கொடுத்திருக்கிறாராம். ஆனால் பணம் கைமாறவில்லை. வெறும் வார்த்தையளவில்தான் இருக்கிறது இந்த டீலிங் என்றும் தகவல் வருகிறது. ஆனால் இப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து இன்டஸ்ட்ரியில் மேலும் மேலும் உயர்ந்து நிற்கிறார் அஜீத். ஏன் அப்படி?
அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ்பேக். பல வருடங்களுக்கு முன் நடந்த பெப்ஸி படைப்பாளிகள் பிரச்சனையில் அஜீத் பெப்ஸி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். ஆனால் ஏ.எம்.ரத்னம் படைப்பாளிகள் பக்கம். இந்த நேரத்தில் ரத்னம் அஜீத்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. பெரும் தொகை ஒன்றை அட்வான்சாகவும் கொடுத்திருந்தார். அஜீத் எதிரணிக்கு ஆதரவாக நின்றதில் கடுப்பான ரத்னம், நாளை விடிவதற்குள் ரூபாயை எண்ணி டேபிளில் வைத்தாலே போச்சு. இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டார்.
ரோசம் பொங்கி வந்தது அஜீத்திற்கு. நடிகர்கள் யாருமே வாங்குகிற பணத்தை பெட்டியில் வைத்து பூட்டுவதில்லை. அது உடனே முதலீடாகிவிடும். விடிவதற்குள் பணம் புரட்டலாம் என்றால், அன்றைய தேதியில் அவர் இவ்வளவு பெரிய ஸ்டாரும் இல்லை. எப்படியோ விடிய விடிய அலைந்து போராடி பணத்தை புரட்டிய அஜீத், அதை திருப்பி கொடுத்துவிட்டு தன் கொள்கையில் உறுதியாக நின்றார். அதன்பின் அஜீத்தின் உயரம் இன்ஸ்டர்ட்ரியே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயர்ந்தது. யாருக்கு வேண்டுமானால் கால்ஷீட் தருவேன். ஆனால் ஏ.எம்.ரத்னம் கம்பெனிக்கு மட்டும் கிடையவே கிடையாது என்றார் அஜீத்.
அவரை நம்பி நான் இல்லை என்றார் ரத்னம். ஆனால் காலம் உருட்டிய உருட்டலில் கருங்கற்கள் கூட புழுதியாக மாறுவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். விஜய்யோ, அஜீத்தோ கைகொடுத்தால்தான் பழைய படி நிமிர முடியும் என்ற நிலையில் இருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இந்த நேரத்தில்தான் தானே அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தாராம் அஜீத்.
இதற்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது. அது?
No comments:
Post a Comment