இளையதளபதி விஜய்யின் பிள்ளைகளும், தல அஜீத் குமாரின் மகளும் குளோஸ் நண்பர்களாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக பழகி வருகின்றனராம். ஒருவர் வீட்டுக்குச் சென்று ஒருவர் விளையாடி மகிழ்கின்றனர். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷாவும், அஜீத் குமார் மகள் அனோஷ்காவும் தோஸ்த். பள்ளி விடுமுறை நாட்களில் விஜய் குழந்தைகள் தல வீட்டுக்கு வந்து அனோஷ்காவுடன் விளையாடுகின்றனர். அதே போல் அனோஷ்காவும் விஜய் வீட்டுக்கு சென்று சஞ்சய், ஷாஷாவுடன் விளையாடுகிறாள்.
அனோஷ்காவை ஷாலினி அழைத்துச் செல்ல, விஜய் குழந்தைகளை அவரது மனைவி சங்கீதா அழைத்து வருகிறார். ஆக மொத்தம் இரண்டு குடும்பங்களும் நட்புறவு பாராட்டுகின்றனர். மகள் அனோஷ்கா அப்பாவை செல்லமாக அஜீத் குமார் என்றுதான் அழைக்கிறாளாம். இதைக் கேட்டதும் தல உருகிப் போய் விடுகிறாராம்.
No comments:
Post a Comment