மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித்குமார் மும்முரமாய் நடித்து வரும் படம் ‘பில்லா 2’. இப்படத்தினை சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். கதாநாயகியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இடம்பெறுகின்ற ஒரே ஒரு பாடல் காட்சிக்காக மட்டும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் சக்ரி டோலட்டி. இந்த பாடல் காட்சியில் அஜித்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களை ஆட்டி வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம். ‘பில்லா’வை விட இப்படம் அதிரடியாய் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக நடித்து வருகிறாராம் அஜித்.
No comments:
Post a Comment