விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் ‘நண்பன்’. ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து வருகிறார்கள்.
தீபாவளி வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘நண்பன்’. ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலாயுதம்’ படத்தின் தாமதத்தால் ‘நண்பன்’ எப்போது வெளியிடப் போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.
தீபாவளிக்கு ‘வேலாயுதம்’ உறுதி செய்யப்பட்டு உள்ளதால் ‘நண்பன்’ படத்தினை பொங்கல் தினத்தன்று வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
‘நண்பன்’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 2012 பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார்கள்.
இந்தி ’3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் என்பதால் இந்தியில் நாயகனாக நடித்த அமீர்கானை அழைத்து இப்படத்தின் இசையை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறதாம் படக்குழு.
No comments:
Post a Comment