பில்லா வெற்றிக்குப் பிறகு ஏகன், அசல் என தொடர்ந்து இரு தோல்விப் படங்களைக் கொடுத்தவர் அஜீத். அதன் பிறகு வந்த வெற்றிப் படம் மங்காத்தா.
இந்த ஒரு படம் மூலம் இழந்த தன் மார்க்கெட் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ள அஜீத், தனது அடுத்த படத்துக்கு கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா… ரூ 17 கோடி!
இந்த சம்பளம் இப்போது அவர் நடிக்கும் பில்லா 2 படத்துக்கு அல்ல. ஏஎம் ரத்னம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கானது. ஒருவேளை பில்லா 2 ஜெயித்துவிட்டால், அஜீத்தின் கால்ஷீட் ரேட் இன்னும் எகிறிவிடும் என்பதால், இந்தத் தொகையை உடனடியாகத் தர சம்மதித்தாராம் ரத்னம்.
இதற்கிடையே முதல் கட்டப்படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள பில்லா 2 படத்தை ரூ 40 கோடிக்கு வாங்கிக் கொள்ள இரு நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் படத்தைத் தயாரித்துவரும் இந்துஜா குழுமமோ ரூ 50 கோடிக்கு மேல் எதிர்ப்பார்க்கிறார்களாம்.
யாரும் எதிர்பாராமல், இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே வாங்கி வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்!
No comments:
Post a Comment