For Thala Thalapathy Fans



Thursday, September 15, 2011

எந்திரனை எட்டிப் பிடித்த மங்காத்தா!!!!!!!!!!!!!!!!!


கேரள பத்தி‌ரிகைகளில் மங்காத்தா இடம் பிடித்திருக்கிறது. சமீபத்தில் எந்த வெளி மாநிலப் படமும் இப்படியொரு வசூலை கேரளாவில் குவித்ததில்லையாம்.

தமிழ்நாட்டில் வெளியான அதே நாள் மங்காத்தா கேரளாவிலும் வெளியானது. முதல் ஐந்து தினங்களில் இப்படத்தின் வசூல் கோடியை தொட்டிருக்கிறது. அதாவது எந்திரன் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக பத்தி‌ரிகைகள் எழுதியுள்ளன. 

கேரளாவைப் போலவே ஆந்திராவிலும் படம் பட்டையை கிளப்புகிறது. அங்குள்ள இணையதளங்கள் மங்காத்தா பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்திருப்பதாக குறிப்பிட்டடுள்ளன. எந்திரனுக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்று வெளிமாநிலங்களில் அசுர வசூலை பெற்றிருப்பது இப்போதுதான் என்கிறார்கள்.

No comments:

Post a Comment