சோனாவும், எஸ்.பி.பி.சரணும் பாலியல் யுத்தம் நடத்திய அந்த பார்ட்டி மங்காத்தா பார்ட்டியே இல்லை; என்று மங்காத்தா படத்தின் டைரக்டர் விளக்கம் அளித்துள்ளார். நடிகை சோனா பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது அளித்த புகாரையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, மங்காத்தா பட வெற்றியை கொண்டாடுவதற்காக நடிகர் வைபவ் தனது வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த மது விருந்தில் பங்கேற்றபோதுதான் போதையில் எஸ்.பி.பி.சரண் என்னிடம் தவறாக நடக்க முயன்றார், என்று கூறினார். அதனைத்தொடர்ந்து மங்காத்தா பார்ட்டியில் சோனா & எஸ்.பி.பி.சரண் பாலியல் மோதல் என செய்திகள் வெளியாகின.
இந்த விஷயத்தை தற்போது ஐதராபாத்தில் இருக்கும் அஜித் கேள்விப்பட்டு செம அப்செட் ஆகி விட்டாராம். மங்காத்தாவின் டைரக்டர் வெங்கட்பிரபுவை அழைத்து, இந்த பார்ட்டி மங்காத்தா பார்ட்டின்னு இனிமே பேசினா நல்லாயிருக்காது என்று எச்சரித்ததாக தெரிகிறது. இதையடுத்து வெங்கட்பிரபு, தனது ட்விட்டரில் அது மங்காத்தா பார்ட்டி அல்ல என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு, இது நண்பர்களுக்குள் நடந்த விஷயம். சீக்கிரம் சரியாகிவிடும் என்றும் கூறியிருக்கிறார் வெங்கட்பிரபு!
No comments:
Post a Comment