மங்காத்தா வெற்றிக்குப் பிறகு தல அஜீத்தை பற்றி நாளுக்கு நாள் ஒரு புது தகவல் வந்த கொண்டே இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குவதில் புது ரேஸ் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் பில்லா 2 முடிந்த பிறகு அஜீத்தின் அடுத்த படத்தை ஜெயம் ராஜா இயக்கலாம் என செய்திகள் வெளியாகின. மேலும், நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் அடுத்த படத்திற்கான வேலையை உடனடியாக தொடங்க உள்ளதாக தெரிகிறது. காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறைவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி நிறைவேறினால் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிடும். இந்த செய்தி 'உண்மையா' இல்லை 'பொய்யா' என்பதை ஷங்கர் வாய் திறந்தால் மட்டுமே நிஜமாகும்.
No comments:
Post a Comment