ஹிந்தியில் அபார வெற்றி பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தினை, தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர். இப்படத்தில் இலியானா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தில் ஆடியோ ரிலீஸ் ஆகும் தேதி உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் அநேகமாய் அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இப்படத்தில் சத்தியராஜ், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கௌரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment