For Thala Thalapathy Fans



Thursday, September 29, 2011

"தல" க்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன்..................


மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்குமார் நடித்து வரும் படம் ‘பில்லா 2’. சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தனது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு , இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கோவா சென்றுள்ளது. இப்படத்தின் நாயகியாக மாடல் அழகி ஹூமா குரோஷி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இன்று கிடைத்த தகவலின்படி அவருக்கு பதிலாக புதிய கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் அழகிப்பட்டம் வென்ற பார்வதி ஓமனக்குட்டனை அஜித்திற்கு இப்படத்தில் புதுஜோடியாக்கி இருக்கிறார்களாம். ஹூமா குரோஷி கால்ஷீட் கொடுத்த தேதிகளின் படி படப்பிடிப்புக்கு வராமல் போனதால்தான், இந்த கதாநாயகி மாற்றம் என்று ‘பில்லா 2’ படப்பிடிப்பு குழுவினர் தெரிவிதுதள்ளனர்.

No comments:

Post a Comment