For Thala Thalapathy Fans



Wednesday, September 14, 2011

வேலாயுதம் படத்தில் காமெடி ஹன்சிகா

‘வேலாயுதம்’ படத்தில் ஹன்சிகாவின் காமெடி ரசிக்கும்படியாக இருக்கும் என்று டைரக்டர் ராஜா கூறினார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ள படம், ‘வேலாயுதம்’. விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன், சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கும் ராஜா கூறியதாவது: சாதாரண கிராமத்து இளைஞன், பெரிய தலைவன் ஆகும் அளவுக்கு எப்படி உயர்கிறான் என்பது கதை. விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து இது வேறுவிதமாக இருக்கும். காமெடி, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மெசேஜும் உண்டு. ஹன்சிகா, ஜெனிலியா இருவரது கேரக்டருமே பேசப்படும் விதமாக இருக்கும். இதுவரை அப்பாவி பெண்ணாக நடித்து வந்த ஜெனிலியா, இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் காமெடி, ரசிக்கும்படியாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரும் கொண்டாடும் விதமான படம் இது. ஆக்ஷன் காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. பிரியனின் கேமராவும் படத்துக்கு பக்கபலமாகியிருக்கிறது. பட வேலைகள் முடிந்துவிட்டன. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு ராஜா கூறினார்.

No comments:

Post a Comment