பில்லா-2 படத்தின் சண்டைக்காட்சிகளில் உயிரைப் பொருட்படுத்தாமல் நாயகன் அஜித் குமார் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். |
பில்லா-2 திரைப்படம் இன்னும் குறைவான மாதங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த சூடான தகவல்களையும் படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். பில்லா-2 ல் அஜித் குமார் ஹெலிகப்டரிலிருந்து தொங்கிய படியான காட்சியில் டூப் வேடமிடாமல் தானே நடித்து அசத்திக்காட்டியுள்ளார். இதுகுறித்து சண்டைப் பயிற்சியாளர் ஒருவர் கூறியதாவது, இக்காட்சியில் அஜித்குமார் ஹெலிகப்டரில் தொங்கிக் கொண்டு நடித்தபோது எங்கள் ரத்தம் உறைந்தது. நாயகர்கள் இதுபோன்ற காட்சிகளுக்கு டூப் வேடமிடுவார்கள். ஆனால் தல அஜித் குமார் தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் நடித்த காட்சியை மறக்க முடியாது. இக்காட்சியை இணையதளத்தில் ஒளிபரப்பிய சில வினாடிகளில் 40,000 பார்த்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
For Thala Thalapathy Fans
Thursday, April 26, 2012
உயிரைப் பொருட்படுத்தாமல் நடித்த அஜித்
Tuesday, April 24, 2012
நண்பனின் 100வது நாள் கொண்டாட்டம் ......
கொலிவுட்டில் இயக்குனர் ஷங்கரின் நண்பன் திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. |
கடந்த இரண்டு திகதிகளுக்கு(21.4.2012) முன்பு இந்நிகழ்ச்சி சென்னை ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. நண்பன் திரைப்படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக 100வது நாள் கடந்ததைக் கொண்டாடும் விதத்தில் நண்பன் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகளும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் தவிர, இதர நடிகர், நடிகைகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இளையதளபதி விஜய்க்கு இயக்குனர் தரணி நண்பன் பட விருதொன்றை வழங்கினார். நண்பனில் நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய சத்யனுக்கு நடிகர் கார்த்தி விருது வழங்கினார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராசுக்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் விருது வழங்கினார். இவர்கள் தவிர, நண்பன் படத்தில் பணியாற்றிய ஏனைய தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு இயக்குனர் ஷங்கர் விருதுகளை வழங்கினார். நண்பன் படத்தின் நாயகன்களான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களுடைய துணைவிகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். |
Saturday, April 21, 2012
அஜித் சூப்பர் சமையல் காரர்: பார்வதி ஓமனக்குட்டன் ....
பில்லா-2 படத்தில் 'தல' அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் அழகி பார்வதி ஓமனக்குட்டன், அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். |
கேரள மாநிலம் கோட்டயத்தை பிறப்பிடமாக கொண்ட பார்வதி ஓமனக்குட்டன், 2008ம் ஆண்டு மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்டு அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். தமிழில் பில்லா-2 முதல் படமாகும். இயக்குனர் ஷக்ரி டோலட்டி, ஓமனக்குட்டன் இப்படத்திற்கு பொருத்தமாக இருப்பார் எனக் கருதி தெரிவு செய்தார். இந்நிலையில் சமீபத்தில் பில்லா-2 படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதற்காக அஜித், படக்குழுவினர் அனைவருக்கும் விருந்து வைத்தார். இவ்விருந்தில் பார்வதியும் கலந்து கொண்டார். இவ்விருந்தைப்பற்றியும் அஜித்தைப் பற்றியும் ஓமனக்குட்டன் ஊடகத்தினரிடம் கூறியதாவது, அஜித் குமார் ஒரு நடிகர் மட்டுமல்ல, நல்ல சமையல் காரர். அஜித்தைப் போல அருமையாக, ருசியாக சமைத்து போடும் சமையல் கலைஞரை நான் பார்த்ததில்லை. அவர் சமைத்த உணவுகள் அனைத்தும் நன்கு பிடித்தது என்று பேட்டியளித்துள்ளார். |
விஜய் நடித்த நண்பன் திரைப்படம் 100 நாட்களை கடந்தது!ரசிகர்கள் உற்சாகம்!!...
.jpg)
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானது என்பது மட்டுமல்லாது இப்படத்திற்கான வெற்றியாக பல காரணங்களை சொல்லலாம்.மற்றைய தமிழ் படங்கள் போல் அல்லாது மிக பெரிய திரைப் பட்டாளாமே இப்படத்தில் மிக அருமையாக நடித்திருந்தனர்.நடிகர் ஜீவா,ஸ்ரீகாந்த்,நடிகை இலியானா,நடிகர் சத்யராஜ் மற்றும் சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர்,
அத்துடன் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஷின் இசையும் ஓன்று. இந்திப்படமான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் மொழிமாற்றப்படமாக இருந்த போதிலும் தமிழ் இரசிகர்களை திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Friday, April 20, 2012
அஜித் பிறந்த நாளில் “பில்லா 2” இசை வெளியீடு ...
அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் ...
தல அஜீத்தை வைத்து படமொன்றை இயக்க ஆசைப்படுவதாக இயக்குனர் கௌதம் மேனன் மீண்டும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. |
கொலிவுட்டில் மங்காத்தா வெற்றிக்குப் பிறகு அஜித் குமாரின் சந்தை மதிப்பு உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆரம்பத்தில் காக்க காக்க படத்திற்கு அஜீத்திடம் தான் கௌதம் திகதிகள் கேட்டார். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் சூர்யா நடித்தார். இதையடுத்து கௌதம் மேனன் அஜித்தை வைத்து படமெடுக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சமீபத்தில் அஜீத்குமாரும் கௌதமும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கௌதம், உங்களைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. வதந்திகள் வெளிவந்துள்ளன என தெரிவித்தார். இதற்கு அஜீத், வதந்திகளைப் பற்றி நான் கண்டுகொள்வதில்லை என்று சாந்தமோடு கூறியுள்ளார். மேலும் அஜீத்தை வைத்து படம் ஒன்று இயக்க ஆசையாக இருப்பதாகவும் கௌதம் தெரிவித்துள்ளார். |
Tuesday, April 17, 2012
சமைத்து, விருந்து பரிமாறி தானே பாத்திரங்களை கழுவி வைத்த அஜீத் !!!!
அஜீத் குமார் பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் விருந்தில் பயன்படுத்திய பாத்திரங்களை தானே கழுவி வைத்துள்ளார். |
தல அஜீத் குமார் நன்றாக சமைப்பார் அதுவும் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் தல விருந்தில் பயன்படுத்திய பாத்திரங்களை தானே கழுவி வைத்துள்ளார். மறுநாள் படபிடிப்புக்கு வந்த குழுவினர் இது குறித்து கேள்விப்ட்டு ஆடிப்போய் விட்டனராம். இதுகுறித்து இயக்குனர் ஆர்.டி. ராஜேசகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பாத்து ஆடிப்போய் விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை கவர்ந்து விட்டது. படப்பிடிப்புக்கு வந்தால் அவர் அனைவருக்கு வணக்கம் கூறிவிட்டு தான் தனது இடத்திற்கே செல்வார் என்றார். |
யோஹன் அத்தியாயம் ஒன்று திரைக்கதை தயாராகிவிட்டது: கௌதம் ....
அஜீத்துடன் சினிமாவில் போட்டி உண்டு: விஜய் .....
கொலிவுட்டில் ரஜினி, கமல் படங்களுக்குள் போட்டி இருப்பது போல் விஜய், அஜீத் இடையே போட்டி நிலவுவதாக நீண்ட காலமாக கூறப்படுகிறது. |
அஜீத், விஜய் இருவருமே திரையுலகில் தங்களுக்கென்று ஒரு பாணியை வைத்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் ஊடகத்தினர் கேட்டனர். அப்போது, அவர் கூறியதாவது, அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விடயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே. தூள் படத்தில் நடிக்க இயலாமல் போனதற்காக நான் வருத்தப்பட்டது உண்டு. அந்த படத்தின் கதையை இயக்குனர் தரணி என்னிடம் சொன்னார். அதில் நடிக்க வில்லை. படம் பார்த்தபோது சிறப்பாக இருந்தது. நான் நடிக்கும் துப்பாக்கி படம் சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்துக்கு பின்பு 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். |
Thursday, April 12, 2012
தளபதி ஆந்தம் இசை ஆல்பம் வெளியீடு.........
Sunday, April 8, 2012
அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பிரேசில் அழகி ....
அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் பிரேசிலை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கிறார். |
அஜித்தின் பில்லா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தூத்துக்குடியில் டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே படத்தின் கதை. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்நிலையில் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் நடனமாடி இருக்கிறார். இதுகுறித்து கேபிரியல் பெர்ட்டான் கூறுகையில், பில்லா படத்திற்கு முன்பே சக்ரி டோல்ட்டியை நான் சந்தித்து இருக்கிறேன். அப்போது அவரிடம் இந்திய படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறினேன். அதன்படி பில்லா-2 படத்தில் ஒரு பாட்டில் ஆட வாய்ப்பு கொடுத்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அஜித் கூட என்றதும் கூடுதல் சந்தோஷம். முதல் படத்திலேயே அஜித்துடன் நடனமா? என்று எனது நண்பர்களும் கூட ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய ஸ்டார் கூட எப்படி ஆடுவது என்று சற்று தயங்கினேன். ஆனால் அஜித்தே ரொம்ப என்கரேஜ் செய்து என்னை ஆட வைத்தார். அஜித் எப்பவும் தன் வேலையில் முழு ஈடுபாட்டோடு நடிப்பார். அதேசமயம் புதுமுகங்களையும் வரவேற்கும் நற்குணம் கொண்டவர் என்று தெரிவித்தார். மேலும் பில்லா-2 படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவி தேஜா மற்றும் பவன் கல்யாண் உடன் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். |
Thursday, April 5, 2012
யுவன் தயாரிப்பில் தல அஜித் ....
விஜயுடன் நடிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ...
கஜினி, 7ஆம் அறிவு ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தை இயக்கி வருகிறார். |
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் சம்பவங்களை கதைக்களமாக கொண்ட இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் கூறுகையில், இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என்றும், விரைவில் இப்படத்தின் தீம் மியூசிக் தயாராகி விடும் என்றும் தெரிவித்துள்ளார். பலபேர் இப்படத்தில் நடித்து வந்தாலும், இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருப்பது சிறப்பம்சமான விடயமாக பேசப்படுகிறது. மேலும் விஜய் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால், இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. |
Monday, April 2, 2012
யாராவது சிறப்பாக நடித்தால் உடனே விருந்து வைத்து பாராட்டும் விஜய்!! ...
யாராவது நடிகர், நடிகையர் சிறப்பாக நடித்தால் உடனே அவர்களை போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறாராம் இளைய தளபதி விஜய்.விஜய் தான் எந்தப் படம் பார்த்தாலும் அதில் சிறப்பாக நடித்திருக்கும் நடிகர், நடிகையரின் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து பாராட்டு மழை பொழிகிறாராம்.
விஜயே அழைத்து பாராட்டினால் அவர்களுக்கு உச்சி குளிராமலா இருக்கும். அது மட்டுமின்றி சில நடிகர், நடிகையர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மனம்விட்டுப் பாராட்டுகிறாராம்.
இன்னும் சிலரை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து வாழ்த்துகிறாராம். விஜய் போனில் பாராட்டினாலே அதை பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதிலும் அவர் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விருந்து கொடுத்து வாழ்த்தினால் யாருக்கு தான் பெருமையாக இருக்காது.
சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் பெயருக்கு வாவ், ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் மத்தியில் விஜய் சற்று வித்தியாசமானவர் தானே
விஜயே அழைத்து பாராட்டினால் அவர்களுக்கு உச்சி குளிராமலா இருக்கும். அது மட்டுமின்றி சில நடிகர், நடிகையர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மனம்விட்டுப் பாராட்டுகிறாராம்.
இன்னும் சிலரை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து வாழ்த்துகிறாராம். விஜய் போனில் பாராட்டினாலே அதை பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதிலும் அவர் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விருந்து கொடுத்து வாழ்த்தினால் யாருக்கு தான் பெருமையாக இருக்காது.
சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் பெயருக்கு வாவ், ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் மத்தியில் விஜய் சற்று வித்தியாசமானவர் தானே
Subscribe to:
Posts (Atom)