For Thala Thalapathy Fans



Monday, April 2, 2012

யாராவது சிறப்பாக நடித்தால் உடனே விருந்து வைத்து பாராட்டும் விஜய்!! ...

யாராவது நடிகர், நடிகையர் சிறப்பாக நடித்தால் உடனே அவர்களை போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறாராம் இளைய தளபதி விஜய்.விஜய் தான் எந்தப் படம் பார்த்தாலும் அதில் சிறப்பாக நடித்திருக்கும் நடிகர், நடிகையரின் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து பாராட்டு மழை பொழிகிறாராம். 

விஜயே அழைத்து பாராட்டினால் அவர்களுக்கு உச்சி குளிராமலா இருக்கும். அது மட்டுமின்றி சில நடிகர், நடிகையர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மனம்விட்டுப் பாராட்டுகிறாராம்.

இன்னும் சிலரை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து வாழ்த்துகிறாராம். விஜய் போனில் பாராட்டினாலே அதை பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதிலும் அவர் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விருந்து கொடுத்து வாழ்த்தினால் யாருக்கு தான் பெருமையாக இருக்காது.

சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் பெயருக்கு வாவ், ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் மத்தியில் விஜய் சற்று வித்தியாசமானவர் தானே

No comments:

Post a Comment