For Thala Thalapathy Fans



Thursday, April 5, 2012

யுவன் தயாரிப்பில் தல அஜித் ....


கொலிவுட் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய படமொன்றை தயாரிக்க உள்ளார்.
திரையுலகில் முதன்முறையாக தல அஜித், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இணைய உள்ளார்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.


பின்னர் அவர்களின் நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல் பெயரளவிலேயே இருந்தது.
இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத் குமாருடன் மீண்டும் இணைய போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.


இப்போது அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யுவன் ஷங்கர் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது.
அஜீத் குமார், வெங்கட் பிரபு மீண்டும் இணைய போகும் படத்தை ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிப்பார்களா என்பது விரைவில் முடிவாகிவிடும்.

No comments:

Post a Comment