பில்லா-2 படத்தின் சண்டைக்காட்சிகளில் உயிரைப் பொருட்படுத்தாமல் நாயகன் அஜித் குமார் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். |
பில்லா-2 திரைப்படம் இன்னும் குறைவான மாதங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த சூடான தகவல்களையும் படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். பில்லா-2 ல் அஜித் குமார் ஹெலிகப்டரிலிருந்து தொங்கிய படியான காட்சியில் டூப் வேடமிடாமல் தானே நடித்து அசத்திக்காட்டியுள்ளார். இதுகுறித்து சண்டைப் பயிற்சியாளர் ஒருவர் கூறியதாவது, இக்காட்சியில் அஜித்குமார் ஹெலிகப்டரில் தொங்கிக் கொண்டு நடித்தபோது எங்கள் ரத்தம் உறைந்தது. நாயகர்கள் இதுபோன்ற காட்சிகளுக்கு டூப் வேடமிடுவார்கள். ஆனால் தல அஜித் குமார் தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் நடித்த காட்சியை மறக்க முடியாது. இக்காட்சியை இணையதளத்தில் ஒளிபரப்பிய சில வினாடிகளில் 40,000 பார்த்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
For Thala Thalapathy Fans
Thursday, April 26, 2012
உயிரைப் பொருட்படுத்தாமல் நடித்த அஜித்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment