இளைய தளபதி விஜய்யின் ரசிகர்களில் 10 பேர் கொண்ட குழு, தளபதி ஆன்தம் என்ற இசை ஆல்பத்தை நேற்று வெளியிட்டார்கள்.
வாட்சன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த இசை ஆல்பத்திற்கு, இவர்களே நடனம் அமைத்து அசத்தியுள்ளார்கள்.
இந்த ஆல்பம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக வாட்சன் கூறியுள்ளார்.
சரிகமபதநி நிர்வாகி ராஜா, இந்தியாவில் முதன்முறையாக ரசிகர்கள் இசையமைத்து வெளியிட்ட முதல் ஆல்பம் இது தான் என்றார்.
நடிகர் விஜய் பேசும் போது, இந்த ஆல்பம் என்னை கவர்ந்துள்ளது. கமர்ஷியல் கண்ணோட்டத்தில் அல்லாமல் எல்லோரும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
இந்த ஆல்பத்தை உருவாக்கிய வாட்சன், தினேஷ், பாலாஜி மற்றும் பலருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மேலும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதலிடங்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாகவும் இளைய தளபதி தெரிவித்தார். |
No comments:
Post a Comment