அஜீத் குமார் பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் விருந்தில் பயன்படுத்திய பாத்திரங்களை தானே கழுவி வைத்துள்ளார். |
தல அஜீத் குமார் நன்றாக சமைப்பார் அதுவும் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் பில்லா 2 படக்குழுவினருக்கு அவர் விருந்து வைத்துள்ளார். அதில் தன் கையாலேயே சமைத்த கோழிக்கறி, மீன் வறுவல் என்று பல ஐட்டங்களை பரிமாறி அசத்தி விட்டாராம். படக்குழுவினர் நன்கு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டனர். ஆனால் தல விருந்தில் பயன்படுத்திய பாத்திரங்களை தானே கழுவி வைத்துள்ளார். மறுநாள் படபிடிப்புக்கு வந்த குழுவினர் இது குறித்து கேள்விப்ட்டு ஆடிப்போய் விட்டனராம். இதுகுறித்து இயக்குனர் ஆர்.டி. ராஜேசகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பாத்து ஆடிப்போய் விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை கவர்ந்து விட்டது. படப்பிடிப்புக்கு வந்தால் அவர் அனைவருக்கு வணக்கம் கூறிவிட்டு தான் தனது இடத்திற்கே செல்வார் என்றார். |
For Thala Thalapathy Fans
Tuesday, April 17, 2012
சமைத்து, விருந்து பரிமாறி தானே பாத்திரங்களை கழுவி வைத்த அஜீத் !!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment