For Thala Thalapathy Fans



Saturday, April 21, 2012

விஜய் நடித்த நண்பன் திரைப்படம் 100 நாட்களை கடந்தது!ரசிகர்கள் உற்சாகம்!!...

கடந்த பொங்கலுக்கு வெளியான நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.படம் வெளிவரும்போதே பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிக வெற்றிகரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானது என்பது மட்டுமல்லாது இப்படத்திற்கான வெற்றியாக பல காரணங்களை சொல்லலாம்.மற்றைய தமிழ் படங்கள் போல் அல்லாது மிக பெரிய திரைப் பட்டாளாமே இப்படத்தில் மிக அருமையாக நடித்திருந்தனர்.நடிகர் ஜீவா,ஸ்ரீகாந்த்,நடிகை இலியானா,நடிகர் சத்யராஜ் மற்றும் சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர்,

அத்துடன் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஷின் இசையும் ஓன்று. இந்திப்படமான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் மொழிமாற்றப்படமாக இருந்த போதிலும் தமிழ் இரசிகர்களை திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment