இந்நிலையில் துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு கெளதம் மேனன் இயக்கத்தில் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் இளையதளபதி நடிக்க இருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் கெளதம் மேனன், யோஹன் திரைக்கதை தயாராகி விட்டது.
விஜய் துப்பாக்கி படத்திற்கான திகதிகளை முடித்து விட்டால் யோஹன் படவேலைகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் யோஹன் படத்தில் விஜய் மட்டும் தான் தமிழ் நடிகர் என்றும் நாயகி வேற்று மொழி நபராக இருப்பார் எனவும் கௌதம் கூறியுள்ளார்.
இவர்களுடன் இணையும் பிற நடிகர், நடிகைகள் அனைவருமே வெளிநாட்டினர் என்று கௌதம் தெரிவித்துள்ளார்.
யோஹன் தமிழ் படமாக இருந்தாலும், இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘யோஹன்’ங்கிற இந்த கதாப்பாத்திரத்தை ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்தியாயம் 1, 2னு அடுத்தடுத்து இயக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment