For Thala Thalapathy Fans



Tuesday, April 24, 2012

நண்பனின் 100வது நாள் கொண்டாட்டம் ......


கொலிவுட்டில் இயக்குனர் ஷங்கரின் நண்பன் திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
கடந்த இரண்டு திகதிகளுக்கு(21.4.2012) முன்பு இந்நிகழ்ச்சி சென்னை ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.


நண்பன் திரைப்படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக 100வது நாள் கடந்ததைக் கொண்டாடும் விதத்தில் நண்பன் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகளும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.


இவர்கள் தவிர, இதர நடிகர், நடிகைகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இளையதளபதி விஜய்க்கு இயக்குனர் தரணி 
நண்பன் பட விருதொன்றை வழங்கினார். நண்பனில் நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய சத்யனுக்கு நடிகர் கார்த்தி விருது வழங்கினார்.


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராசுக்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் விருது வழங்கினார்.


இவர்கள் தவிர, நண்பன் படத்தில் பணியாற்றிய ஏனைய தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு இயக்குனர் ஷங்கர் விருதுகளை வழங்கினார்.


நண்பன் படத்தின் நாயகன்களான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களுடைய துணைவிகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment