For Thala Thalapathy Fans



Friday, April 20, 2012

அஜித் பிறந்த நாளில் “பில்லா 2” இசை வெளியீடு ...


கொலிவுட்டில் அஜீத்குமார், பார்வதி ஒமணக்குட்டன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “பில்லா 2” ஆகும்.
இந்நிலையில் மே 1ம் திகதி அஜீத்தின் பிறந்த நாளில் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பில்லா 2” ன் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.


மொத்தம் ஆறு பாடல்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இசைவெளியீட்டு விழாவை ஆரம்பத்தில் பெரிய நிகழ்ச்சியாகக் கொண்டாட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.


ஆனால் இப்போது ரஜினி வீட்டில் அல்லது மண்டபத்தில் எளிய நிகழ்ச்சி மூலம் இந்த இசை வெளியீடு நடக்கும் எனத் தெரிகிறது.


சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள “பில்லா 2” மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைகிறது பிரபல வர்த்தக நிறுவனமான இந்துஜா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment