For Thala Thalapathy Fans



Tuesday, April 17, 2012

அஜீத்துடன் சினிமாவில் போட்டி உண்டு: விஜய் .....


கொலிவுட்டில் ரஜினி, கமல் படங்களுக்குள் போட்டி இருப்பது போல் விஜய், அஜீத் இடையே போட்டி நிலவுவதாக நீண்ட காலமாக கூறப்படுகிறது.
அஜீத், விஜய் இருவருமே திரையுலகில் தங்களுக்கென்று ஒரு பாணியை வைத்து முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இருவர் படங்களும் திரைக்கு வரும் சமயம் அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு தோரணங்கள், கட் அவுட்கள் என அமைத்து அமர்க்களப்படுத்துவர்.


இந்நிலையில் அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் ஊடகத்தினர் கேட்டனர்.
அப்போது, அவர் கூறியதாவது, அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விடயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம்.


அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர்.


சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே.


தூள் படத்தில் நடிக்க இயலாமல் போனதற்காக நான் வருத்தப்பட்டது உண்டு. அந்த படத்தின் கதையை இயக்குனர் தரணி என்னிடம் சொன்னார். அதில் நடிக்க வில்லை. படம் பார்த்தபோது சிறப்பாக இருந்தது.
நான் நடிக்கும் துப்பாக்கி படம் சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்துக்கு பின்பு 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment