For Thala Thalapathy Fans



Friday, April 20, 2012

அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் ...


தல அஜீத்தை வைத்து படமொன்றை இயக்க ஆசைப்படுவதாக இயக்குனர் கௌதம் மேனன் மீண்டும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கொலிவுட்டில் மங்காத்தா வெற்றிக்குப் பிறகு அஜித் குமாரின் சந்தை மதிப்பு உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.


ஆரம்பத்தில் காக்க காக்க படத்திற்கு அஜீத்திடம் தான் கௌதம் திகதிகள் கேட்டார்.


ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் சூர்யா நடித்தார். இதையடுத்து கௌதம் மேனன் அஜித்தை வைத்து படமெடுக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் சமீபத்தில் அஜீத்குமாரும் கௌதமும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கௌதம், உங்களைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. வதந்திகள் வெளிவந்துள்ளன என தெரிவித்தார்.


இதற்கு அஜீத், வதந்திகளைப் பற்றி நான் கண்டுகொள்வதில்லை என்று சாந்தமோடு கூறியுள்ளார்.


மேலும் அஜீத்தை வைத்து படம் ஒன்று இயக்க ஆசையாக இருப்பதாகவும் கௌதம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment