For Thala Thalapathy Fans



Monday, October 31, 2011

MANKATHA TO BE REMADE IN HINDI...........


Actor Ajith’s 50th film, Mankatha, set the cash registers ringing in Kollywood, and now, the film is gearing up to repeat the magic in Bollywood.
Yes, the Venkat Prabhu film is all set to be remade in Hindi and the remake rights have already been bought by producer Gnanavel Raja, who has earlier presented smash hits like Siruthai, Singam and Naan Mahaan Alla.
Says Raja, “Yes, my production house has got the Hindi remake rights of Mankatha and we will soon be taking it to Bollywood. However, other details like the cast and crew are yet to be finalized. I’m working on the finer details now and the official announcement will be made sometime after November 15.”
The film also had Arjun, Trisha, Andrea, Premgi, Vaibhav, Anjali, Mahat, Subbu Arunachalam and Ashwin in important roles.
Interestingly, Raja’s production house was supposed to present Mankatha in Tamil Nadu initially during its release. Even ads were released in the media confirming the same.
However, things changed at a later stage and the film was released by Radhikaa in the state.
Now, looks like Raja has got a better deal!

இரண்டு கதாநாயகர்களுடன் நடிப்பதில் சந்தேகம்: விஜய்..!!!!!!!!!


இந்தியில் வெற்றியான த்ரி இடியட்ஸ் தமிழில் நண்பன் என்ற பெயரில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ளது.
இதில் மேலும் இரண்டு கதாநாயகர்கள் நடிக்கின்றனர். தொடர்ந்து இரண்டு கதாநாயகர்கள் படங்களில் நடிப்பீர்களா என்கிறார்கள்.
இதுபற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை, நண்பன் படம் பிடித்திருந்தது செய்தேன்.
மீண்டும் இரண்டு கதாநாயகர்கள் படம் நடிப்பது சந்தேகம்தான். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது பற்றி பேசி வருகிறேன் இதுபற்றிய அறிவிப்பு வரும்.
வேலாயுதம் படம் மூலக்கதையை ஆசாத் என்ற தெலுங்கு படத்திலிருந்து எடுத்துக்கொண்டு தமிழுக்காக புதிதாக கதை, திரைக்கதை அமைத்து இயக்கினார் ராஜா.
இப்படத்திற்காக ஜெயம் ரவியும் பணியாற்றி, கதையின் கருத்துக்களில் கலந்துகொண்டு சில காட்சிகளையும் கூறினார். இக்காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுவரை நான் நடித்த 52 படங்களில் இப்படம் பெரிய வெற்றி என்கிறார்கள் என்றும் எம்.ஜி.ஆர், ரஜினி பார்முலாவில் என் படம் இருப்பதாக சொல்கிறார்கள்.
அது எவர்கிரீன் வெற்றி பார்முலா. அதை பின்பற்றுவதில் தவறில்லை என்றார் என செய்தி தகவல்கள் வெளியாயின.

வேலாயுதம் படத்தை பற்றி கூறுகிறார் நடிகர் விஜய்........


நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது, இதுகுறித்து நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது நான் நடித்த 52 படங்களை விட `வேலாயுதம்' பெரிய வெற்றியாகியுள்ளது என்கின்றனர், ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.
இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.
ஜெயம்ரவியும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார், ஓஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.
விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம், படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
இந்த படம் வெற்றியானதற்கு எம்.ஜி.ஆர். பார்முலா படத்தில் உள்ளது என்கின்றனர், எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவர், அது தவறு அல்ல எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க நல்ல கதை அமையணும். அது `வேலாயுதம்' படத்தில் இருக்கின்றது என்றார்.
அடுத்து நண்பன் படம் பொங்கலுக்கு வெளியாகயுள்ளது, இணையதளங்களில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது, அதை தடுக்க எனது ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.
புதுப்படங்களை இது போல் இணையதளத்தில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. `காவலன்' படத்தில் என் பாணி இல்லை, சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்துள்ளார்.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.

நண்பனும் 3 உம்----பொங்கலுக்கு மோதல் ............

Sunday, October 30, 2011

பில்லா-2 ல் பிரேசில் அழகியின் கவர்ச்சி நடிப்பு


மங்காத்தாவின் வெற்றிக்குப் பின் அஜித் குமாரின் பில்லா-2 ல் பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகி பாருக் அப்துல்லா நடிக்கிறார்.
மங்காத்தாவின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் படம் பில்லா-2 ஆகும்.
தல அஜித்தின் அதிரடி நடிப்பில் இயக்குநர் ஷக்ரி டோலட்டி பில்லா-2 படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்.
பெமினா மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்ட் ரன்னர் என பல பட்டங்களை வென்ற பிரபல மாடலிங் அழகி பார்வதி ஓமனகுட்டன் அஜித்துக்கு நாயகியாக நடித்துள்ளார்.
அடுத்து பிரேசிலைச் சேர்ந்த அழகி புரூனா அப்துல்லாவும் பில்லாவுடன் காதல் டூயட் பாடி கொலிவுட்டில் தன் கவர்ச்சி காட்சிகளை துவக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே கரண் ஜோகரின் ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் பாலிவுட் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச முகவராக விஜய் -- கெளதம் மேனன் !!!!!!!!!!!!!!!!


யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் சர்வதேச முகவராக விஜய் நடிக்கிறார்.
முதன்முதலாக கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார்.
யோஹன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சர்வதேச முகவராக நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து கெளதம் மேனன் கூறியதாவது, எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியாக அமையவில்லை.
அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டவில்லை. கடைசி சந்திப்பில் இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி விடவே மாட்டேன்னு அவரே சொன்னார்.
நானும் அவரை வைத்து படம் பண்ண ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இதன் விளைவே யோஹன் அத்தியாயம் ஒன்று உருவானது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் விஜய்க்கு புதியது. இப்படம் விஜய்க்கு புதிய வெற்றிப்பாதையை உருவாக்கித்தரும்.
யோஹனுக்கான படப்பிடிப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ளது என கௌதம் தெரிவித்துள்ளார்.

வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு பற்றி புதிய தலைமுறையின் கருத்து..............

Saturday, October 29, 2011

வெற்றியை நோக்கி செல்லும் வேலாயுதம்...................


இந்த தீபாவளிக்கு இரண்டே படங்களில் வெற்றி பெறப் போவது 7 ஆம் அறிவா, வேலாயுதமா என்று ஏக எதிர்பார்ப்பு நிறைய இருந்தன.
ஆனால் ஓபனிங்கை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
இரண்டு படங்கள் ஓடும் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன, போட்டி பலமானது என்பதால் விஜய் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே வேலாயுதத்தை வரவேற்றார்கள்.
படம் வெளியான அனைத்துத் திரையரங்குகளிலும் இசைக்குழுவை இறக்கிவிட்டு காதுகளை சிதறவைக்கும் படி அமைந்தது வேலாயுதம்.
அதே அரைத்த மாவு என்றாலும் ச‌ரியான விகிதத்தில் ஜெயம் ராஜா தந்திருப்பதால் வேலாயுதம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
7 ஆம் அறிவு புதிய களம், புதிய முயற்சி. ஆனால் தொய்வான திரைக்கதை ரசிகர்களுக்கு பல நேரம் கொட்டாவியை வரவழைத்தது எதிர்பாராத ஏமாற்றம் கிடைத்தது.
7 ஆம் அறிவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அதேநேரம் வேலாயுதம் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. சுறா, வேட்டைக்காரனெல்லாம் ரசிகர்களையே முகம் சு‌ளிக்க வைத்தவை. ஆனால் அந்தவகையில் வேலாயுதத்தின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

வேலாயுதத்தில் சிக்ஸ் பேக்கா ? : விஜய் பதில்


விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ‘ வேலாயுதம் ‘, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார்.
இப்படம் குறித்து நடிகர் விஜய்யின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ( அக்டோபர் 28 ) சென்னையில் நடைபெற்றது.
அப்பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் பேசியது :
‘ வேலாயுதம் ‘ திரைப்படம் உலகம் எங்கிலும் மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. படம் பார்க்கும் அனைவருமே சந்தோஷப்படும் வகையில் அமைந்து இருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்னிடம் ‘படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று கூறினார். அவர் கூறியது போலவே படமும் அமைந்து இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
‘ வேலாயுதம் ‘ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் 6 பேக்கா என்று கேட்கிறார்கள்.அது எல்லாம் இல்லை. சிங்கிள் பேக் தான். இயக்குனர் கேட்டு கொண்டதற்கு இணங்க சட்டை இல்லாமல் நடித்தேன் அவ்வளவு தான்.
படத்தின் மொத்த கலெக்ஷன் ரிப்போட் இன்னும் ஒரு வாரத்தில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியிடப்படும். இரண்டாம் வாரத்தில் இன்னும் அதிக திரையரங்குகளில் படத்தினை திரையிட இருக்கிறோம்.
‘ வேலாயுதம் ‘ படத்தினை தொடர்ந்து ஷங்கர் சார் இயக்கத்தில் ‘ நண்பன் ‘ வெளிவர இருக்கிறது. அப்படம் முற்றிலும் வித்தியாசமான படம். முழுப்படமும் அனைவரையும் சிரிக்க வைக்கும். ஷங்கர் சார் ஒரு பிரம்மாண்டமான இயக்குனர்.
அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
ஒரே மாதிரி கதைகளில் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். ஏன்.. வேலாயுதம் படத்திற்கு முன்பு வெளிவந்த ‘காவலன்’ படம் வித்தியாசமான கதைக்களம் தானே. அப்படத்தில் குத்துப்பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் இல்லையே.”

சின்னத்திரையில் இளையதளபதி விஜய் – ஒரு கோடீஸ்வர கும்மாளம்


மந்திரவாதியை வச்சு மத யானையை மடக்குன மாதிரி, அம்மாம் பெரிய ஸ்டாரான விஜய்யை சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் வருகிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான இடத்திலிருந்து. இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்…. நிகழ்ச்சி என்ன, அதன் தரம் என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே ஆசுவாசமாகக் கூடும்.
வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சி மூலம் துட்டு பார்த்த புத்திசாலிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும். இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் நடத்தினார் நடிகர் சரத்குமார். அதன்பின் இதே மாதிரி நிகழ்ச்சிகளை வெவேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.
அவர்களின் சாய்ஸ் விஜய் மட்டுமே. எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இரங்கினாராம் விஜய். இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.

ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்!!!!!!!!!!!!!!!!


ஹாலிவுட் ஸ்டைலில் படங்கள் வெளியாக ஆரம்பித்து விட்ட கோலிவுட்டில், படத்தின் டைட்டிலிலும் அதே ஸ்டைல் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். விஜயின் யோஹகன் பட டைட்டில் டிசைன் ஹாலிவுட் ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டது. தற்போது அஜித்தும் தனது படத்தை ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாற்றும்படி உத்தரவு போட்டுவிட்டார்.
இதனால்அஜீத்துக்கு மீண்டும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படமான பில்லாவைத் தொடர்ந்து , அஜீத் தற்போது பில்லா பாகம் இரண்டில் நடித்து வ‌ருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருப்பதை அறிவிப்பதற்காக இன்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களில் ‘பில்லா-2′ எழுத்தை படத்தில் உள்ளதுப் போல் டிசைன் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.
‘பில்லா’ என்கிற இந்த டைட்டிலுல் வார்த்தையே இல்லாமல் அந்த லோகோவை மட்டும் போட்டு வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 27, 2011

டோகோமோ விளம்பரத்தில் விஜய் ................


ஷங்கர் இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – விஜய் !!!!!!!!!!!!!!!!


“நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா. இந்தப் படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு இயக்குநர் ராஜாவுக்கு வரும். பெரிய இயக்குநர்கள் இன்னும் நம்பி என்னை ஃபிக்ஸ் பண்ணுவாங்க!” – கண்களில் தொக்கி நிற்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.
ஷங்கர் – விஜய் காம்பினேஷன் சந்தோஷம்… எப்படி வந்திருக்கு ‘நண்பன்’?
ஷங்கர் சார் என் அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்பவே பழக்கம்தான். அப்பப்போ அவர்கிட்ட பேசி இருக்கேன். ஆனா, இன்னைக்கு இருக்குற ஷங்கர் வேற. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பிளான் பண்ற மெத்தட் சிம்ப்ளி சூப்பர்ப்!
ஷங்கர் சார் படத்தில் ஈஸியா நடிச்சிடலாம். ஏன்னா, அவரே நடிச்சுக் காட்டிருவார். அவர் இன்னைக்கு இந்திய அளவில் பிரபலமான டைரக்டர். அந்தப் பேர் சும்மா வந்தது இல்லை. என்னைக் கேட்டா, அவரை ‘இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்’னு சொல்வேன். நான் எப்பவோ அவரோட இயக்கத்தில் நடிச்சிருக்க வேண்டியது. ஆனா, வேற வேற காரணங்களால் தள்ளிப்போச்சு. இப்போ கச்சிதமா செட் ஆகி இருக்கு. ‘த்ரீ இடியட்ஸ்’ இந்திப் படம் மொழி எல்லை எல்லாம் தாண்டி இந்தியாவையே வசீகரிச்சது. அதை இன்னும் அழகேத்தி உருவாக்கி இருக்கிறார் ஷங்கர் சார்!
ஜீவா, ஸ்ரீகாந்த்கூட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?
ஜீவா ரொம்ப ஜாலி. டேக்குக்குப் போற அந்த விநாடி வரை கமென்ட் அடிச்சுட்டே இருப்பார். அவர் ஸ்பாட்ல இருந்தா யூனிட்டே சந்தோஷமா இருக்கும். ஸ்ரீகாந்த் முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட்தான். இப்ப இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். சத்யராஜ் சார்கிட்ட நிறையப் பேசிக்கிட்டே இருந்தோம். நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாகப் பழகினது ஃப்ரேமில் நல்லாவே தெரியும். நல்ல கதையில் இப்படி ஒரு டீமோட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போ ஷூட்டிங் முடிஞ்சதும் எங்க டீமை நான் ரொம்ப மிஸ் பண்றேன்!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க எப்படித் தயார் ஆகிட்டு இருக்கீங்க..?
பொது நண்பர் ஒருத்தர் மூலம்தான் கௌதம் மேனன் என்னை இயக்க ஆசைப்படுவதுபத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். சந்திச்சோம். அவர் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இங்கேயும் அமெரிக்காவிலும் நடக்கும் கதை. கௌதம் படம் எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும். ‘யோஹன்ஷ படத்துக்காக என் லுக், பாடி லாங்குவேஜ்னு எல்லாத்தையும் டியூன் பண்ணிட்டு இருக்கேன். அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போறேன். இப்படி ஷங்கர், முருகதாஸ், கௌதம்னு காம்பினேஷன் அமையுறது நல்ல விஷயம்!
உங்க படமும் உங்க நண்பர் சூர்யா நடிச்ச படமும் ஒண்ணா தீபாவளிக்கு வருதே?
ஆமா. ரெண்டு படங்களும் ஜெயிக்கணும்னு ரெண்டு பேரும் நினைப்போம். ரெண்டு யூனிட்டும் ஜெயிக்கிறதுக்கு என்னோட வாழ்த்துகள்ண்ணா!”

Monday, October 24, 2011

THE KING OF OPENINGSSSSSSSSSSSSSSSSSSSS


ரத்தத்தின் ரத்தமே….விஜய்க்காக எழுதிய வரிகள்..................


வேலாயுதம் படத்தில் விஜய்க்காக எழுதப்பட்டிருக்கும் ஒரு பாடல் இன்றைய இளம் தலைமுறையினரிடம் மட்டுமல்ல, அரசியல் அண்ணாச்சிகளுக்கும் இஷ்டமான பாடலாக மாறியிருக்கிறது. ரத்தத்தின் ரத்தமே என்பார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உடன்பிறப்பே என்பார் கலைஞர்.
இவ்விரண்டையும் சேர்த்து ஒரு பாடல், அதுவும் விஜய்யின் நடிப்பில் வந்தால் அது எத்தனை சலசலப்பை ஏற்படுத்தும்? அதுதான் நடந்திருக்கிறது இப்போது திருப்புகிற திசையில் எல்லாம். (விஜயகாந்தின் மக்களே… வை விட்டுட்டீங்களேங்ணா) இப்பாடலை எழுதிய அண்ணாமலை இந்த வரிகளை யோசித்த விதம் பற்றி கூறியதென்ன?
இந்த படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ‘ரத்தத்தின் ரத்தமே’ பாடல்தான் எனக்கு சவாலாக அமைந்தந்து. ஏனெனில், ‘அண்ணன் தங்கை பாசத்தை’ உணர்த்தும் வெற்றிப் பாடல்கள் திரைப்படங்களில் மிகவும் குறைவு. அதனால், இதை எப்படியாவது ஹிட் செய்தே ஆகவேண்டும் என்று நினைத்து ரொம்பவும் யோசித்து, ‘ரத்தத்தின் ரத்தமே’ என்ற எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வார்த்தையை முதல் வரியாக எழுதினேன்.
அந்த வார்த்தை ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த வார்த்தை என்பதால், மக்களிடம் அது எளிதாக சென்று சேரும் என்று எதிர்பார்த்தேன். அதே நேரத்தில் ஒரு தங்கையை நோக்கி அண்ணன் சொல்வதற்கும் அதைவிட பொருத்தமான வேறு வார்த்தை என்ன இருக்கிறது! அடுத்த வரியாக ‘என் இனிய உடன்பிறப்பே’ என்று கலைஞர் சொல்லும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.
அதுவும் அண்ணன் தங்கை பாசத்துக்கு மிகவும் பொருத்தமான வார்த்தைகள். மேலும், விஜய் சாருக்கு இந்த இரண்டு பெரிய கட்சிகளிலுமே ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதால், அதுவும் இந்தப் பாடலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இந்தப் பாடலில் வரும், ‘செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா’ என்கிற வரிகளை விஜய் ஆண்டனி சார் நான் எழுதிய நொடியிலேயே வெகுவாக ரசித்துப்பாராட்டினார். விஜய் சாருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்று அவர் மூலம் நான் அறிந்தபோது,பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

Saturday, October 22, 2011

அஜீத் படத்தை இயக்க ஆசை – கதையம்சம் உள்ள படங்களே ஜெயிக்கும்; டைரக்டர் ராஜா பேச்சு.....


விஜய்யின் வேலாயுதம் படத்தை டைரக்டு செய்த ஏ.ராஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-வேலாயுதம் எனக்கு 7வது படம். ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக அமைஞ்சிருக்கு. 6 படங்களை ரீமேக் செய்தேன். வேலாயுதம் படத்தை ஒரு மூலக்கதையை வச்சி என் சொந்த திரைக்கதையில் படமாக்கி இருக்கேன்.
என் தம்பி ஜெயம்ரவியை வச்சிதான் 5 படங்களை எடுத்தேன். இப்போது பெரிய ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து பண்ணி இருக்கேன். வேலாயுதம் என் திரையுலக வாழ்வில் முக்கிய படமா இருக்கும். இது எனது ஒன்றரை வருட கனவு படம். விஜய் என்னை அழைத்து படம் பண்ணலாம் என்றதும் இந்த கதையை உருவாக்கினேன். கமர்சியல் படங்களுக்கான வீரியத்தோடு புது பரிமாணமா இப்படம் இருக்கும்.
இதுவரை நான் எடுத்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து இருக்கின்றன. அதில் எனக்கு சந்தோஷம். எங்க வீட்டு பிள்ளை, பாட்ஷா, அந்நியன் போன்றவை நான் ரசித்த படங்கள். தனித்தனி பார்முலாக்களை அதில் பார்க்கலாம். “வேலாயுதம்” படத்தில் வேறொரு பார்மூலாவை பார்க்கலாம். விஜய் பிரமாதமாக நடித்துள்ளார். டான்ஸ், வசனம் எல்லாவற்றிலும் அசத்தி உள்ளார். நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும். அந்த கதைக்காக மெனக்கெடுகிறேன்.
தேசிய விருது வாங்க வேண்டும் என்பது என் கனவு. அதற்காக இன்னும் உழைப்பேன். விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகச்சிறந்த படமாக வேலாயுதம் இருக்கும். அஜீத்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன். இவ்வாறு ராஜா கூறினார்.

அஜீத்தைப் பாராட்டினேன் ..விஜய்யைச் சந்தித்தேன் !!!!!!!!!--சூர்யா .....

வேலாயுதம் படம் வெற்றி பெறும்: ஜெயம் ராஜாவின் நம்பிக்கை..............


காவலன் படத்தின் வெற்றிக்கு பிறகு இளையதளபதி விஜய் நடித்துள்ள 'வேலாயுதம்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்ஷிகா மொத்வானி இருவரும் நடித்துள்ளார்கள்.
முக்கியமான வேடத்தில் நடித்துள்ள சரண்யா மோகனை இயக்குனர் ராஜா இப்படத்தின் மூன்றாவது நாயகி என்று கூறியுள்ளார். படத்தில் வரும் கொமெடி, வில்லன் கதாபாத்திரங்களில் எல்லோரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும், தொழில்நுட்பக்கலைஞர்கள் கடுமையாக உழைத்திருப்பதையும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயம் ராஜா  குறிப்பிட்டுள்ளார்.
என் கேரியரில் இது முக்கியமான இடம், இது எனக்கு ஸ்பெசலான தீபாவளி, விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் எனக்கு ஏழாவது படம். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்த படம் பெரிய படமாக அமைந்துள்ளது.
மூலக்கதையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு இப்படத்தை பண்ணியிருக்கேன். இப்படத்தை பெரிய படமாக்க திரைக்கதையில் கவனம் செலுத்தி, அக்கறை காட்டி உழைத்துள்ளோம்.
தயாரிப்பாளார் ஒஸ்கார் ரவிச்சந்திரனின் பங்களிப்பில் பிரமாண்டமான படமாக 'வேலாயுதம்' உருவாகியுள்ளது. வீரியமான கமெர்சியல் படமாக வேலாயுதம் வந்துள்ளது. ஜெயம் ரவியை வைத்து நான் வெற்றி படங்களை கொடுத்த போது,'எனக்கு ஒரு ஹிட் படம் கொடுங்கள்'என்று கேட்டார் விஜய்.
அதனால் 'வேலாயுதம்' படத்தை இயக்கினேன். இது விஜய்க்கு 'மாஸ்' ஹிட் படமாக இருக்கும். பெரிய படஜெட் படங்கள் தற்போது அணிவகுத்து நிற்கின்றன. எத்தனை போட்டிகள் வந்தாலும் 'வேலாயுதம்' வெற்றி பெறும்.
எத்தனை 'ரா.ஒன்' வந்தாலும், எத்தனை (ஏழாம்)அறிவு வந்தாலும், வேலாயுதம் தனித்து நிற்கும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் வேலாயுதம் படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா. வேலாயுதம் படத்துக்கு பிறகு, கல்பாத்தி அகோரம் படக்கம்பெனி தயாரிப்பில் புது  படத்தை இயக்கும் ராஜா, அடுத்த கட்ட முயற்சியாக   'தேசிய விருதுக்காக' உழைக்க திட்டமிட்டுள்ளார்.

Friday, October 21, 2011

VIJAY IS PREFERRED BY MAHESH BABU TO DO REMAKE OF DOOKODU IN TAMIL


Mahesh Babu is riding high on the success of Dookudu which has broken the box office records and has been declared as a smash hit. With this film turning out to be a hit, there is a stiff competition to remake it in Tamil.
Dookudu’s hero Mahesh Babu is reported to prefer Vijay for this remake. The star apparently had spoken to Vijay and had pointed out that he would be more suitable for the Tamil version. Vijay is also said to be contemplating on this remake because his earlier remakes like Pokkiri and Ghilli were a hit.

Vijay at Osthi album release event!!!!!!!!!!!!!!

Vijay's surprising entry to the audio launch function of Osthi caused some irritating moments for the actor. The Kaavalan star's visit to the event almost landed him from getting mobbed but with the help of the other guests, he narrowly escaped from the trouble.

Reports say that soon after the music release function, few crazy fans forcefully stepped up on stage, where Vijay was still talking with the guests. Luckily, Vijay saw them coming his way and sensed that the situation might get worse, so, he asked Osthiunit members to bail him out of the mob. However, as his wished, he was safely ushered out of the venue.

However, it is said that Vijay made it to the function because of his friendship with Dharani, who directed the actor in Ghilli and Kuruvi. Adding to that his father SA Chandrasekhar and Silambarasan's father T Rajender know each other since a long time, which made the actor to grace the occasion.

Silambarasan, Vaali, T Rajender, Richa Gangopadhyay and others attended the Osthi audio launch function.

VIJAY IS COOL AND CONFIDENT...................


Suriya’s ‘7 Aum Arivu’ is setting forth for a bigger release as Udhayanidhi Stalin has acquired almost all the theatres across Chennai and every district of Tamil Nadu. On the pars, Aascar Ravichandran of Aascar International is also going for a bigger release of ‘Velayudham’. Though the screens are little lesser when compared to Suriya’s ‘7 Aum Arivu’, the producer is confident after a week of release, if the response is good, the movie will be automatically shifted to bigger screens.
Earlier, ‘Velayudham’ was supposed to open on a day before the festive occasion of Diwali. But now ‘7 Aum Arivu’ has taken a front seat as it will open on the evening of October 25 itself.
But Vijay remains cool and confident as he acclaims ‘Velayudham’ as a decorous family entertainer with the right mix of comedy, sentiments, family, action, glamour and romance.

Thursday, October 20, 2011

நண்பனில் சிட்டி ரோபோவாக விஜய்!!!!!!!!!!!!!!!!!11


ரா ஒன்னில் சிட்டி ரோபோவாக ஒரு காட்சியில் நடித்து திரும்பியிருக்கும். ரஜினிக்காக, அந்தப் படத்தை பார்க்க தயாராகி விட்டார்கள் ரஜினியின் ரசிகர்கள். ஆனால் இளைய தளபதி விஜய், சிட்டி ரோபோ கெட்-அப்பில் நடித்திருகிறார் என்பதுதான் கோலிவுட்டில் அணல் பறக்கப் போகும் செய்தி! எஸ்! ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் நண்பன் படத்தில் இடம்பெரும் ஒரு பாடல் காட்சியில்தான் சிட்டி ரோபோ தோற்றத்தில் ஒரு சரணம் முழுவதும் விஜய் தோன்ற இருக்கிறாராம்.
இதை விட இன்னும் ஹாட்டான ஒரு கெட் – அப்பையும் போடுகிறார் விஜய். அதேபாடலில் இந்தியன் கமலாகவும் கெட்-அப் போடுகிறாராம். இதுவரை மாறுபட்ட தோற்றங்கள் குறித்து விஜய் யோசித்ததே இல்லை. இதற்குக் காரணம் விஜயின் முகம் மிக இளமையன தோற்றத்துடன் இருகிறது என்று அவரது அப்பா சொல்லி வந்தார். ஆனால் விஜய் முதல் முறையாக சிக்ஸ் பேக் உடலுடன் வேலயுதம் படத்தில் நடித்திருகிறார்.
தற்போது நண்பனில் சோதனை முயற்சியாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ, இந்த இரண்டு கெட் அப்புகளையும் நாம் பாடல்காட்சிகளுக்கு பயன்படுத்தலாம் என்று இயக்குனர் ஷங்கர் சொன்ன போது மறுப்பு ஏதும் சொல்ல வில்லையாம் விஜய்! இந்த இரண்டு கெட் அப்புகளையும் ரசிகர்கள் திரையில் மட்டுமே கண்டு களிக்க முடியும். புகைபடத்தை கூட வெளியிடப் போவதில்லையாம்! ஷங்கர் விவரமான ஆளுதான்!

Tuesday, October 18, 2011

Ajith's Film Varalaru To Be Kannada !!!!!!!!!!!!!!!!


‘Thala’ Ajith’s film ‘Varalaarau’ directed by K S Ravikumar was a big hit in Tamil. The movie is now being remade in Kannada with Upendrareprising the role of Ajith in a dual role andSimran doing the act of Kanika. A R Rahman, who scored music for ‘Varalaaru’, is going to do the music for its Kannada remake. The Kannada film is titled ‘Godfather’!
The 2006 release Tamil film was also earlier titled ‘Godfather’ but to get the tax concession of the Government of Tamil Nadu the film was titled in Tamil as ‘Varalaaru’. Ajith played father – son dual role and Kanika and Asin paired them respectively. The film was produced by NIC Arts Chakravarthy.

நண்பன் பொங்கலுக்கு ரிலீஸ் -- ஷங்கர் !!!!!!!!!!!!!!


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடித்து இருக்கும் படம் ‘நண்பன்’. இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஜெமினி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. தீபாவளி ரிலீஸ் என்று முடிவு செய்துவிட்டு தொடங்கப்பட்ட படம் தான் ‘நண்பன்’. ஆனால் ‘வேலாயுதம்’ படத்தின் தாமதத்தால் தீபாவளி வெளியீடாக ‘வேலாயுதம்’ வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் ‘நண்பன்’ படத்தின் இசை மற்றும் படம் வெளியீடு எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் ஷங்கர் தனது ” நண்பன் படத்தின் படப்பிடிப்பு 100% முடிவடைந்தது. ‘வேலாயுதம்’ படம் தீபாவளி தினத்தன்று வெளிவர இருப்பதால், ‘நண்பன்’ படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.

Monday, October 17, 2011

வேலாயுதமா… ஏழாம் அறிவா… உங்க ‘ஓட்டு’ யாருக்கு???????




விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.
விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் தன் வழக்கமான கிளாஸிக் + மாஸ் அப்பீலோடு உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு. ஆரம்ப நாளில் இந்தப் படம் பற்றி சாதகமான கருத்துக்கள் வெளியானாலே போதும், படம் பிய்த்துக் கொண்டு ஓடும் (வசூலில்தாங்க!) என்பது பாக்ஸ் ஆபீஸ் கருத்து.
சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து என கலர்ஃபுல் லொகேஷன்கள், ஹீரோயின் ஸ்ருதி… அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அட்வான்ஸ் புக்கிங்கையும் எகிர வைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட அரங்குகளிலெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் குறித்த விசாரணை இப்போதே ஆரம்பமாகிவிட்டது.
இந்த இரு படங்களில் எது உங்கள் சாய்ஸ்… எந்தப் படம் இந்த தீபாவளி ரேஸில் அசத்தல் வெற்றியை ஈட்டித் தரப்போகிறது? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்தப் படம் இருக்கும் என்கிறீர்கள்?
ரெடி ஜூட்!...COMMENT PLEASEEEEEEEEEEEEEEEEEEEEEE

”எல்லாரு சென்னாகிதீரா..?”-பெங்களூரில் அசத்திய விஜய்!..........


வேலாயுதம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற இளைய தளபதி விஜய் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள வேலாயுதம் வரும் 26-ம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள பூர்ணிமா திரையரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய்க்கு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, விசில் பறக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திரையரங்கமே அதிரும்படி கரகோஷம் எழுப்பினர். இதைப் பார்த்து விஜய் நெகிழ்ந்து போனார்.
மேடையில் பேசிய விஜய் கூறியதாவது,
எல்லாரு சென்னாகிதீரா? (எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா) என்று கன்னடத்தில் நலம் விசாரிக்க ரசிகர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. பெங்களூர் வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தைப் போன்ற வரவேற்பு இங்கும் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதுமே பேராதரவு அளித்து வருகின்றனர்.
எனது நண்பர் சிவராஜ் குமாரின் 100வது படமான ஜோகையா அறிமுக விழாவுக்கு வந்திருந்தபோது கூட எனக்கு உற்சாக வரவேற்பளித்தீர்கள். நீங்கள் என் படங்கள் எத்தனையோ பார்த்திருப்பீர்கள். ஆனால் வேலாயுதம் அவற்றைவிட வித்தியாசமானது என்றார்.
விஜய் பேசப், பேச ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விஜய் வருகையால் பூர்ணிமா திரையரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது

உதயநிதிக்கு கைகொடுக்கும் இளையதளபதி விஜய்!!!!!!!!!!!

திமுகவில் தளபதி என்று அழைக்கபடுபவர் முக ஸ்டாலின். அவரது மகன் உதயநிதிக்கு தமிழ்சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படும் விஜய் பேருதவி செய்து, சினிமாவிலும், அரசியலிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர பகைவர்களும் இல்லை என்பதை நிரூபித்து இருகிறார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் விஜயின் பஞ்ச் வசனங்களை வெட்டி எறிந்தது அதனை வாங்கி வெளியிட்ட சன் டிவி. அதேபோல காவலன் படத்தை சக்‌ஷேனா தனது கையாள் ஐய்யப்பன் மூலம் ரிலீஸ் தேதியில் வெளிவர முடியாமல் தடுத்தார் என்று வழக்கு நிலுவையில் உள்ளது.


திமுக ஆட்சியில் விஜய்க்கும் அவரது படங்களுக்கும் நெருக்கடிகள் தரப்பட்டதால் நொந்துபோன விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தார். இதனால் விஜய் மீது திமுக தலைவர் கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின் ஆகியோர் விஜய் மீது இப்போதும் கடும் கோபத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த அரசியல் விளையாட்டுக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலின் – விஜய் இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தொடங்கி நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் வேலாயுதம் படத்துடன், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் டிரைலரை இணைத்து வெளியிடுமாறு விஜயிடம் உரிமையுடன் கேட்டாராம் உதயநிதி. விஜயும் அதற்கு உடனே ஒகே சொல்லிவிட தற்போது வேலாயுதம் படத்துடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் டிரைலர் இணைக்கப்படுகிறது.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் இணையத்தில் ” ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்துடனும் வெளிவர இருக்கிறது. விஜய்க்கும், ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார். சூரியாவின் 7-ஆம் அறிவு படத்துடனும் ஒரு கல் ஒரு கண்ணாடி டிரைலர் இணைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞரின் பேரனுக்கு மார்கெட்டிங் உத்திகளை சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?!

பில்லா 2 சூட்டிங்கில் அஜித்துக்கு ரத்த காயம்

பில்லா 2 படத்தின் சூட்டிங்கில் நடிகர் அஜித்துக்கு கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். அஜித் ஆசை ஆசையாக நடித்து வரும் படம் பில்லா -2. பில்லா படத்தின் தாறுமாறான ஹிட்டுக்கு பிறகு மீண்டும் அதே சப்ஜெக்ட்டில் நடிக்க ஆசைப்பட்டார் அஜித். அதன் விளைவாக உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் படம்தான் இந்த பில்லா-2. இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் அஜித் ஜேடியாக பார்வதி ஒமணக்குட்டன் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வரும் சூட்டிங்கில் கடந்த சில தினங்களாக சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவாவில் நடைபெறும் இந்த சூட்டிங்கின்போது அஜித்துக்கு அடிபட்டு கைகள் கிழிந்து ரத்தம் கொட்டியது. ஐஸ்வாட்டர் பாட்டில் ஒன்றால் எதிரியின் தலையில் அடிப்பது போல காட்சி. அது டம்மி பாட்டில்தான் என்றாலும் வாகாக அடிக்கவில்லை என்றால் கையை கிழிக்கும் அபாயம் இருந்தது. ஜாக்கிரதையாகவே இந்த காட்சியை அணுகிய அஜித், எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்து கைகளை கிழித்துக் கொண்டார். ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித், தற்போது ஓய்வு எடுத்து வருகிறாராம்.

Sunday, October 16, 2011

Vijay’s Velayutham a clean family entertainer./////////////////


Velayutham has been censored and the officials have awarded it a U certificate. The film is a clean family entertainer and therefore the Censor Board officials granted it a U certificate. With the censor certification process over, Velayutham is gearing up for release this Diwali.
Velayutham is a remake of the Telugu blockbuster Azad but director Jayam Raja has made several changes to the script to suit the Tamil audiences.
The film has Vijay playing the lead star and his co-stars in it are Genelia, Hansika and Saranya Mohan. Vijay fans must be thrilled with the news that the film has crossed a hurdle and is gearing up for release!

After vacation, Vijay gets back to businessssssssssssssssssss

Vijay recently came back to Chennai after a brief vacation in Dubai. He went to Dubai to unwind after the grueling schedules for Velayutham and Nanban are over. Both the movies are close to getting wrapped up and will be released this year.


With back-to-back movie releases, Vijay is also busy discussing about his next project with AR Murugadoss. The director, who recently finished 7aum Arivu to be released for Diwali, is discussing the script and other details with Vijay. An official announcement on the movie’s commencement date is expected soon.............

Saturday, October 15, 2011

GK Media bags 'Velayudham' USA rights!!!!!!!!!!!!!!!!1


A press report read that GK Media has acquired the theatrical rights of Ilayathalapathy Vijay's film, 'Velayudham' in USA.
The film will portray drastic changes in Vijay's character as it progresses. While Vijay is introduced to the audiences initially as a simple villager who is a milkman, his visiting Chennai changes it all for him as he dons the role of a superhero to eradicate corruption in the city and put an end to the baddies.
Director Jayam Raja has expressed that the film will be family entertainer and also be different from earlier vigilante hits in Tamil cinema like 'Indian' and 'Anniyan', as 'Velayudham' has a whole-new approach to the script.
'Velayudham' that boasts off a huge budget stars Vijay, Hansika Motwani and Genelia in the lead roles with music by Vijay Antony. The film has a number of comedians including Santhanam. Stunts are choreographed by Tom Delmar from Hollywood and Stunt Silva and there's a train fight sequence scene in the film which is much-expected.
In USA, the ticket price for the film is only 10$, also, kids who are below 12 years of age get to watch the film for free! This is applicable to all Big Cinemas locations whereas in some centers restrictions might apply. Please check with your local exhibitor for other details.

வேலாயுதம் வெளியீடும், விஜய் ரசிகர்களின் கருத்துக் கணிப்பும்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!!!!!!!


வேலாயுதம் படம் தீடீரென்று தீபாவளி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள உத்தேசித்தாக உறுதியான தகவல்கள் உலா வந்தன கோடம்பாக்கத்தில். திடீர் விலகலுக்கு காரணமாகச் சொல்லப்பட்டத்து சரியான தியேட்டர்கள் அமையவில்லை என்பது. ஆனால் நிஜமான காரணம் 7-ஆம் அறிவு படத்துக்கு வேலாயுதம் போட்டியாக அமைய முடியாது என்று தெரிய வந்ததாலேயே இந்த முடிவை எடுத்தார்கள் என்று தகவல்கள் கசிந்தன.
7-ஆம் அறிவு படம், கதை, திரைக்கதை, எண்டெர்டெயிண்மெண்ட், மேக்கிங், என எல்லாவற்றிலும் பிரிலியண்டான படமாக இருக்கிறது என்ற தகவல் விஜய் வட்டாரத்துக்கு தெரிய வந்ததும் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால் வேலாயுதம் தீபாவாளிக்கு பின் வாங்கினால் ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு செல்வாக்கு குறையும் என்று மன்ற நிர்வாகிகள், விஜயின் அப்பா எஸ்.ஏ.சியிடம் கருத்து சொல்லியிருகிறார்கள். இதனால் ஒவ்வோரு மாவட்டத்திலும் குறைந்தது 100 விஜய் ரசிகர்களிடம், வேலாயுதம் தீபாவளிக்கு வராவிட்டால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று கேட்டு கருத்துக் கணிப்பு நடத்தசொன்னார்களாம்.
இரண்டே நாட்களில் இந்த கருத்து கணிப்பை எடுத்து முடித்து அனுப்பி வைத்தார்களாம் மன்ற நிர்வாகிகள். இந்த அதிரடிக் கருத்து கணிப்பில் தெரிய வந்திருப்பது “ 7-ஆம் அறிவு படத்துடன் வந்தால்தான் உண்மையான போட்டியாக இருக்கும். வேலாயுதம் தீபாவளிக்கு வெளியாக விட்டால், சூரியா படத்துக்காக பயந்து பின் வாங்கி விட்டதாக இருக்கும். இது நமக்கு பின்னடைவாகி விடும் என்று 80 சதவிகிதம் ரசிகர்கள் கருத்து சொல்லியிருகிறார்களாம்.
உண்மையில் வேலாயுதம் விஜய் ரசிகர்களின் இந்த நம்பிக்கையை காப்பாற்றுமா, 7-ஆம் அறிவுக்கு சரியான போட்டியாக அமையுமா என்று வேலாயுதம் இயக்குனர் வட்டாரம், விஜய் ரசிகர்கள், பொதுவான சினிமா ரசிகர்கள் என நாம் ஒரு சிறு கருத்துக் கணிப்பில் இறங்கினோம். அதில் நமக்குகிடைத்தன பல அதிரடித் தகவல்கள்.
நிச்சயமாக விஜயின் முந்தைய படங்களை போல் அல்லாமல் வேலாயுதம் மாஸ் எண்டெர்டெயினர் என்பதில் சந்தேகமில்லை. இம்முறை விஜய் அளவாக படம் முழுவதும் பேசியிருகிறார். ஏற்கனவே வந்து ஹிட்டாகியிருக்கும் பாடல்களையும், சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் வேலாயுதம் ட்ரைலரையும் பார்த்தபின்பு, படம் தோற்பது உறுதி என்று கூறி வரும் பலருக்கும், வேலாயுதம் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருகிறது என்கிறார்கள். அத்துடன் எல்லோரும் விஜயின் சிக்ஸ் பேக் பற்றியும்பேசிக்க்கொண்டிருகிறார்கள். அது ஊசி, கிராபிக்ஸ் என்று சிலர் கூறினாலும் நிச்சயம் அப்படி கூறுபவர்களுக்கும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.
அதேசமயம் விஜய் படத்தை ஒருமுறை பார்க்க விரும்பும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்களிடம், வேலயுதம் படத்தின் டிரைலர் பல கேள்விகளைஎழுப்பியுள்ளது! அதாவது இந்த அளவு ஆக்‌ஷனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான் அந்தக் கேள்வி!
இதற்கு எடுத்துக்காட்டாக காவலனுக்கு முன்னர் வந்த ஐந்து படங்களின் தோல்வியை கூறினாலும் அவற்றின் தோல்விக்கு ஆக்‌ஷன் மட்டுமே காரணமாகாது. குருவி போன்ற அதீத, மக்கள் நம்பமுடியாத, லாஜிக் இல்லாத ஆக்‌ஷனும், ஓவர் பஞ்ச் வசனங்களுமே அவற்றின் தோல்விக்கு காரணமாக இருந்தன. அதை விட அவற்றில் கதை குறைவாகவும் , சில நல்ல கதைகள் கூட விஜய்க்காக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அதனாலேயே சில படங்கள் விஜய் ரசிகர்களாலேயே ஏற்கமுடியாமல் போய்விட்டது என்பது இவர்கள் கருத்து.
வேலாயுதத்துக்கும் இதே நிலையா என்று விஜய் ரசிகர்களிடம் கேட்டால் கொதித்துப் போகிறார்கள்.…! நிச்சயமாக விஜய் படங்களின் ஆக்‌ஷன் காட்சிகள் தோல்விக்கான காரணமாக இருந்ததில்லை. படத்தின் கதையில் பலகீனம் இருந்தால் விஜய் படங்கள் தோற்று இருக்கலாம். ஆனால் விஜய் போல ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம் காட்ட இங்கே அர்ஜூன் மட்டும்தான் இருகிறார். ஆனால் எங்கள் விஜயிடம் ஆக்‌ஷனோடு ஸ்டைலும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
வேலாயுதம் படத்தின் கதை தெலுங்கு ஆசாத்தின் தழுவல் என்றாலும், இன்றைய காலகாட்டத்துக்கு ஏற்ப அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏற்கனவே இயக்குனர் ராஜா கூறியிருக்கிறார். விஜயின் அதீத பில்ட் அப்புகள், ஓவர் பஞ்ச் வசனங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் வேலாயுதம் பெரிய வெற்றிதான்! அதேநேரம் கில்லியில் அதீத பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையாலும், தேவையான இடங்களில் மாத்திரம் பஞ்ச் வசனங்களை பயன்படுத்தியதாலும் அது விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களும் ஏற்கக்கொள்ளப்பட்டது என்கிறார் கோலிவுட்டின் பிரபல சினிமா விமர்சகர்.
ஆக 7-ஆம் அறிவு, வேலாயுதம் கொஞ்சம் சரிக்கு சரி போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள். பார்க்கலாம்…

நண்பனுக்காக குரல்கொடுக்கும் அஜித்


ஒருவழியாக அஜித் அடுத்து நடிக்கவிருப்பது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில்! இது கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள், அஜித் அடுத்து நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அலுவலக வட்டாரத்தில். இதை உறுதிபடுத்தும் விதமாக விஷ்ணுவர்த்தனும் தனது ‘பஞ்சா’ தெலுங்குபட வேலைகளுக்கு மத்தியில் ரத்னம் அலுவலகத்துக்கு விசிட் அடித்து, தயாரிப்பாளருடன் ஒரு மணிநேரம் உரையாடிச் சென்றிருகிறாராம்!
இன்னொருபக்கம் விஷ்னுவுக்கும் தனக்குமான நட்பின் நெருக்கத்தை தனது குரல் மூலம் உறுதிபடுத்தி விட்டார் அஜித்! அஜீத் ‘பில்லா இரண்டாம் பாகம்’ படத்தில் படு பிசியாக இருக்கிறார். அதே போல இயக்குனர் விஷ்ணுவர்தன் சிரஞ்சீவி தம்பியை வைத்து ‘பஞ்சா’ என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை தமிழில் டப் செய்கிறார் விஷ்ணுவர்தன். ஹீரோ பவன் கல்யாணுக்கு தமிழில் குரல் கொடுக்க யாரை அணுகலாம் என்று யோசித்த அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது நம்ம ‘தல’ தான்.
‘பில்லா இரண்டாம் பாகம் படத்தை முதலில் இயக்க இருந்து பின்னர், விஷ்னுவர்த்தன் விலகினாலும், அவருக்கும், அஜீத்துக்கும் இடையேயான நட்பு அப்படியே இருக்கிறது யார் கண்ணும் படாமல். இதனால் கொஞ்சமும் தயங்காமல் அஜீத்தை அணுகி பவன் கல்யாணுக்கு கொஞ்சம் குரல் கொடுங்களேன் என்று கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

வேலாயுதம் படத்திற்கு யு சான்றிதழ்..............


விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்துக்கு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். விஜய் – ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம், சரண்யா மோகன் நடிப்பில், ‘ஜெயம்’ ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேலாயுதம்’ படத்தை, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் வரும் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாகிறது. படத்தை தணிக்கைக் குழுவினருக்கு நேற்று திரையிட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த பிறகு, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருப்பதாகக் கூறிய அதிகாரிகள், படத்தில் சண்டைக் காட்சிகளில் மட்டும் சில வெட்டுக்களைக் கொடுத்தனர்.
பின்னர் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என ‘யு’ சான்று அளித்தனர். இந்தப் படம் திங்களன்றுதான் சென்சாருக்கு திரையிடுவதாக இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, நேற்றே திரையிடப்பட்டுவிட்டது.
மக்கள் மனசுல பதியும் ஆயுதம்!

Thursday, October 13, 2011

வேலாயுதம் படத்தில் நடித்த போது எந்த மோதலும் இல்லை :ஹன்ஷிகா மோத்வானி ...

வேலாயுதம் படத்தில் நடித்தபோது, ஜெனிலியாவுடன் எந்த மோதலும் ஏற்படவில்லை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் "வேலாயுதம்". ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் வேலாயுதம் படப்பிடிப்பின் போது ஜெனிலியாவும், ஹன்சிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக ஒரு பேட்டியில் ராஜா கூறியிருந்தார். ஆனால் இதை ஏற்கனவே ஜெனிலியா மறுத்து இருந்தார். இப்போது ஹன்சிகாவும் இதனை மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தின் சூட்டிங்கின் போது எனக்கும், ஜெனிலியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது. மேலும் இதனை டைரக்டர் ராஜா‌வே சொன்னபோது அதிர்ச்சியானது. எதற்கு ராஜா அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. உண்மையில் எங்கள் இருவருக்கும் இடையே எந்த மோதலும் கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் சிம்புவுடன் "வேட்டை மன்னன்" படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, படத்தின் கதை பிடித்திருந்தது. அதனால் உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி இப்போது கூற முடியாது என்றார். 

Santhanam Leads 30 Comedians In VELAYUDHAM.........


Vijay starrer Velayutham has Santhanam handling the comedy department. But what is news now is that the film is going to be a complete laugh riot because there are 30 comedians in it with Santhanam leading the pack.


This detail was let out recently. Velayutham is gearing up for Diwali release. The film’s director Jayam Raja says that it will go in for Censor certification on 20th October and the release date will be announced officially after that.