யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் சர்வதேச முகவராக விஜய் நடிக்கிறார். |
முதன்முதலாக கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். யோஹன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சர்வதேச முகவராக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து கெளதம் மேனன் கூறியதாவது, எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியாக அமையவில்லை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டவில்லை. கடைசி சந்திப்பில் இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி விடவே மாட்டேன்னு அவரே சொன்னார். நானும் அவரை வைத்து படம் பண்ண ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இதன் விளைவே யோஹன் அத்தியாயம் ஒன்று உருவானது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் விஜய்க்கு புதியது. இப்படம் விஜய்க்கு புதிய வெற்றிப்பாதையை உருவாக்கித்தரும். யோஹனுக்கான படப்பிடிப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ளது என கௌதம் தெரிவித்துள்ளார். |
For Thala Thalapathy Fans
Sunday, October 30, 2011
சர்வதேச முகவராக விஜய் -- கெளதம் மேனன் !!!!!!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment