For Thala Thalapathy Fans



Saturday, October 29, 2011

வேலாயுதத்தில் சிக்ஸ் பேக்கா ? : விஜய் பதில்


விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ‘ வேலாயுதம் ‘, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார்.
இப்படம் குறித்து நடிகர் விஜய்யின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ( அக்டோபர் 28 ) சென்னையில் நடைபெற்றது.
அப்பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் பேசியது :
‘ வேலாயுதம் ‘ திரைப்படம் உலகம் எங்கிலும் மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. படம் பார்க்கும் அனைவருமே சந்தோஷப்படும் வகையில் அமைந்து இருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்னிடம் ‘படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று கூறினார். அவர் கூறியது போலவே படமும் அமைந்து இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
‘ வேலாயுதம் ‘ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் 6 பேக்கா என்று கேட்கிறார்கள்.அது எல்லாம் இல்லை. சிங்கிள் பேக் தான். இயக்குனர் கேட்டு கொண்டதற்கு இணங்க சட்டை இல்லாமல் நடித்தேன் அவ்வளவு தான்.
படத்தின் மொத்த கலெக்ஷன் ரிப்போட் இன்னும் ஒரு வாரத்தில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியிடப்படும். இரண்டாம் வாரத்தில் இன்னும் அதிக திரையரங்குகளில் படத்தினை திரையிட இருக்கிறோம்.
‘ வேலாயுதம் ‘ படத்தினை தொடர்ந்து ஷங்கர் சார் இயக்கத்தில் ‘ நண்பன் ‘ வெளிவர இருக்கிறது. அப்படம் முற்றிலும் வித்தியாசமான படம். முழுப்படமும் அனைவரையும் சிரிக்க வைக்கும். ஷங்கர் சார் ஒரு பிரம்மாண்டமான இயக்குனர்.
அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
ஒரே மாதிரி கதைகளில் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். ஏன்.. வேலாயுதம் படத்திற்கு முன்பு வெளிவந்த ‘காவலன்’ படம் வித்தியாசமான கதைக்களம் தானே. அப்படத்தில் குத்துப்பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் இல்லையே.”

No comments:

Post a Comment