For Thala Thalapathy Fans



Saturday, October 15, 2011

வேலாயுதம் படத்திற்கு யு சான்றிதழ்..............


விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்துக்கு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். விஜய் – ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம், சரண்யா மோகன் நடிப்பில், ‘ஜெயம்’ ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேலாயுதம்’ படத்தை, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் வரும் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாகிறது. படத்தை தணிக்கைக் குழுவினருக்கு நேற்று திரையிட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த பிறகு, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருப்பதாகக் கூறிய அதிகாரிகள், படத்தில் சண்டைக் காட்சிகளில் மட்டும் சில வெட்டுக்களைக் கொடுத்தனர்.
பின்னர் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என ‘யு’ சான்று அளித்தனர். இந்தப் படம் திங்களன்றுதான் சென்சாருக்கு திரையிடுவதாக இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, நேற்றே திரையிடப்பட்டுவிட்டது.
மக்கள் மனசுல பதியும் ஆயுதம்!

No comments:

Post a Comment