வேலாயுதம் படத்தில் நடித்தபோது, ஜெனிலியாவுடன் எந்த மோதலும் ஏற்படவில்லை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் "வேலாயுதம்". ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் வேலாயுதம் படப்பிடிப்பின் போது ஜெனிலியாவும், ஹன்சிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக ஒரு பேட்டியில் ராஜா கூறியிருந்தார். ஆனால் இதை ஏற்கனவே ஜெனிலியா மறுத்து இருந்தார். இப்போது ஹன்சிகாவும் இதனை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தின் சூட்டிங்கின் போது எனக்கும், ஜெனிலியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது. மேலும் இதனை டைரக்டர் ராஜாவே சொன்னபோது அதிர்ச்சியானது. எதற்கு ராஜா அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. உண்மையில் எங்கள் இருவருக்கும் இடையே எந்த மோதலும் கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் சிம்புவுடன் "வேட்டை மன்னன்" படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, படத்தின் கதை பிடித்திருந்தது. அதனால் உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி இப்போது கூற முடியாது என்றார்.

No comments:
Post a Comment