திமுகவில் தளபதி என்று அழைக்கபடுபவர் முக ஸ்டாலின். அவரது மகன் உதயநிதிக்கு தமிழ்சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படும் விஜய் பேருதவி செய்து, சினிமாவிலும், அரசியலிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர பகைவர்களும் இல்லை என்பதை நிரூபித்து இருகிறார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் விஜயின் பஞ்ச் வசனங்களை வெட்டி எறிந்தது அதனை வாங்கி வெளியிட்ட சன் டிவி. அதேபோல காவலன் படத்தை சக்ஷேனா தனது கையாள் ஐய்யப்பன் மூலம் ரிலீஸ் தேதியில் வெளிவர முடியாமல் தடுத்தார் என்று வழக்கு நிலுவையில் உள்ளது.
திமுக ஆட்சியில் விஜய்க்கும் அவரது படங்களுக்கும் நெருக்கடிகள் தரப்பட்டதால் நொந்துபோன விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தார். இதனால் விஜய் மீது திமுக தலைவர் கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின் ஆகியோர் விஜய் மீது இப்போதும் கடும் கோபத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த அரசியல் விளையாட்டுக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலின் – விஜய் இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தொடங்கி நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் வேலாயுதம் படத்துடன், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் டிரைலரை இணைத்து வெளியிடுமாறு விஜயிடம் உரிமையுடன் கேட்டாராம் உதயநிதி. விஜயும் அதற்கு உடனே ஒகே சொல்லிவிட தற்போது வேலாயுதம் படத்துடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் டிரைலர் இணைக்கப்படுகிறது.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் இணையத்தில் ” ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்துடனும் வெளிவர இருக்கிறது. விஜய்க்கும், ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார். சூரியாவின் 7-ஆம் அறிவு படத்துடனும் ஒரு கல் ஒரு கண்ணாடி டிரைலர் இணைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞரின் பேரனுக்கு மார்கெட்டிங் உத்திகளை சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?!
No comments:
Post a Comment