காவலன் படத்தின் வெற்றிக்கு பிறகு இளையதளபதி விஜய் நடித்துள்ள 'வேலாயுதம்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. |
விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்ஷிகா மொத்வானி இருவரும் நடித்துள்ளார்கள். முக்கியமான வேடத்தில் நடித்துள்ள சரண்யா மோகனை இயக்குனர் ராஜா இப்படத்தின் மூன்றாவது நாயகி என்று கூறியுள்ளார். படத்தில் வரும் கொமெடி, வில்லன் கதாபாத்திரங்களில் எல்லோரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும், தொழில்நுட்பக்கலைஞர்கள் கடுமையாக உழைத்திருப்பதையும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயம் ராஜா குறிப்பிட்டுள்ளார். என் கேரியரில் இது முக்கியமான இடம், இது எனக்கு ஸ்பெசலான தீபாவளி, விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் எனக்கு ஏழாவது படம். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்த படம் பெரிய படமாக அமைந்துள்ளது. மூலக்கதையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு இப்படத்தை பண்ணியிருக்கேன். இப்படத்தை பெரிய படமாக்க திரைக்கதையில் கவனம் செலுத்தி, அக்கறை காட்டி உழைத்துள்ளோம். தயாரிப்பாளார் ஒஸ்கார் ரவிச்சந்திரனின் பங்களிப்பில் பிரமாண்டமான படமாக 'வேலாயுதம்' உருவாகியுள்ளது. வீரியமான கமெர்சியல் படமாக வேலாயுதம் வந்துள்ளது. ஜெயம் ரவியை வைத்து நான் வெற்றி படங்களை கொடுத்த போது,'எனக்கு ஒரு ஹிட் படம் கொடுங்கள்'என்று கேட்டார் விஜய். அதனால் 'வேலாயுதம்' படத்தை இயக்கினேன். இது விஜய்க்கு 'மாஸ்' ஹிட் படமாக இருக்கும். பெரிய படஜெட் படங்கள் தற்போது அணிவகுத்து நிற்கின்றன. எத்தனை போட்டிகள் வந்தாலும் 'வேலாயுதம்' வெற்றி பெறும். எத்தனை 'ரா.ஒன்' வந்தாலும், எத்தனை (ஏழாம்)அறிவு வந்தாலும், வேலாயுதம் தனித்து நிற்கும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் வேலாயுதம் படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா. வேலாயுதம் படத்துக்கு பிறகு, கல்பாத்தி அகோரம் படக்கம்பெனி தயாரிப்பில் புது படத்தை இயக்கும் ராஜா, அடுத்த கட்ட முயற்சியாக 'தேசிய விருதுக்காக' உழைக்க திட்டமிட்டுள்ளார். |
For Thala Thalapathy Fans
Saturday, October 22, 2011
வேலாயுதம் படம் வெற்றி பெறும்: ஜெயம் ராஜாவின் நம்பிக்கை..............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment