ரா ஒன்னில் சிட்டி ரோபோவாக ஒரு காட்சியில் நடித்து திரும்பியிருக்கும். ரஜினிக்காக, அந்தப் படத்தை பார்க்க தயாராகி விட்டார்கள் ரஜினியின் ரசிகர்கள். ஆனால் இளைய தளபதி விஜய், சிட்டி ரோபோ கெட்-அப்பில் நடித்திருகிறார் என்பதுதான் கோலிவுட்டில் அணல் பறக்கப் போகும் செய்தி! எஸ்! ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் நண்பன் படத்தில் இடம்பெரும் ஒரு பாடல் காட்சியில்தான் சிட்டி ரோபோ தோற்றத்தில் ஒரு சரணம் முழுவதும் விஜய் தோன்ற இருக்கிறாராம்.
இதை விட இன்னும் ஹாட்டான ஒரு கெட் – அப்பையும் போடுகிறார் விஜய். அதேபாடலில் இந்தியன் கமலாகவும் கெட்-அப் போடுகிறாராம். இதுவரை மாறுபட்ட தோற்றங்கள் குறித்து விஜய் யோசித்ததே இல்லை. இதற்குக் காரணம் விஜயின் முகம் மிக இளமையன தோற்றத்துடன் இருகிறது என்று அவரது அப்பா சொல்லி வந்தார். ஆனால் விஜய் முதல் முறையாக சிக்ஸ் பேக் உடலுடன் வேலயுதம் படத்தில் நடித்திருகிறார்.
தற்போது நண்பனில் சோதனை முயற்சியாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ, இந்த இரண்டு கெட் அப்புகளையும் நாம் பாடல்காட்சிகளுக்கு பயன்படுத்தலாம் என்று இயக்குனர் ஷங்கர் சொன்ன போது மறுப்பு ஏதும் சொல்ல வில்லையாம் விஜய்! இந்த இரண்டு கெட் அப்புகளையும் ரசிகர்கள் திரையில் மட்டுமே கண்டு களிக்க முடியும். புகைபடத்தை கூட வெளியிடப் போவதில்லையாம்! ஷங்கர் விவரமான ஆளுதான்!
No comments:
Post a Comment